Free Space

மடவளையில் A/L விஞ்ஞான, கணித மாணவர்களுக்கான விசேட கல்வி வழிகாட்டல் (ஓர் அறிமுகம்)



கண்டி - மடவளை பஸாரைச் சேர்ந்த ஒரு சகோதரரின் முயற்சியால், முன்னாள் அதிபர், ஆசிரியர்கள், பொதுநபர்கள் என பல தரப்பினரையும் உள்வாங்கி, #EDF - Madawala Bazaar (Educational Development Foundation) என்றொரு நிர்வாக அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

பெருந்தொகைப் பணத்தை செலவழித்து, ஆண், பெண் என தனியான ஹாஸ்டல்கள் அமைத்து, நாட்டின் பல பகுதிகளிலும் இருந்து சுமார் 50 மாணவர்கள் வரை இணைத்து, 2017 ஜனவரி முதல் ஒரு Science Project திட்டம் கொண்டு வரவுள்ளனர்.
இன்ஷா அள்ளாஹ்
______

முதற்கட்டமாக - GCE A/L Bio & Maths பிரிவுகளை ஆரம்பித்து, மடவளை மதீனா கல்லூரியில் அவர்களை அனுமதித்து, தரமான முறையில் அம்மாணவர்களை வழிநடத்த திட்டமிட்டுள்ளனர்.

உயர்தர கல்வியில் "வழிகாட்டல்" என்பது மிக முக்கியமான ஒரு அங்கமாகும். ஏனெனில், சிறந்த O/L முடிவுகளை பெற்ற எம்மில் பலர், A/L இல் முறையான வழிகாட்டல் (Guidance) கிடைக்காமையால், தம் வாழ்வின் லட்சியங்கள் சிதைந்து, திசைமாறி, இப்போது இந்த செய்தியை வாசித்துக் கொண்டிருக்கலாம்.

எனவே, மிகத்தரமான ஆசிரியர்களைக் கொண்டு, அங்கே பாடங்கள் நடத்தி, ஒவ்வொரு பாட அலகின் முடிவிலும் அது பற்றி முந்திய வருட (past papers) பரீட்சைகளில் வந்த வினாக்களை உடனுக்குடன் வெற்றிகரமாக பதிலளிக்கக்கூடிய வகையில் அம்மாணவர்களை பயிற்றுவிக்கவுள்ளனர்.
இன் ஷா அள்ளாஹ்.
___

இந்த Science Project Scheme குறித்த மேலதிக தகவல்கள், இனிவரும் நாட்களில் வெளியிடப்படும்.

ஆர்வமுள்ளவர்கள் யாரும் இதுபற்றி தொடர்புகொள்ள விரும்பின்...
0776 450 858 என்ற இலக்கத்துடனோ,
WhatsApp மூலமோ, தொடர்பு கொள்ளுமாறும்,
தமக்கு தெரிந்த இம்முறை O/L எழுதும் மாணவர்களுக்கு இந்த தகவலை எத்திவைக்குமாறும் EDF அமைப்பினர் கேட்டுக்கொள்கின்றனர்.

தகவல் - Inshaaf (செயலாளர்)
மடவளையில் A/L விஞ்ஞான, கணித மாணவர்களுக்கான விசேட கல்வி வழிகாட்டல் (ஓர் அறிமுகம்) மடவளையில் A/L விஞ்ஞான, கணித மாணவர்களுக்கான விசேட கல்வி வழிகாட்டல் (ஓர் அறிமுகம்) Reviewed by Madawala News on 11/17/2016 08:07:00 PM Rating: 5