tg travels

யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர பாகிஸ்தான் வழங்கிய உதவிகளை நன்றியுடன் நினைவு கூறுகிறேன்.(எம்.எஸ்.எம். ஸாகிர்)

யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு பாகிஸ்தான் எமக்கு பல வழிகளிலும் செய்த உதவியை நன்றியுடன் நினைவு கூறுகிறோம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

இலங்கைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் ராஜா பர்வீஸ் நேற்றுக் காலை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்த போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் முன்னாள் பிரதம அமைச்சர் ராஜா பர்வீஸ் அஷ்ரப் மற்றும் அவரது பாரியார் பேகம் நுஷ்ரத் அஷ்ரப் அவர்களும் இன்று (22) காலை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை கொழும்பு விஜேராமையில் அமைந்துள்ள அவரது உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் சந்தித்து பேச்சுவார்த்தைகள் நடத்தினர்.

இதன் போது பாகிஸ்தான் முன்னாள் பிரதம அமைச்சர் நாட்டின் இங்குள்ள நிலமைகள் பற்றி மஹிந்த ராஜபக்ஷவிடம் வினவிய போது,

இன்று நான் யுத்தத்தை வென்றெடுத்தேன். ஆனால் இரண்டாவது உலகமகா யுத்தத்தை வென்ற வின்ஸன் சேர்சிலுக்கு  நடந்த கதைதான் எனக்கு நடந்தது. எனவே மக்கள் இப்போது நிலமையை நன்றாக உணர்ந்திருக்கிறார்கள் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறினார்.

அப்போது முன்னாள் பாகிஸ்தான் பிரதமர்,  உலகத்தில் உள்ள ஆருடகாரர்கள் எல்லோரும் ஹிலாரி க்லிண்டன் வெற்றி பெறுவார் என்றுதான் கூறினார்கள். எனினும் ஒரேயொருவர்தான் சொன்னார் ட்ரம்ப் வெற்றி பெறுவார் என்று. இப்படியும் நடப்பது உண்டு.

அப்போது பேசிய முன்னாள் வெளிநாட்டு விவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், இரண்டு பேர் மீண்டும் பதவிக்கு வருவார்கள்.  ஒன்று அமெரிக்காவில் ட்ரம்ப்,  இரண்டு இலங்கையில் மஹிந்த ராஜபக்ஷ.
அங்கு பிரசன்னமாகியிருந்த முஸ்லிம் முற்போக்கு முன்னணிகளின் செயலதிபரும், முன்னாள் முஸ்லிம் கலாசார அமைச்சருமான ஏ.எச்.எம். அஸ்வர், அப்படியென்றால் நீங்கள் அடுத்த முறை இலங்கை விஜயம் செய்யும் போது இலங்கையின் தலைவராக மஹிந்த ராஜபக்ஷவைக் காணக் கூடிய நல்ல சூழல் இருக்கும் என்றார்.

கிழக்கு மாகாணத்தில் உள்ள முஸ்லிம்கள் பற்றி அங்கு கலந்துரையாடப்பட்டது. முஸ்லிம்கள் எனக்கு வாக்களிப்பதற்காக இருந்தார்கள். சில பல அசம்பாவிதங்கள் காரணமாக, அவர்கள் என்மேல் கொண்டிருந்த தப்பபிப்பிராயங்கள் காரணமாக அவர்களால் எனக்கு வாக்களிக்க முடியவில்லை. ஆனால் அந்த நிலை இன்று மாறியுள்ளது.
அப்போது முன்னாள் அமைச்சர் அஸ்வர், கிழக்கு மாகாண முஸ்லிம்கள் இப்போது நிம்மதியாக வாழுகின்றார்கள். புலிகள் காத்தான்குடி என்ற முஸ்லிம் கிராமத்திலுள்ள பள்ளிவாசல் ஒன்றில் மக்கள் தொழுது கொண்டிருக்கும் பொழுது சுட்டுக் கொலை செய்தார்கள். அதன் பிறகு ஏறாவூர். இவ்விதமே இனச் சுத்திகரிப்பு நடை பெற்றது.

புலிகள் பொலன்னறுவைப் பிரதேசத்தில் வாழ்ந்த விவசாயிகளைக் கூட கொன்று குவித்தார்கள். மஹிந்த ராஜபக்ஷ புலிகளை விரட்டியதன் காரணமாக அந்த நிலை நீங்கி இப்பொழுது சுமூகமான நிலை ஏற்பட்டுள்ளதை முஸ்லிம்கள் வரவேற்கின்றார்கள்.

இஸ்லாமபாத்தில் நடைபெறவிருந்த சார்க் மாநாட்டை ஒத்தி போட வேண்டு மென்று இலங்கை கூறியதை முன்னாள் பாகிஸ்தான் பிரதம அமைச்சர் ராஜா பர்வீஸ் இதன் போது தெரிவித்தார்.

இது எங்களுக்கும் பெரும் கவலையைத் தந்ததது. அப்போது சார்க் அமைப்பினைக்  கட்டியெழுப்புவதில் மிகவும் தீவிரமாக கரிசணை காட்டியவர் முன்னாள் பிரதமர் பேகம் பெனாஸிர் பூட்டோ.

இந்த வேளையில் ஆசிய நாடுகள்  ஒன்று சேர்ந்த சார்க் மாநாடுதான் எங்களுக்கு எதிர்காலத்தில் கைகொடுத்து உதவ வேண்டியது. அதற்காக வேண்டி நீங்கள் பாடுபட வேண்டும் என்று முன்னாள் பாகிஸ்தான் பிரதமர், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கேட்டுக் கொண்டார்.
இந்த சந்திப்பின் போது, முன்னாள் வெளி விவார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், முன்னாள் ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல, முஸ்லிம் முன்னணிகளின் செயலதிபரும் முன்னாள் முஸ்லிம் கலாசார அமைச்சருமான ஏ.எச்.எம். அஸ்வர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் புத்திக லொக்குபண்டார ஆகியோரும் கலந்து கொண்டனர்.

 இச்சந்திப்பில், சிரந்தி ராஜபக்ஷ பேகம் நுஸ்ரத் அஷ்ரபை வரவேற்று இலங்கையின் பெண்கள் வாக்குரிமை சம்பந்தமாகவும் அவர்களுக்கு எதிர்காலத்தில் கிடைக்கவிருக்கின்ற மக்களது பிரதிநிதித்துவம் சம்பந்தமாகவும் விளக்கிக் கூறினார்.
யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர பாகிஸ்தான் வழங்கிய உதவிகளை நன்றியுடன் நினைவு கூறுகிறேன். யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர பாகிஸ்தான் வழங்கிய உதவிகளை நன்றியுடன் நினைவு கூறுகிறேன். Reviewed by Madawala News on 11/22/2016 08:05:00 PM Rating: 5