Ad Space Available here

இனி நமக்கு எங்கே நிம்மதி.. ?சிரியாவில் ,ஈராக்கில் ,லிபியாவில் , பலஸ்தீனத்தில் ,பர்மாவில்
காஷ்மீரில் ,ஏன் ஐரோப்பிய நாடுகளில் அமெரிக்காவில் என்று எங்கு பார்த்தாலும் ஏதோ ஓரு வகையில் முஸ்லிம்களான நாம், துன்புறுத்தப்பட்டு இக்கட்டான நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் .
இப்போது அந்த நெருக்கடி நிலை இலங்கைக்குள்ளும் ஏற்பட்டுவிட்டது . இதில் யாரையும் குற்றம் சாட்டி ஆகப்போவது எதுவும் இல்லை .

'சிறுபான்மை நாட்டில் பொறுமையாக அமைதியாக அடங்கி வாழ வேண்டும்,
சில விடயங்களை விட்டுக்கொடுக்க வேண்டும்' என்று கூறி வருகிறது இலங்கை ஜமிய்யதுல் உலமா சபை . 'இல்லை. யாருக்குமே பயப்படப்போவதில்லை ஜனநாயக வழியில் ஆர்ப்பாட்டம் செய்வோம் நியாயத்தை தட்டிக்கேட்போம்' என்கிறது இலங்கை தவ்ஹீத் ஜமாஅத் .

இரண்டு பேருமே தங்கள் போக்கை நிரூபிக்க குர் ஆணை ஹதீஸ்களை ,சீராக்களை , பெரியார்களின் கருத்துக்களை முன் வைத்து மாதக்கணக்கில் வாதாடிக்கொள்ள முடியும் .

இதனால் ஆகப்போவது எதுவும் இல்லை .ஒருவரை ஒருவர் தாக்கி வார்த்தைகளால் புண்படுத்தி ஆகப்போவதெல்லாம் வீண் குரோதமும்  பகைகளும் மட்டும்தான் .

உலகம் முழுவதும் எரிகின்ற  முஸ்லீம்களுக்கு எதிரான தீயின் ஒரு சுவாலையே இலங்கையிலும் இப்போது எரிய தொடங்கி உள்ளது .
முஸ்லிம்களான நாம் முஸ்லீம்களாக
இல்லை .

ஒவ்வொரு வணக்க வழிபாடுகளிலும் முழுமைத்துவம் இல்லை . நமக்குள் ஆயிரம் பிரிவினைகள் . நாம் மட்டும் அமைதியாக இருந்தால் போதும் உலகின் எந்த இடத்தில் முஸ்லிம்களுக்கு என்ன நடந்தால் என்ன என்கிற போக்கில் தேசிய வாத ,பிரதேச வாத கோடு போட்டுக்கொண்டு
வாழப்பழகி விட்டோம். குறைந்தது துஆக்களில் கூட பாதிக்கப்படுகிற
முஸ்லீம்களை உள்ளடக்க தவறி வருகிறோம் .ஜமாத்துகளில் நம்மை திணித்துவிட்டு முனாபிக் தனமாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன் .
பிற மதத்தவர்களுக்கு முன் மாதிரிகளாக இருப்பதற்கு பதிலாக அவர்களின் வயிற்று எரிச்சலை வாரிக்கொட்டிக்கொண்டு இருக்கின்றோம்.

ஆட்சியாளர்களின் திருப்திக்காக, வாழும் நாட்டில் அமைதியாக வாழ்வதற்காக  அடிப்படை கோட்பாடுகளான ஜிஹாத் உட்பட அனைத்தையும் மாற்ற தயாராக இருக்கின்றோம் .

இவ்வளவையும் செய்து கொண்டு அமைதி தேவை என்று கேட்கும் போது எப்படி அமைதி கிடைக்கும் .?

இது இலங்கையில் மட்டுமல்ல உலகம்  முழுவதும் உள்ள முஸ்லிம்கள் ஒவ்வொருவரின் நிலையும் இதேதான் .

சகோதரர்களே .. நாம் அமைதியாக இருப்பதற்கும் அடுத்தவனை திருப்தி படுத்துவதற்கும் முஸ்லீம்களாக வரவில்லை . அல்லாஹ்வை திருப்தி படுத்தவே வாழ்கிறோம் . அதன் பணியிலேயே மரணிப்பதை பாக்கியமாக நினைப்பவர்கள் .

முஸ்லிம்களின் இன்றைய நிலையை,
அதற்கான காரணத்தை பின் வரும் ஹதீஸ் தெட்டத்தெளிவாக சுட்டுக்காட்டுகின்றது

நபிகள் நாயகம் ( ஸல் ) அறிவித்ததாக  தவ்பான் அறிவிக்கிறார்கள்  ஒரு காலம் வரும் அக்காலத்தில்  நாடுகள் உங்களை உணவு தட்டுக்களில் உள்ளவற்றை ஒன்றன்பின் ஒன்றாய்
 சாப்பிடுவது போல சாப்பிடுவார்கள் என்று கூறினார்கள் .

அப்போது ஒருவர் கேட்டார்  "நாங்கள் அப்போது சிறிய தொகையினராக இருப்போமா " என்று .
"இல்லை . அப்போது நீங்கள் கடலில் உள்ள நுரைகளைப்போல பெரும் தொகையினராக இருப்பீர்கள் . உங்கள் மீதுள்ள பயத்தை எதிரிகளிடம் இருந்து அல்லாஹ் எடுத்து விடுவான் அத்துடன் உங்களின் மனதில் பலவீனத்தை ஏற்படுத்தி விடுவான் " என்று நபிகள் நாயகம் ( ஸல் ) அவர்கள் கூறினார்கள் .
"என்ன பலவீனம் "என்று இன்னொருவர் கேட்டார்

"இந்த உலகத்தின் மீதியுள்ள அன்பும் மரணத்தின் மீது வெறுப்பும் " என்று நபிகள் நாயகம் ( ஸல் ) அவர்கள் கூறினார்கள் (அபூ தாவூத் )

பிரச்சினைகளுக்கும் நெருக்கடிகளுக்கும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டுவதால் பயன் இல்லை .

இவ்வாறான நெருக்கடிகளுக்கு  நம்மை நாமே குற்றம் சாட்ட வேண்டும் . அல்லாஹ்வை தவிர்த்து அவனது படைப்பினங்களை திருப்தி படுத்த நாம் விட்டுக்கொடுக்கிற ஒவ்வொரு எட்டுகளும் நம்மீது அடிக்கப்படுகிற ஒவ்வொரு அடிகளாக இருக்குமே தவிர தீர்வுகளாக இருக்காது என்பது மற்றும் மறுக்க முடியாத உண்மை
-முஹம்மது ராஜி

இனி நமக்கு எங்கே நிம்மதி.. ? இனி நமக்கு எங்கே நிம்மதி.. ? Reviewed by Madawala News on 11/20/2016 08:05:00 PM Rating: 5