Ad Space Available here

நாம் பாயில் இருந்துகொண்டு அரசியல் செய்திருக்கிறோம்.


(பிறவ்ஸ் முஹம்மட்)

இஸ்லாமிய தமிழ் இலக்கிய ஆராய்ச்சி மாநாடுகளை ஒவ்வொரு வருடமும் அரசாங்கம் உத்தியோகபூர்வமாக நடாத்தவேண்டும். முஸ்லிம், சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் முன்னோர்களின் இஸ்லாமிய தமிழ் இலக்கிய படைப்புகளை கொண்டாடும் வகையில் வருடாவருடம் இதனை நடாத்த முன்வரவேண்டும் என்று அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.


இஸ்லாமிய தமிழ் இலக்கிய பொன்விழா நிகழ்வின் இறுதி நிகழ்வாக, மருதமுனை அல்;மனார் மத்திய கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற எம்.எச்.எம். அஷ்ரபின் நான் எனும் நீ| கவிதை நூல் மீள் வெளியீட்டு விழாவில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கூறியதாவது,

எங்களுடைய தனித்துவ நிகழ்வுகளை கொண்டாடுகின்ற ஒரு நிகழ்வாகத்தான் மருதமுனையில் இந்த இஸ்லாமிய தமிழ் இலக்கிய பொன்விழாவை நடாத்துகின்றோம். 1966ஆம் ஆண்டு நடந்த இந்நிகழ்வு தமிழ்கூறும் இஸ்லாமிய உலகின் பல்வேறு பாங்களில் வேண்டுமென்றே இருட்டடிப்பு செய்கின்ற மாதிரியான நிலவரம் உருவாகியிருப்பதை மறுதலிப்பதற்கான ஒரு நிகழ்வாகத்தான் மருதமுனையில் இதனை நடாத்தியிருக்கிறோம். அதன் ஒரு அங்கமாகவே பொன்விழா நினைவுத் தூபியையும் அங்கு அமைத்துள்ளோம்.

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் இஸ்லாமிய இலக்கியத்துக்கு தனியானதொரு அலகை ஆரம்பித்து படிப்படியாக தனியானதொரு பீடத்தை உருவாக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அதற்கான ஆரம்ப முயற்சிகளை முன்னெடுப்பது தொடர்பில் மொழித்துறை தலைவர் பேராசிரியர் றமீஸ் அப்துல்லாவுடன் கலந்துரையாடியுள்ளேன். அதனை முன்னெடுக்கும் பணியை காலக்கிரமத்தில் கட்டாயம் செய்து முடிப்போம்.

நான் சாதரண தரத்தில் கல்வி பயிலும்போது இஸ்லாமிய இலக்கியத்தை ஒரு பாடமாக எடுத்தேன். கலாநிதி பதியுதீன் மஹ்மூதினால் கொண்டுவரப்பட்ட அந்த இஸ்லாமிய இலக்கியம், தற்கால பாடத்திட்டத்திலும் கொண்டுவரப்பட வேண்டும். இதுகுறித்து சம்பந்தப்பட்டவர்களுடன் பேசவுள்ளோம். இந்த மூன்று பிரேரணைகளையும் நாங்கள் பொன்விழா பிரகடனங்களாக முன்மொழிந்துள்ளோம்.

முஸ்லிம்களின் நுண்கலையை ஒரு தனிப்பாடமாக செய்யவேண்டும் என்ற ஆர்வம் றமீஸ் அப்துல்லாவுக்கு இருக்கின்றது. கிராமத்து இலக்கியம், கலாசார நிகழ்வுகளுக்கான ஒதுக்கீடுகள் இடம்பெறவேண்டும். அதற்கான முன்னாயத்தங்கள் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.
மர்ஹூம் அஷ்ரபின் ஞாபகார்த்தமாக அடுத்தவருடம் செப்டம்பர் 16ஆம் திகதி சர்வதேச அல்குர்ஆன் ஆராய்ச்சி மாநாட்டை கொழும்பில் வெகு விமர்சையாக நடாத்துவதற்கு தீர்மானித்துள்ளோம். அவரது நினைவாக இவ்வருடம் ஷஅழகிய தொனியில் அல்குர்ஆன்| என்ற கிராஅத் போட்டியையும், அவர் எழுதிய ஷநான் எனும் நீ| கவிதை நூலையும் மீள் வெளியீடு செய்துள்ளோம்.

அம்மன் கோயில் வீதியிலிருந்த மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரபின் வீடு திக்கிரையாக்கப்பட்டபோது அவர் ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபாவின் கொழும்பு இல்லத்தில் 1985ஆம் ஆண்டு தஞ்சமடைந்திருந்தார். அச்சமயத்தில் நான் பாயிஸ் முஸ்தபாவின் இளம் சட்ட உதவியாளராக இருந்தபோது, அஷ்ரபுடன் எனக்கு ஏற்பட்ட நெருக்கம் காரணமாக இப்போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொறுப்புகளை சுமந்துகொண்டிருக்கின்றேன்.

மர்ஹூம் அஷ்ரப் அகதி வாழ்க்கை போன்றதொரு வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருந்தார் என்று சொல்லுமளவுக்கு அவருடைய அரசியல் வாழ்க்கையும், நிஜ வாழ்க்கையும் காணப்பட்டது. பிரேமதாசவின் ஆட்சிக்காலத்தில் தனக்கென ஒரு வீடு இல்லாமல் கசாப்பர் வீதியிலுள்ள பசீல் ஏ. மஜீத் இல்லத்தில் அஷ்ரப் தரையில் பாயில் படுத்துக்கொண்டிருந்தார்.

அந்த பாயில் இருந்துகொண்டு நாங்கள் அரசியல் செய்திருக்கிறோம். தலைவருடைய வாரிசுகள் என்றவகையில் அவருடைய அரசியல் அபிலாஷைகளை முன்னெடுத்துச் செல்லவேண்டிய தார்மீக பொறுப்பு எங்களிடம் இருக்கிறது.
நாம் பாயில் இருந்துகொண்டு அரசியல் செய்திருக்கிறோம்.  நாம் பாயில் இருந்துகொண்டு அரசியல் செய்திருக்கிறோம். Reviewed by Madawala News on 11/29/2016 04:27:00 PM Rating: 5