Ad Space Available here

சிறுவனின் மரணத்தைத் தொடர்ந்து...காய்ச்சலால் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கல்முனை அஷ்ரப் வைத்தியசாலையில் (AMH) அனுமதிக்கப்பட்டிருந்த சிறுவனின் உடல் நிலை மோசமான நிலைக்கு தள்ளப்படுவதற்கு யார் காரணம் என்பதை முன்னரே பதிவேற்றியிருந்தோம்.


நேற்று இரவு 8.00 மணி இருக்கும். சிறுவனின் உடல் நிலை குறித்து விசாரிப்பது தமது வழக்கம். அதே போன்று நேற்றும் விசாரித்த போது சிறுவனின் தந்தை அளித்த பதிலில் ஒரு பெற்றோராய் அதன் தாக்கத்தை உணரவைத்தது,


”மகனின் உடல் நிலை எப்படி இருக்கிறது என கேட்டு முடிக்கும் முன்னரே ததும்பிய குரலில் இப்போதுதான் மகனின் உயிர் பிரிந்தது, அதற்கான காரியங்களை முறையாக ஏற்பாடு செய்யுங்கள் ! ”பேசுவதற்கு இனி ஒன்றும் இல்லை என்பதை புரிந்து அற்கான ஒழுங்குகளை மேற்கொண்டோம். இன்று காலை (7.30 மணிக்கு) சிறுவனின் உடல் அக்பர் பள்ளி மைய்யவாடியில் அடக்கம் செய்யப்பட்டது.


சிறுவனின் உடலை பார்ப்பதற்காக ஊரில் உள்ள அனைவருமாக ஆண்கள், பெண்கள், ஊர்ப் பிறமுகர்கள், சிறுவர்கள், பாடசாலை மாணவர்கள், மத்ரஸா மாணவர்கள் என பார்வையிட வந்தனர். பொதுவாக எந்தவொரு ஜனாஸாவுக்கும் இவ்வளவு சன நெறிசல் இடம்பெறுவது கிடையாது. சிறுவனை பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தையும் தாண்டி வைத்திய அதிகாரிகளின் மீது கொண்ட ஆத்திரத்தாலும், சிறுவன் மீது கொண்ட பரிதாபமுமே முக்கிய காரணிகளாக இருந்தது.


ஒரு குழந்தை பிறந்து அதனை வளர்த்தெடுத்து சுறுசுறுப்பாய் திரிவதில் இன்பமடைந்து, எதிர்காலத்தை நினைத்து பூரிப்படைந்து, நகர்ந்து செல்லும் வயதுக்காக அவர்களுக்காக உழைத்து முழு வாழ்க்கையில் பாதிக்கு மேல் குழந்தைகளுக்காக செலவழிக்கும் பெற்றோரின் மனக் கவலையை தோற்றுவித்த சன்டாளன்களை இனிமேலும் சும்மா விடக்கூடாது.
மறதியால் அனைத்து விடயங்களையும் மறக்கும் நிலையை குறித்த சில வைத்திய அதிகாரிகள் அறிந்ததால்தான் இவர்களின் சலசலப்புக்களை கொஞ்ச காலத்தால் மறப்பார்கள், இவர்களால் என்னதான் செய்திட முடியும் என்றெண்ணி மரணப் பட்டியலை இன்னும் அதிகமாக்கிக் கொண்டே செல்வார்கள். சில காரியங்களை இவ்வதிகாரிகள் கன கட்சிதமாக பாதிக்கப்பட்டவர்களை ஏமாற்றும் வகையில் மேற்கொண்டு சட்ட நடவடிக்கைகள் எடுக்காத வகையில் அதிகாரிகளுக்கு சார்பாக சில ஆவணங்களை திரட்டுவதிலேயே கண்ணும் கருத்துமாக செயல்படுவார்கள். இதனால்தான் இவ்வளவு காலமாக இச்சில அதிகாரிகளால் மேற்கொள்ளப்படும் அநியாயங்களுக்கெதிராக எவ்வித உரிய நடவடிக்கைகளும் மேற்கொண்டதாக காணமுடிவதில்லை.


இவர்களின் இச்சூழ்சிகளுக்கு இறைவன் இச்சிறுவனின் மரணத்தின் மூலம் முற்றுப்புள்ளி வைக்கும் அளவுக்கு முறையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மடுவத்தை தோண்டும் படலத்தில் பல அதிர்ச்சிகரமான உண்மைகளும் கசிய தொடங்குகிறது. இதை பகிரங்கப்படுத்தினால் எது வேண்டுமானாலும் நடக்கலாம். அந்தளவுக்கு பெரும் பெரும் சக்திகளாக கருத்தப்படுபவைகள் பின்னணியில் நின்று செயற்படுவதை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது.


மரணித்த சிறுவன் சமுதாயத்தின் விடிவு காலமாக இருப்பான் என்பதை அறிந்து கொண்டோம். அவனுடைய மறுமை வெற்றிக்காய் பிரார்த்திப்பதோடு பெற்றோருக்கும் இதன்மூலமாக சுவர்க்கத்தை அடைய பிரார்த்திப்போம்.

-Jiffry Mohamed -
சிறுவனின் மரணத்தைத் தொடர்ந்து... சிறுவனின் மரணத்தைத் தொடர்ந்து... Reviewed by Madawala News on 11/13/2016 12:04:00 PM Rating: 5