(படங்கள்) பிரதேசத்தில் மூவின மாணவர்களையும் இணைத்து கல்வி உதவி புரிந்த கெக்கிராவை அல் மீஸான் பௌண்டேசன்.



அல் மீஸான் பௌண்டேசனினால் அப்பியாசக்கொப்பிகள் வழங்கிவைப்பு.
கெக்கிராவை பிரதேச செயலகத்திற்குற்பட்ட கனேவல்பொல கிராமத்தில் செயற்பட்டு வரும் அல் மீஸான் பௌண்டேசன் எனும் தன்னார்வ அமைப்பினால் 2017ம் ஆண்டில் முதலாம் தரம் முதல் ஐந்தாம் தரம் வரையில் கல்வி பயிலும் மூவினங்களையும் சேர்ந்த 850 மாணவ மாணவியர்களுக்கு அப்பியாச கொப்பிகள் மற்றும் பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு அண்மையில் கெக்/ கனேவல்பொல முஸ்லீம் மகா வித்தியாலத்தில் சிறப்பாக இடம்பெற்றது.

அல் மீஸான் பௌண்டேசனின் தலைவரான S.S.M அன்வர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக வடமத்திய மாகாண சபையின் உறுப்பினரும் ஹொரவப்பொத்தானைக்கான ஐக்கிய தேசிய கட்சியின் இணைப்பாளருமான P. சஹீத் ஆசிரியர் அவர்கள் கலந்து கொண்டிருந்தார்.

 கௌரவ அதிதிகளாக கெக்/ கனேவல்பொல முஸ்லீம் மகாவித்தியாலாயத்தின் அதிபர் S. சரிபுத்தீன், வட மத்திய மாகாண சபை உறுப்பினர் சரத் இலங்கசிங்க, கெக்கிராவை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ரத்னாயக்க அவர்களுடன் மும்மதங்களை சேர்ந்த மதகுருமார்களும் கலந்து சிறப்பித்திருந்தனர்.


இன, மத, மொழி, பேதம் பாராமல் அனைத்து இன மக்களுக்கும் சேவை செய்யும் அல் மீசான் பவுண்டேஷனை பாராட்டியும் அவர்களின் இவ்வாறான சேவைகள் தொடரவேண்டும் என்றும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய பிரதம அதிதி மற்றும் கௌரவ அதிதிகள் தெரிவித்தனர்.


கனேவல்பொல முஸ்லீம் மகாவித்தியாலயம், கெக்கிராவை தமிழ் மகா வித்தியாலயம், ரம்பாவ சிங்கள வித்தியாலயம், மாமினியாவ சிங்கள வித்தியாலயம், ஒலுகறந்த சிங்கள வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளை சேர்ந்த மாணவர்களுக்கும்.

அல் பிலால் பாலர் பாடசாலை, அந்நூர் பாலர் பாடசாலை, பிபன கெகுலு பாலர் பாடசாலை, உல்பொத்தை பாலர் பாடசாலைகளை சேர்ந்த அடுத்த ஆண்டு தரம் ஒன்றில் கல்வி பயில்வதற்காக காத்திருக்கும் மாணவர்கள் என 850 பேருக்கான அப்பியாச கொப்பிகளும், பாடசாலை உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டது.

மீசான் பௌண்டேசனின் நூறு நாள் வேலைத்திட்டம் என்னும் தொனிப்பொருளில் இடம்பெற்ற அவர்களின் முதலாவது வேலைத்திட்டமாக இது கொள்ளப்படுகின்றது, எதிர்வரும் காலங்களில் தரம் ஐந்து மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சை வழிகாட்டி, சாதாரண தர மாணவர்களுக்கான பரீட்சை வழிகாட்டல்கள், மற்றும் உயர்தர மாணவர்களுக்கான பரீட்சை வழிகாட்டல் முகாம்கள் ஆகியன அவர்களினால் நடத்தப்படவிருக்கின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

(படங்கள்) பிரதேசத்தில் மூவின மாணவர்களையும் இணைத்து கல்வி உதவி புரிந்த கெக்கிராவை அல் மீஸான் பௌண்டேசன். (படங்கள்) பிரதேசத்தில் மூவின மாணவர்களையும் இணைத்து கல்வி உதவி புரிந்த கெக்கிராவை அல் மீஸான் பௌண்டேசன். Reviewed by Madawala News on 11/29/2016 11:16:00 AM Rating: 5