Ad Space Available here

வடக்கு குழுக்களுடன் கோத்தாவுக்கு தொடர்புள்ளது...யுத்­தத்தின் பின்னர் வடக்கு, கிழக்கில் இயங்­கிய குழுக்­க­ளுக்கு முன்னாள் பாது­காப்பு செய­லா­ளர் கோத்தபாய ராஜபக்ஷவே ஆயுதங்களை வழங்­கினார். முன்­னைய ஆட்­சியில் தான் இரா­ணு­வத்தை அர­சி­ய­லாக்­கினர்.

ஆகவே, ஆவா குழுவின் பின்­ன­ணி­யிலும் இவர்கள் இருக்க வாய்ப்­புக்கள் உள்­ளன. இந்த விடயம் தொடர்பில் ஆராய்ந்து சரி­யாக விசா­ர­ணை­களை மேற்­கொள்ள வேண்டும் என பீல்ட் மார்ஷல் சரத் பொன்­சேகா தெரி­வித்தார்.

இன்று விசேட தேவை­யு­டைய இரா­ணுவ வீரர்கள் தொடர்பில் குர­லெ­ழுப்பும் எவரும் அன்று எனக்­காகக் குர­லெ­ழுப்­ப­வில்லை என வும் அவர் குறிப்­பிட்டார். பீல்ட் மார்ஷல் சரத் பொன்­சேகா நேற்று முன்­தினம் கொழும்பில் கலந்­து­கொண்ட நிகழ்­வொன்றின்

 பின்னர் ஊட­கங்­க­ளுக்கு கருத்துத் தெரி­விக்கும் போதே மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். அவர் மேலும் கூறு­கையில்,  நல்­லாட்சி அர­சாங்கம் நாட்டை சரி­யான பாதையில் கொண்டு செல்­கின்­றது என்­பதில் சந்­தேகம் இல்லை. கடந்த கால நிலை­மை­களை விடவும் இப்­போ­தைய நிலை­மைகள் மிகச்­ச­ரி­யா­கவே முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன.

எனினும் இரா­ணுவ வீரர்­களை தண்­டிப்­ப­தா­கவும் அவர்­களை  தாக்­கு­வ­தா­கவும் கூறி நாட்டில் குழப்­பங்­களை ஏற்­ப­டுத்த ஒரு­சிலர் முயற்­சித்து வரு­கின்­றனர். விசேட தேவை­யு­டைய இரா­ணுவ வீரர்­களை தாக்­கி­ய­தாக கூறு­வதை இன்று தவ­றாக முன்­னெ­டுத்து விமர்­சிக்­கப்­பட்டு வரு­கின்­றது.

விசேட தேவை­யு­டைய இரா­ணுவ வீரர்­களின் ஆர்ப்­பாட்­டத்தில் தண்ணீர் தாரை மேற்­கொள்­ளப்­பட்­டது உண்மை. ஆனால் பொலிஸார் விசேட தேவை­யு­டைய இரா­ணுவ வீரர்கள் எவ­ரையும் தாக்­க­வில்லை. உண்­மையில் இந்த ஆர்ப்­பாட்­டத்தின் பின்­ன­ணியில் பொது எதி­ரணி உறுப்­பி­னர்கள் சிலர் இருந்து செயற்­பட்­டனர் என்­பது அனை­வ­ருக்கும் தெரியும். அவ்­வாறு இருக்­கையில் இரா­ணுவ வீரர்­களை தூண்­டி­விட்டு அதன் மூலம் அர­சியல் வாய்ப்­பு­களை பெற்­றுக்­கொள்ள முயற்­சிக்கும் நட­வ­டிக்­கை­யா­கவே இவற்றை கருத வேண்டும்.

மேலும் விசேட தேவை­யு­டைய இரா­ணுவ வீரர்­களின் கோரிக்­கைகள் தொடர்பில் அர­சாங்கம் சகல நட­வ­டிக்­கை­க­ளையும் எடுப்­ப­தாக கூறி­யுள்­ளது. அவர்­களின் நியா­ய­மான கொரி­கைக்­ளுக்கு நாம் எதிர்ப்பு தெரி­விக்­க­வில்லை. ஆனால் இன்று அவர்கள் தொடர்பில் குர­லெ­ழுப்பும் எவரும் என்று எனக்­காக குர­லெ­ழுப்­ப­வில்லை. நானும் விசேட தேவை­யு­டைய இரா­ணுவ வீர­னா­கவே இருந்தேன்.

எனக்கும் உடலில் பல காயங்கள் உள்­ளன. என்னை சிறையில் அடைத்து எனது பத­வி­க­ளையும் வாய்ப்­பு­க­ளையும் பறித்து வேடிக்கை பார்த்­தனர். அப்­போ­தெல்லாம் இரா­ணு­வத்தின் உரி­மைகள் அவர்­களின் மன­நி­லையை தெரிந்­து­கொள்­ளாது இருந்­த­வர்கள் இன்று அர­சி­ய­லுக்­காக நியாயம் கதைக்க வரு­கின்­றனர். இவர்கள் மேற்­கொள்ளும் நட­வ­டிக்­கை­களை கருத்தில் கொண்டு நாம் செயற்­ப­ட­வில்லை.

 ஆனால் இரா­ணுவ வீரர்­க­ளுக்­கான பாது­காப்­பையும் அவர்­களின் கோரிக்­கை­க­ளையும் நாம் கவ­னத்தில் கொண்டு செயற்­ப­டுவோம். அடுத்த ஆண்டு பெப்­ர­வரி மாதத்தில் இந்த பிரச்­சி­னைகள் தீர்வு காணப்­படும். அது­வ­ரையில் அனை­வரும் அமை­தி­காக்க வேண்டும்.

மேலும் ஆவா குழுக்­களை பற்றி பேசு­கின்­றனர். இந்த குழுவின் பின்­னணி தொடர்பில் கருத்­துக்கள் முன்­வைக்­கப்­ப­டு­கின்­றன. ஆனால் இதன் பின்­ன­ணியில் இரா­ணுவம் இல்லை என்­பதை என்னால் உறு­தி­யாக தெரி­விக்க முடியும். இப்­போது இதை இயக்­கு­வது இரா­ணுவம் இல்லை.

ஆனால் அன்று யுத்தம் முடி­வுக்கு வந்த பின்னர் வடக்கு கிழக்கில் இயங்­கிய சில குழுக்­க­ளுக்கு ஆயுதம் வழங்கி அவர்­களை அடி­யாட்­க­ளாக வைத்­தி­ருந்­தது முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்தபாய ராஜபக்ஷ என்­பது எனக்கு தெரியும். அன்று வடக்கு கிழக்கில் புலி­க­ளுடன் தொடர்­பு­பட்­டி­ருந்த நபர்­களை பாது­காத்து அவர்­க­ளுக்கு ஆயு­தங்­களை வழங்­கி­யி­ருந்தார்.

ஆகவே ஆவா குழுவின் பின்­ன­ணி­யிலும் இவர்கள் இருக்க வாய்ப்­புகள் உள்­ளன. இந்த விடயம் தொடர்பில் ஆராய்ந்து சரி­யாக விசா­ர­ணை­களை மேற்­கொள்ள வேண்டும். உண்­மையில் இவர்கள் அதன் பின்­ன­ணியில் இருப்பார்கள் எனின் அவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நாட்டின் தேசிய பாதுகாப்பு விடயங்களை அரசியல் சுயநலன்களுக்காக பயன்படுத்தக் கூடாது. அன்றும் இவர்கள் இராணுவத்தை வைத்து அரசியல் செய்தனர். இன்றும் இராணுவத்தை வைத்து அரசியல் செய்ய முயற்சிக்கின்றனர். ஆனால் அரசங்கம் அதற்கு ஒருபோதும் இடமளிக்காது என்றார்.
வடக்கு குழுக்களுடன் கோத்தாவுக்கு தொடர்புள்ளது... வடக்கு குழுக்களுடன் கோத்தாவுக்கு தொடர்புள்ளது... Reviewed by Madawala News on 11/15/2016 10:21:00 AM Rating: 5