அரச வைத்திய சாலையின் சிறந்த மாற்றம்.. கொழும்பு அரச மருத்துவ மனையில் எனக்கு கிடைத்த அனுபவம்.



பொதுவாக அரச வைத்தியசாலைகள் என்றால் அழுக்கு சிறைந்த கடு கடுத்த தாதிமார்கள் கவனம் செலுத்தாத வைத்தியர்கள் என்றே எம் மனதில் பதிவாகி இருக்கிறது. ஏன் இன்னும் சில ஊர்ளில் இவ்வாரான வைத்திய சாலைகள் இருக்கத்தான் செய்கிறது.

அதற்கு எடுத்துக்கட்டக கொழும்பு அரச மருத்துவ மனை புதியகட்டம் மிக சிறப்பாக இயங்குகிறது.சுத்தம் உட்பட தாதிமார்களின் கவனிப்பு வைதியர்களின் கண்காணிப்பு மிக சிறப்பாக இருக்கிறது.

இங்கு உள்ளதாதி மார்களின் உன்னத கவனிப்பை நான் கண்கூடக தொடர்ந்து அவதானித்து வந்தேன் .ஒரு பாட்டி இரவு ஒன்பது மணியளவில் தன்னை அமர்த்தி வைக்குமாறு கேட்டார் ஆனால் அந்த பாட்டியால் எழுந்து உட்டாரகூட முடியாமல் இருந்தது .

அந்த தாதியோ தலையணைகளை அடுக்கி அவர் சொல்லவதை  போல் எல்லாம்  சலைக்காமல் செய்தார் .இந்த நிகழ்வு என்னை மிக நெகிழவைத்தது.

அது மட்டும் அல்லாமல் இரவில் கூட வைத்தியகள் மணிக்கு ஒருதடவை வந்து வார்வையிடுகிறார்கள்.துப்பரவு பணியாளர்களில் ஒரு சிலர் இன்னும் பழைய கடு கடுப்பில் இருந்தாலும் இன்னும் பலர் அன்பாக நடக்கிறார்கள்.

 இயலாத நோயாளிகளுக்கும் மாற்றி அவர்களை கழுவி விடுதல் உட்பட குறிப்பாக 56 A ,56B கட்டடத்தில் மிக சிறப்பாக நடக்கிறது ஒரு தணியார் வைத்தியசலைபோலவே இப்போது இருக்கிறது கொழும்பு அசர மருத்வமனை போலவே இருக்கிறது.

இங்கு உள்ள குறைகள் என்றால்

இயங்கு ஏணி (லிப்ட்)இரண்டுதான் இருக்கிறது. இதில் நோயாளிகளை பார்வை இட வருபவார் பல அசெளகரியங்கள் ஏற்படுகிறது. காரணம் குறிப்பிட்ட நேரமே பார்வையாளர்களுக்கு வழங்கப்படுகிறது.

அப்போது அதில் வைத்தியசலை உபகரணங்கள் வைத்தியர்கள் செல்லும் போது பார்வையாளர்களுக்கு நேரம் குறைகிறது.மோலும் பாதுகாப்பு ஊழியர்கள் சற்று நாகரிகமான முறையில் நடப்பார்களாயின் இன்னும் சிறப்பாக இருக்கும்.

மேலும் இலங்கயில் உள்ள சகல வைத்திய சாலைகலும் கொழும்பில் இன்னும் திரித்தியமைக்கப்படாத வைதியசலைகளும் அரசு இதை போல் சிறப்பாக நடாத்த முட்பட்டால் மிக சிறப்பாக இருக்கும்.இங்கு எந்த பாகுபாடும் இல்லை ஒரு ஐக்கிய இலங்கையை இங்கு காணலாம்.

எது எப்படியாயினும் இவர்களின் சேவை பாராட்டத்தக்கது.

சிமாரா அலி
"ஊதாப்பூ"
அரச வைத்திய சாலையின் சிறந்த மாற்றம்.. கொழும்பு அரச மருத்துவ மனையில் எனக்கு கிடைத்த அனுபவம். அரச வைத்திய சாலையின் சிறந்த மாற்றம்.. கொழும்பு அரச மருத்துவ மனையில் எனக்கு கிடைத்த அனுபவம். Reviewed by Madawala News on 11/19/2016 10:34:00 PM Rating: 5