Ad Space Available here

டொனால்ட் ட்ரம்­பிடம் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால கோரிக்கைகள் இவைதான்.பொறுப்­புக்­கூறல் மற்றும் மனித உரிமை மீறல் குற்­றச்­சாட்­டுக்­க­ளி­லி­ருந்து இலங்­கையை விடு­விக்­கு­மாறும் இந்த விட­யத்தில் இலங்­கைக்கு அழுத்தம் பிர­யோ­கிக்­க­வேண்டாம் என்றும் அமெ­ரிக்­காவின் புதிய ஜனா­தி­ப­தி­யாக தெரிவு செய்­யப்­பட்­டுள்ள டொனால்ட் ட்ரம்­பிடம் கோரிக்கை விடுக்­க­வுள்ளேன் என்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்தார்.

அமெ­ரிக்­காவின் புதிய ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்ப்பை சந்­திப்­ப­தற்கு விசேட பிர­தி­நி­தி­யொ­ரு­வரை அனுப்பி வைத்து அமெ­ரிக்­காவின் உத­வியை இலங்கை அர­சாங்­கத்­திற்கு பெற்றுக் கொள்­வ­தற்­கான அனைத்து   நட­வ­டிக்­கை­க­ளையும் முன்­னெ­டுப்பேன் என்றும் ஜனா­தி­பதி குறிப்­பிட்டார்.

வடக்கு மக்கள் கேட்­பது தமது பரம்­பரை காணி­க­ளை­யே­யாகும்.. அவற்றை திருப்பி கைய­ளிப்­பதில் பின்­னிற்க மாட்டேன் என்றும் ஜனா­தி­பதி குறிப்­பிட்டார்.

காலி மாவட்­டத்தில் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சிக்கு அங்­கத்­தி­னர்­களை இணைத்துக் கொள்ளும் வேலைத் திட்­டத்தை நேற்று முன்­தினம் சனிக்­கி­ழமை ஆரம்­பித்து வைத்து உரை­யாற்­று­கை­யி­லேயே ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன இவ்­வாறு தெரி­வித்தார்.

ஜனா­தி­பதி அங்கு தொடர்ந்து உரை­யாற்­று­கையில் அமெ­ரிக்­காவில் புதிய ஜனா­தி­ப­தி­யாக டொனால்ட் ட்ரம்ப் பத­வி­யேற்­க­வுள்ளார். அவ­ருக்கு நான் விசேட செய்­தி­யொன்றை அனுப்பி வைத்தேன். எமது அர­சாங்­கத்தை முன்­ன­கர்த்தி செல்ல அமெ­ரிக்­காவின் வழி­ந­டத்­தலை, ஆத­ரவை அதன் மூலம் கோரினேன். ஒத்­து­ழைப்பை வேண்­டினேன்.

இதே­வேளை ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையில் முன்­வைக்­கப்­பட்ட கடு­மை­யான பிரே­ர­ணையின் விட­யங்­களை பல­வீ­ன­மாக்கி அமெ­ரிக்கா மற்றும் இலங்­கையின் உடன்­பாட்­டுடன் ஏற்­ப­டுத்திக் கொண்­டுள்ள பிரே­ர­ணையை நான் அமெ­ரிக்­காவின் புதிய ஜனா­தி­ப­திக்கு முன்­வைப்பேன்.

அது தொடர்பில் பேச்­சு­வார்த்­தை­களை நடத்­துவேன். அதற்­காக இலங்­கை­யி­லி­ருந்து விசேட பிர­தி­நி­தி­யொ­ரு­வரை அமெ­ரிக்­கா­விற்கு அனுப்பி வைப்பேன். எனது நாட்டை முழு­மை­யாக விடு­விப்­ப­தற்­கான அனைத்து நட­வ­டிக்­கை­க­ளையும் மேற்­கொள்வேன். நாம் சுதந்­தி­ர­மாக, சுயா­தீ­ன­மாக வாழ்­வ­தற்­கான சமு­க­மொன்றை கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்கு ஒத்­து­ழைப்­பு­களை வழங்­கு­மாறு அமெ­ரிக்­காவின் புதிய ஜனா­தி­ப­தி­யிடம் வேண்­டுகோள் விடுப்பேன்.

மேலும் இவ்­வா­றான சூழ்­நி­லை­களை ஏற்­ப­டுத்தி புதி­தாக நிய­மனம் பெறும் ஐக்­கிய நாடுகள் செய­லாளர் நாய­கத்­தி­டமும் வேண்­டுகோள் ஒன்றை விடுப்பேன். அவ் விட­யங்­களில் வெற்­றி­பெற முடியும் என்ற நம்­பிக்கை எனக்கு இருக்­கின்­றது. மீண்டும் இந்­நாட்டில் யுத்­த­மொன்று ஏற்­ப­டாத விதத்தில் நாட்டை சரிப்­ப­டுத்த வேண்டும்.

மீண்­டு­மொரு யுத்தம் ஏற்­ப­டு­வதை தடுக்க அனை­வரும் ஒன்­று­பட்டு செயற்­பட வேண்டும். வடக்­கா­கட்டும் தெற்­கா­கட்டும் எங்கும் அடிப்­ப­டை­வா­தத்­திற்கு இட­ம­ளிக்க முடி­யாது. அனைத்­தையும் நிகா­ரிக்­கின்றேன்.

இந்­நாட்டில் சிங்­கள, தமிழ், முஸ்லிம் மக்கள் அனை­வரும் ஒற்­று­மை­யாக நம்­பிக்­கை­யுடன் வாழ வேண்டும். யுத்­தத்தை தடுக்க வேண்­டு­மென்றால் வட­ப­குதி மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கு நியா­ய­மான தீர்­வு­களை பெற்றுக் கொடுக்க வேண்டும்.

இல்­லா­விட்டால் யுத்தம் தலை­வி­ரிக்கும். இதனை நாம் புரிந்­து­கொள்ள வேண்டும். 1930, 40, 50,60, 70 களில் தொடங்கி தொடர்ந்து சிங்­கள, தமிழ், முஸ்லிம் இனக் குழுக்­க­ளி­டையே பல்­வே­றுப்­பட்ட மோதல்கள் இடம்­பெற்­றன, கல­வ­ரங்கள் நிகழ்ந்­தன.

1947 தொடக்கம் இந்­நாட்டில் பாரா­ளு­மன்ற முறைமை நடை­மு­றையில் உள்­ளது. இக் கால கட்­டத்­திற்குள் எத்­தனை அர­சாங்­கங்கள் வடக்­கிற்கு எத்­தனை அமைச்­சுக்­களை வழங்­கி­யுள்­ளன.?

வட­ப­குதி மக்­களின் வறு­மையை போக்க, நெருக்­க­டி­களை நீக்க எடுத்த நட­வ­டிக்­கைகள் என்ன? இவற்றை எமது மன­சாட்­சி­யிடம் தட்டிக் கேட்க வேண்டும். உலகில் எந்­த­வொரு நாட்­டிலும் 27 வரு­டங்கள் மக்கள் அகதி முகாம்­களில் வாழ­வில்லை. எனவே வடக்கில் முகாம்­களில் வாழும் மக்­களை நேரில் சந்­திக்க வேண்டும்.

உங்­க­ளது சந்ததிகள் 27 வருடங்கள் அகதி முகாம்களில் இருந்தால் துப்பாக்கிகளை மட்டும் ஏற்கும் நிலை மட்டுமா ஏற்பட்டிருக்கும் என்பதை மனசாட்சியிடம் கேளுங்கள். இதனை நியாயமாக தீர்த்து வைக்கமுனைந்தால் அதனையும் தடுக்கின்றனர். படையினரின் காணிகளை மக்களுக்கு வழங்கப் போகின்றேன் என்கின்றனர்.

தமது பரம்பரை காணிகளையே வடபகுதி மக்கள் கேட்கின்றனர். காணிகள் கிடைத்ததும் அவர்கள் மண்ணை வணங்குகின்றனர்  என்றார்.  
டொனால்ட் ட்ரம்­பிடம் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால கோரிக்கைகள் இவைதான். டொனால்ட் ட்ரம்­பிடம் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால கோரிக்கைகள் இவைதான். Reviewed by Madawala News on 11/28/2016 10:28:00 AM Rating: 5