Accaddemy

மரமோ, மயிலோ, குதிரையோ, கவனிக்குமா?



அன்பார்ந்த என் முஸ்லிம் சகோதர சகோதரிகளே
அஸ்ஸலாமு அலைக்கும்.


பல வருடங்களாக எமது முஸ்லிம் சமூகம் இலங்கையில் இனவெறி பிடித்த சில மிருகங்களால் பாதிக்கப்பட்டே வருகின்றது. அது  பௌத்தர்களில் காணப்படும் இனவெறியர்களாக இருக்கட்டும் அல்லது தமிழீல விடுதலைப் புலிகளாக இருக்கட்டும் இவர்களால் அன்று தொட்டு இன்று வரைக்கும் அமைதியாக வாழும் எமது சமூகத்திற்கு அநீதமிழைக்கப்பட்டேயிருக்கின்றது வரலாறு சாட்சி.


முஸ்லிம்களின் உதவியினால்  ஆட்சிக்கு வந்த  பெரும்பான்மை அரசியல்வாதிகளாகயிருப்பினும் அவர்கள் வாய்மூடியே இருக்கின்றனர்.  இது என்ன பெரிய விடயமா? எம் வாக்குகளை அள்ளிக் கட்டிக் கொன்று  பாராளுமன்றம்  செல்லும் எமது முஸ்லிம் அரசியல் தலமைகள்  கூட  ஊமையாய் தானே இருக்கின்றனர்.


இனவாத செயற்பாடுகள் தலைதூக்கி சிறுபான்மை சமூகம்
நசுக்கப்படுகின்றது என்பதை கவனிக்காது இருந்த ஓர் அரசாங்கத்தையே மாற்றி நல்லாட்சி என்று  வார்த்தைக்கு வார்த்தை தம்மைக் கூறி வாக்குகளை வாங்கி சிம்மாசனம் ஏறிய பின் தற்போது  சில பெரும்பான்மையைச் சேர்ந்த காடையர்களால்  மீண்டும் மீண்டும் இனவெறிச் செயற்பாடுகள் தலைகாட்டுகின்ற போது  ஏன் அமைதியாக பட்ஜட்டை வாசிப்பதில் மட்டுமே குறியாக இருந்து வருகின்றது.  இதற்காகத்தான் மக்கள் உங்களை தெரிவு செய்தார்களா?


பொதுமக்களே தங்களைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டுமெனில் இந்த அரசு, அரசாங்கம், பொலீஸ், இராணுவம், பாராளுமன்றம், நீதிமன்றங்கள், சட்டம் எதற்காக என்று தான் கேட்கின்றோம்.


வாய்கிழிய பேசிய வாக்குகளை அள்ளிக் கொள்ள மட்டுமா எமது முஸ்லிம் அரசியல் கட்சிகள் தோற்றம் பெற்றன? வாக்குகளைக்  கூட்டிக் கொள்ள  மாநாடுகளும் மேடைகளும் ஊர்வலங்களும் இதனை மட்டும் செய்தால் போதுமா முஸ்லிம் அரசியல் தலமைகளே  பதில் சொல்லுங்கள் எமது முஸ்லிம் மக்கள் உமது பொறுப்பு அவர்களை பயமின்றி பாதுகாப்பாக வாழ வைப்பது உமது கடமை எமக்கு மரணம், மறுமை, கேள்வி கணக்கு, சுவனம், நரகம் இருக்கின்றது ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்.


கட்சியின் பின்னால் மடயைர்களாக சுற்றும் வாலிபர்குளே எமது சமூகம்  இருக்கும் இடம் தெரியாமல் அழிக்கப்படும் என்று கோசம் வருகின்றது எமது மார்க்கம் எமது சமூகம் பச்சையாக கொச்சையாக்கப்படுகின்றது வாய்மூடிய   ஊமை அரசியல்வாதிகளுக்குப் பின்னால் சுற்றித்திரிவதால் என்ன ஆகப் போகின்றது ? சிந்திப்பீர்களா? கால கையப் புடிச்சு  ஒரு அரசாங்க வேலையை  வாங்கினால் போதுமா? எமது சொந்தங்கள் நிம்மதியிழந்து  வாழ்கின்றதே ...
வீதி போடவும் வாய்க்கால் கட்டவும் தானா எமது கட்சிகள் உருவாக்கப்பட்டன?

முஸ்லிம் புத்திஜீவிகளே , நீதிபதிகளே, சட்டத்தரணிகளே, இளைஞர்களே கண் திறப்பீர்களா??

நல்லாட்சியே வாய்ச் சொல்லில் மட்டுமா நல்லாட்சி செயல்ரூபம் எப்போது வரும் ?

மரமோ இலையோ குதிரையோ மயிலோ
கவனிக்குமா?

By: Mujeeb Jamaldeen
மரமோ, மயிலோ, குதிரையோ, கவனிக்குமா? மரமோ, மயிலோ, குதிரையோ, கவனிக்குமா? Reviewed by Madawala News on 11/15/2016 11:19:00 AM Rating: 5