Kidny

Kidny

பாசில் மரீஜா இல்லாத கண்டி றகர் அணி, இனிமேல் அவ்வளவு தானா?-ஜே.எம்.ஹபீஸ்-

கண்டி றகர் அணிக்கு பிரபல வீரர் பாசில் மரீஜா இல்லாத விடத்து அவ் அணியால் வெற்றி பெறமுடியாது என்ற ஒரு மாயை தோற்று விக்கப்பட்டுள்ளதாக விமரிசனங்கள் தெரிவிக்கின்றன. கண்டி சாதிக்குமா என்பதை இறுதிவரை பொறுந்திருந்து பார்ப்போம்.  


அண்மையில் (13.11.2016) முடிவடைந்த விமானப்படையுடனான போட்டியின் முடிவு குறித்து எழுந்துள்ள விமர்சனங்களில் இதுவும் முக்கிய மானதாகும்.

ஒருவாரத்திற்கு முன் சீ.எச். அணியை 96-00 என்ற அடிப்படையில் படுதோல்வி அடையச் செய்த அணி விமானப்படை அணியுடனான போட்டியில் 24 - 21 என்ற அடிப்படையில் யாரும் எதிர்பாராத ஒரு தோல்வியைத் தழுவியது.


அதேநேரம் இலங்கையில் பிரபலமான ஒரு றகர் தொடரான கிளிபர்ட் கேடயத்திற்கான போட்டிகளில் முதன் முதலாக 1992ம் ஆண்டு கண்டி வெற்றி பெற்றது. அன்று முதல் இதுகாலவரை றகர் விளையாட்டுத்துறையில் தம்மை முடி சூடா மன்னர்களதகவே கண்டி இனம் காட்டி வந்தது.


அதன் கடந்த 25 வருடகாலத்தில் அது நிலைநாட்டி சாதனைகள் பல. உதாரணமாக 17 முறை லீக் தொடரில் செம்பியனானது. 20 முறை கிளிபர்ட் கேடயத்தை வென்றுள்ளது.

இதில் 11 வருடமாக தொடர்ந்து தோல்வியே அடையாது வெற்றியை தனதாக்கியது. 2000 ஆண்டு முதல் 2012ம் ஆண்டு வரை தொடர்ந்து லீக் செம்பியன் என்ற மகுடத்தை சூடியது. இதனால் எந்த அணியாலும் தோக்கடிக்க முடியாத அணி எனப் பலரை பிரமிக்க வைத்து வந்த அணி. இருப்பினும் கடந்த ஆட்சியின் போது நாட்டின் தலைவரின் புதல்வர்கள் மூவரும் ஒரு அணியில் பாரி சவாலையையும் அழுத்தத்தையும் கொடுத்த நேரத்தில் கூட நாம் சளைத்தவர்கள் அல்ல எனக்காட்டிய அணி.


அதேபோல் தற்போது கண்டி அணிக்காக விளையாடிவரும் வீரர்கள் பெரும்பாலனர்வர்கள் இலங்கை தேசிய அணியில் பங்கு கொண்டவர்கள். தேசிய அணியின் தலைவராக இருந்த பல வீரர்கள் கண்டி அணியில்இடம் பிடித்துள்ளனர்.

இத்தனை சிறப்பம்சங்களைக் கொண்ட அணி (13ம் திகதி) விமானப்படையின் சொந்த மைதானத்தில் விiயாடிய போது போட்டி முடிய 10 நிமிடம் இருக்கும்  கட்டத்தில் 7- 21 என்ற நிலையில்  படுதோல்வி அடைந்திருந்தது.
ஆனால் கடந்த பல மாதங்களாக உபாதை காரணமாக விளையாட முடியாதிருந்த இலங்கை தேசிய றகர் அணி, மற்றும் அணிக்கு 7 பேர் கொண்ட இலங்கை ரக்பி செவன் அணி போன்ற வற்றின் தலைவராக இருந்த பாசில் மரீஜா இறுதிக்கட்டத்தில் மைதனத்திற்குள் நுழைந்ததுமே போட்டி ஓரிரு நிமிடத்தில் தலைகீழானது.

தனது திறமையான வழிகாட்டலில் கீழ் பந்தை கைமாற்றிய தனது அணியின் சக வீரர் ஹசித ஜயவர்தனாவிற்கு பாஸ்பண்ண அவர் இலகுவாக அதனை ட்ரையாக்கினார். அதற்கான மேலதிகப்பள்ளியும்; பெறப்பட்டது.
இடைவெளி 14-21 ஆகக் குறைந்தது. அதனை அடுத்து பாசில் மரீஜா மேலும் ஒரு ட்ரையை வைக்க மேலதிகப் புள்ளியுடன் 21-21 ஆக சமனிலை அடைந்தது.

இந்நிலையில் மரீஜாவின் வருகையுடன் ஒரு சில நிமடத்திலே திசை மாறுவதை அவதானித்த ரசிகர்கள் இன்னும் சில நிமிடங்களுக்கு முன்பே பாசில்மரீஜா வந்திருக்க வேண்டுமே என அங்களாய்த்தனர்.


ஆனால் அதிஸ்டம் வேறு வகையில் சென்று இறுதி நிமிடத்தில் ஒரு பெனல்டி வழங்கப்பட்டு அதனை விமானப்படை இலக்குத் தவறாது அடித்து 21-24 என்ற  நிலையை அடைந்ததுமே போட்டி முடிவுக்கு வந்தது.


எனவே கண்டி அணிக்கு பாசில் மரீஜா இல்லாத விடத்து வெற்றி பெறமுடியாது என்ற ஒரு மாயையை தோற்று வித்து விட்டதா? எனப் பலர் விமர்சிக்கி;ன்றனர்.

முதற்சுற்றில் இன்னும் 5 போட்டிகளும்  இரண்டாம் சுற்றில் 7 போட்டிகளும் உள்ளன. கண்டி சாதிக்குமா என்பதை அதுவரைக்கும் பொறுந்திருந்து பார்ப்போம்.  

பாசில் மரீஜா இல்லாத கண்டி றகர் அணி, இனிமேல் அவ்வளவு தானா?  பாசில் மரீஜா இல்லாத கண்டி றகர் அணி, இனிமேல் அவ்வளவு தானா? Reviewed by Madawala News on 11/15/2016 12:10:00 PM Rating: 5