Free Space

தேர்தல் தோல்வியை நான் எதிர்பார்க்கவில்லை. மனவேதனை அடைந்துள்ளேன்.



தேர்தல் தோல்வியை நான் எதிர்பார்க்கவில்லை. மனவேதனையை ஏற்படுத்தியுள்ள இந்த தோல்விக்காக நான் உங்களிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் என ஹிலாரி கிளின்டன்  சற்றுமுன்னர்  உருக்கமாக தெரிவித்தார்.

தேர்தலில் தோல்வியை தழுவிய கிளின்டன், நியூயோர்க் நகரில் சற்றுமுன்னர் தனது ஆதரவாளர்கள் முன்னிலையில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்டு டிரம்பிற்கு தனது வாழ்த்துகள் தெரிவித்து கொள்கிறேன்.

 டொனால்டு டிரம்ப் ஜனாதிபதி என்பதை நீங்கள் அனைவரும் திறந்த மனதுடன் ஏற்றக் கொள்ள வேண்டும்

நாட்டிற்காக டிரம்புடன் இணைந்து பணியாற்ற நான் தயாராக உள்ளேன்.

தேர்தலில் தோல்வியுற்றது வலி தான், இந்த வலி இன்னும் சில காலங்கள் இருக்கும். இதற்காக நான் உங்களிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்.

 நாட்டை தொடர்ந்து முன்னேற்ற பாதையில் கொண்டுசெல்வதே குடிமக்களின் கடமை.

மேலும் தேர்தலில் தனக்கு ஆதரவாக இருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
தேர்தல் தோல்வியை நான் எதிர்பார்க்கவில்லை. மனவேதனை அடைந்துள்ளேன். தேர்தல் தோல்வியை நான் எதிர்பார்க்கவில்லை. மனவேதனை அடைந்துள்ளேன். Reviewed by Madawala News on 11/10/2016 06:40:00 AM Rating: 5