ஒரு மரணம் விட்டுச்சென்ற செய்தி.....



-Safwan Basheer-

நாசாவில்" துப்புரவுத் தொழில் செய்துகொண்டிருந்த ஒரு பெண்ணிடம் ஒரு செய்தியாளர் "நீ இங்கே என்ன செய்கிறாய்" என்று கேட்டார்.

அதற்கு அந்தப் பெண் "நான் வின்வெளிக்கு
வின்களங்களை அனுப்பும் ஆராய்ச்சியாளர்களுக்கு உதவி செய்துகொண்டு இருக்கிறேன்" என்றாள்

உண்மையி்ல் மிகப்பெரிய சாதனைகளுக்குப்பின்னால் இப்படி யாருக்கும் தெரியாத,யாராலும் பேசப்படாத,யாருமே கற்பனைகூட பண்ணாத பலர் பக்க பலமாக இருக்கிறார்கள்.

இலங்கையின் நவீன இஸ்லாமிய தஃவா களத்தில் ஜாமியா நளீமியாவையோ,அகார் சேரையோ யாருக்கும் மறக்கவோ, தவிர்க்கவோ முடியாது.

இலங்கை தஃவா களத்தில் அதிகம் விமர்சணத்துக்கு உள்ளாகும் தாயீக்களில்
அகார்சேர் முக்கியமானவர்.

இந்த விமர்சணங்களையெல்லாம் தாண்டி
ஒருவர் இவ்வளவு காலம் இலங்கை தஃவா களத்தில் தாக்குப்பிடிப்பதென்பது
இலேசான காரியமல்ல.

அகார் சேர் தனது நீண்டகால தஃவா பயணத்தில் மிகத்தெளிவான ஒரு பாதையில்தான் சென்றிருக்கிறார்,அவரது செயற்பாடுகள் சமூகத்தில் பாரியதொரு தாக்கத்தை செழுத்தி இருக்கிறது என்பதையே அவரது மனைவியின் மரணமும்,அதன் பின்னரான செய்திகளும் எமக்கு உணர்த்துகின்றன.

அகார் சேர் மனமுடைந்து கொஞ்சம் ஓய்வில் இருப்பதற்குக்கூட இந்த சமூகம்
அவகாசம் வழங்க பயப்படுகிறது என்றால்,
அகார் சேர் போன்றவர்களின் வெற்றிடத்தை நிரப்ப இலங்கை தஃவா களத்துக்கு பல தசாப்தங்கள் தேவைப்படும் என்பதில் சந்தேகமில்லை.

களத்தில் பதவிகளோடு செயற்படும் பெண்களைத்தான் "நாம் சாதணைப் பெண்கள்" என்று அடையாளப் படுத்துகின்றோம்.

ஆனால் சாதிக்கும் ஒவ்வொரு கனவனின் பின்னாலும் ஒரு சாதணைப் பெண் இருக்கிறாள் மனைவியாக....
சாதிக்கும் ஒவ்வொரு பிள்ளைக்குப் பின்னாலும் ஒரு சாதணைப் பெண் இருக்கிறாள் தாயாக....

எனவே இந்த "குடும்பத் தலைவி" என்ற பதவி வெறும் ஆக்கிப்போடுவதற்கும்,
ஆடைகழுவுவதற்கும் மட்டுமல்ல என்பதை நிரூபித்துச் சென்றிருக்கிறார் அகார் சேரின் மனைவி.

ஒரு சமூக அங்கீகாரமுல்ல, பிஸியான, விமர்சனங்களுக்கு ஆளகின்ற ஒரு கனவனுக்கு மனைவியாக இருப்பதொன்றும் சின்ன விடயமல்ல.

அப்படியான ஒரு கனவனுக்கு துனையாக இருந்து இந்த சமூகத்தின் தஃவா பணிக்கு
திரைமறைவில் மிகப்பெரிய ஒரு சக்தியாக இருந்துவிட்டு ஓய்வுபெற்றிருக்கிறார் அந்தத் தாய்.

எனவே களத்தில் இருந்து போராடுவதும், மேடைகளில் வீர வசனம் பேசுவதும்,பெண்ணுரிமைக்காக பேசுவதும்தான் ஒரு பெண்ணுக்கான அங்கீகாரம் என்று நினைத்துக்கொண்டு,
தமது முதன்மையான பொருப்புக்களை மறந்து செயற்படும் பெண்களைவிட,

யாருக்கும் தெரியாமல்
வாழ்ந்துவிட்டு, தன் மரணத்தின் மூலம் ஒரு சமூக்த்தையே தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்த அந்தத் தாயிடம் நாமும் நமது பெண்களும் கற்றுக்கொள்ள நிரைய இருக்கின்றது
ஒரு மரணம் விட்டுச்சென்ற செய்தி..... ஒரு மரணம் விட்டுச்சென்ற செய்தி..... Reviewed by Madawala News on 11/02/2016 04:06:00 PM Rating: 5