Free Space

இளைஞர்களே விழித்தெழுங்கள்..!!



இஸ்லாம் மஹர் என்ற நாமத்தை பெண்களுக்கான உரிமையாகவும், ஆண்களுக்கான கடமையாகவுமே ஆக்கிவைத்திருக்கின்றது.
உரிமைகளை உடமையாக்கிக்கொள்ள வேண்டுமனில் அதற்கே உரிய கடமைகளை நாம் சரிவர செய்தாக வேண்டும்.

மஹர் என்ற விடயத்தில் மனமகளின் விருப்பத்தெரிவுகள் மாத்திரமே முன்னுரிமைபடுத்தப்படவேண்டுமே ஒழியே மனமகனின் விருப்பத்தெரிவுகள் அல்ல. நமது சமூகமோ இன்று மனமகளின் விருப்பத்தைவிட மனமகனின் விருப்பத் தெரிவுக்கு மாத்திரமே அதிக முக்கியத்துவம் கொடுத்துகொண்டிருக்கின்றது.

இஸ்லாம் எந்த விடயத்தை புறக்கணிக்குமாறு சொல்லியிருக்கின்றதோ அதுவே முன்னிலைப்படுத்தப்படுகின்றது  எந்த விடயத்தை அனுமதிக்குமாறு பணித்து இருக்கின்றதோ அதுவோ பின்னிலைபடுத்தப்படுகின்றது.

இங்கு பெண்களின் உரிமைகள், உணர்வுகள், எதிர்பார்ப்புகளுக்கு மதிப்பளிக்கப்படாமலேயே விவாக ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படுகின்றன. அதனையும் மீறி பெண்ணானவள் தனது உரிமைகளை முன்வைப்பாளேயானால் ஆணவம்,அகங்காரம், படித்ததிமிர், இவள் நமது குடும்பத்துக்கு சரிப்பட்டுவரமாட்டாள், இப்பவே மதிக்காதவள் பிறகா நம்மை மதிக்கப்போகிறாள், என்ற போலிச்சாட்டுகளுக்கும் வசைபாடல்களுக்கும் மத்தியில் விவாக ஒப்பந்தம் நிறுத்தப்படுகின்றது.

மீண்டும் ஒரு வரணை தேடி கண்டுபிடிக்கும்வரை காலமும்,நேரமும் அவளுக்காக காத்திருக்க தயாராக இல்லை. சமூகத்தின் சுடுசொற்கள் ஒருபுறம், குடும்பத்தின் வறுமை நிலை மறுபுறம். வாய்மூடி மௌனியாகவே இருந்துவிடச்செய்கின்றது அவர்களின் உரிமைகளை.

பெண்னாக பிறந்ததுதான் அவர்கள் செய்த குற்றமனில் அவர்களின் பிறப்புக்கு காரணமாக இருந்த ஒவ்வொரு ஆண்களும் அதைவிடப்பெரிய குற்றவாளிகள் என்பதை மறந்துவிடக்கூடாது.

இஸ்லாம் அவர்களுக்கன்றே கொடுத்திருக்கும் தனித்துவமான சிறப்பையும்,அந்தஸ்தையும் பறித்துவிட முயல்வது சரியல்ல. அவர்கள் கேட்கவில்லை என்பதற்காக நாமும் அவர்களிடம் கேட்காமல் இருந்துவிடுவதில்லை.

திருமணம் முடிக்கக் காத்திருக்கும் ஒவ்வொரு இளைஞ்ஞனும் மஹரன்ற விடயத்தில் அவளின் விருப்பத்தெரிவுகளை முன்னுரிமை படுத்துங்கள்.
முன்மாதிரிகள் என்பது முதலில் நம்மில் இருந்து ஆரம்பிக்கப்பட வேண்டும் முன்னின்று வழிநாடத்தி காட்டினால்  நாளைய தலைமுறை நம் ஒவ்வொருவரையும் பின்தொடர காத்துநிற்கின்றது.

Muja Ashraff

இளைஞர்களே விழித்தெழுங்கள்..!! இளைஞர்களே விழித்தெழுங்கள்..!! Reviewed by Madawala News on 11/22/2016 04:02:00 PM Rating: 5