மஹிந்த தலை­மை­யி­லான புதிய கட்­சி சிறு­பான்மை மக்களின் பிரச்­சி­னைகளை தீர்த்துக் கொடுக்கவே ஆரம்பிக்கபட்டது.



முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த தலை­மை­யி­லான புதிய கட்­சி­யான இலங்கை பொது­ஜன முன்­னணி இந்­நாட்டு சிறு­பான்மை இன மக்­களின் பிரச்­சி­னைக்­கான தீர்­வு­களை பெற்­றுக் ­கொ­டுக்கும் என அக்­கட்­சியின் தவிசாளரும் முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் கூட்டு எதி­ர­ணியின் முக்­கி­யஸ்­த­ரு­மான ஜீ.எல்.பீரிஸ் கேச­ரிக்குத் தெரி­வித்தார்.

புதிய கூட்­ட­மைப்­புடன் புதிய கட்­சிகள் இணைந்து கூட்­ட­மைப்­பாக உரு­வாக உள்­ளமை தொடர்பில் வின­வி­ய­ போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரி­விக்­கையில், நாட்டின் தற்­கால அர­சியல் போக்­குகள் எவ­ராலும் ஏற்­றுக்­கொள்ள கூடி­ய­தாக இல்லை.

எனவே புதிய மாற்றம் ஒன்று நிகழ்த்­தப்­பட வேண்­டி­யது காலத்தின் தேவை­யா­க­வுள்­ளது. அத­னா­லேயே தற்­போது புதிய மாற்­றத்­திற்கு அடித்­த­ள­மிடும் வகையில் புதிய கட்­சியை நாங்கள் உரு­வாக்­கி­யுள்ளோம்.

அத­னை­ய­டுத்து இன்று பல­த­ரப்­பு­க்க­ளு­டனும் பேச்­சு­வார்த்­தைகள் தீர்க்­க­மாக முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன. அத்­துடன் இந்தக் கட்­சியின் கத­வுகள் சக­ல­ருக்கும் திறந்­து­வி­டப்­பட்­டுள்­ளன. குறிப்­பாக ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்சி உறுப்­பி­னர்­களை பாது­காக்கும் ஒரு மைய­மா­கவே இந்தக் கட்சி அமையும்.

 இக்­கட்­சி­யுடன் அண்­மையில் மலை­யக தமிழ் கட்சி ஒன்று இணைந்­துக்­கொண்­டது. வெகு விரைவில் இன்னும் பல முஸ்லிம் அமைப்­புக்­களும் இணைந்­துக்­கொள்ளும். எனவே இக்­கட்சி சிறு­பான்மை மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்­வு­களை பெற்­றுத்­த­ரக்­கூ­டிய தீர்வு திட்­டங்­களை கொண்­ட­தா­கவும் இருக்கும்.

 எனவே சக­ல­ருக்­கு­மான கட்­சி­யாக புதிய கட்சி இருக்கும் அத்­துடன் தற்­போது எம்­முடன் புதிய கட்­சிகள் இணைந்தால் அவர்­க­ளுடன் இணைந்து புதிய கூட்­ட­மைப்­பாக பய­ணிக்கத் தயா­ராக உள்ளோம் என்றார்.

அதே­நேரம் நேற்­றைய தினம் தேசிய நூல­கத்தின் கேட்­போர்­கூ­டத்தில் இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்­து­ கொண்டு உரை­யாற்­றிய முற்­போக்கு தேசிய ஒன்­றி­யத்தின் தலைவர் அனு­ருத்த பொல்­கம்­பொல தெரி­விக்­கையில், தற்­போது பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஜீ.எல்.பீரிஸ் தலை­மையில் புதிய கட்சி உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது.

இந்தக் கட்­சியில் தற்­போது எமது நாட்­டிற்கு ஏற்ற புதிய பொரு­ளா­தாரத் திட்­டங்கள்,சர்­வ­தேச உற­வு­க­ளுக்­கான திட்­டங்கள், இந்­நாட்டு மக்கள் சக­லரதும் உரி­மை­களை உறு­திப்­ப­டு­த்து­வ­தற்­கான திட்­டங்கள் என்­பன வகுக்­கப்­பட்­டுள்­ளன.

அதே­நேரம் இந்த கட்­சி­யி­லி­ருக்கும் ஒருவர் நாட்­டிற்கு பங்கம் ஏற்­ப­டுத்தும் வகை­யி­லான செயற்­பா­டு­களை முன்­னெ­டுக்கும் பட்­சத்தில் அவர்­களை விலக்கும் உரிமை கட்­சியின் அங்­கத்­த­வ­ருக்கே வழங்­கப்­பட்­டுள்­ளது.

புதிய கட்­சி­யுடன் 17 புதிய கட்­சி­களை இணைத்­துக்­கொண்டு கூட்டமைப்பாக பயணிப்பதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தியாகியுள்ளன. கூட்டமைப்பாக பயணிப்பதற்கான திகதியும் அறிவிக்கப்படும். இந்நிலையில் இலங்கை பொதுஜன முன்னணியை கூட்டமைப்பாக இணைத்துக்கொண்டு அக்கட்சியை கூட்டமைப்பாக பலப்படுத்தி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவுடன் பயணிப்போம் என்றார்.

மஹிந்த தலை­மை­யி­லான புதிய கட்­சி சிறு­பான்மை மக்களின் பிரச்­சி­னைகளை தீர்த்துக் கொடுக்கவே ஆரம்பிக்கபட்டது. மஹிந்த தலை­மை­யி­லான புதிய கட்­சி சிறு­பான்மை மக்களின்  பிரச்­சி­னைகளை தீர்த்துக் கொடுக்கவே ஆரம்பிக்கபட்டது. Reviewed by Madawala News on 11/05/2016 10:50:00 AM Rating: 5