(படங்கள் இணைப்பு) வடக்கில் விடுவிக்கப்பட்ட பகுதிகளும் திரண்டு செல்லும் மக்களும்.



பாறுக் ஷிஹான்

வலிகாமம் வடக்கில் உயர்பாதுகாப்பு வலயமாக இருந்து கடந்த 31ஆம் திகதி ஜனாதிபதியால் விடுவிக்கப்பட்டு யாழ்.மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்ட பொதுமக்களுக்குச் சொந்தமான 460 ஏக்கர் காணிகளை இன்று வெள்ளிக்கிழமை பொது மக்கள் சென்று பார்வையிட அனுமதி வழங்கப்பட்டது.

காங்கேசன்துறை ரயில் நிலையத்திற்கு அருகில் இருந்த பாதுகாப்பு வலய எல்லையில் மக்கள் அழைக்கப்பட்ட நிலையில் அங்கு இராணுவத்திரால் வெடிபொருட்கள் சம்பந்தமாக விளக்கமளிக்கப்பட்டதன் வெடிக்காத வெடிபொருட்கள் இருந்தால தமக்கு அறிவிக்கும் படியும் எனவும் தெரிவித்ததுடன் மதியம் 12 மணியளவில் மக்கள் தமது காணிகளுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர். நீண்ட வருடத்தின் பின்னர் தமது காணியை பார்க்க போகிறோம் என்ற சந்தேசத்தில் சென்றனர்.

இதன் படி தையிட்டி தெற்கு, தையிட்டி கிழக்கு, தையிட்டி வடக்கு,ஆகிய பகுதிகள் முழுமையாக விடுவிக்கப்படுவதுடன்  காங்கேசன்துறை தெற்கின் கடற்கரைப் பக்கமாக உள்ள காணியை தவிர மறுபக்கமான காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் சந்தைச் சந்தியில் இருந்த முட்கம்பி வேலியும் அகற்றப்பட்டுள்ளது.

இதேவேளை விடுவிக்கப்பட்ட பகுதியில் 2 படைமுகாம்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது

 மேலும் இப்பகுதியில் தையிட்டி கணேச வித்தியாலயம் காங்கேசன்துறைச் சந்தியிலிருந்து கிழக்கே ஏறக்குறைய ஒரு மைல் தூரத்தில் உள்ளது. தற்போது இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டுள்ளது இப் பாடசாலை 5 ஆம் ஆண்டுவரையுமான கற்றல் இடம்பெறும் பாடசாலையாகும்.அத்துடன் தையிட்டி வடக்கு பிள்ளையார் கோயில் இடிந்து பற்றைகளால் சூழப்பட்டுள்ளது.

தற்போது இப்பகுதியில் மீள்குடியேறும் மக்களிற்கு இராணுவத்தினர் வெடிபொருட்கள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடாத்தி வருகின்றனர்.

please wait to load slide show and click arrow to see next pic

(படங்கள் இணைப்பு) வடக்கில் விடுவிக்கப்பட்ட பகுதிகளும் திரண்டு செல்லும் மக்களும். (படங்கள் இணைப்பு) வடக்கில் விடுவிக்கப்பட்ட பகுதிகளும் திரண்டு செல்லும்  மக்களும். Reviewed by Madawala News on 11/04/2016 08:01:00 PM Rating: 5