மடவளை, மதீனா தேசிய கல்லூரி பழைய மாணவர் சங்க விஷேட பொதுக்கூட்டம்.



எமது ஊரின் மிகப்பெரிய சொத்துக்களில் ஒன்றாக நாம் எமது மதீனா தேசியக் கல்லூரியைக் கருதுகின்றோம். இதன் வளர்ச்சிக்காக பலர் பாடுபட்டு அதனை ஒரு சாதாரண பாடசாலையில் இருந்து ஒரு தேசியக் கல்லூரியாக மாற்றுவதற்கு பலராலும் முயற்சிகள் செய்யப்பட்டன. மதீனா பல புத்திஜீவிகளை உருவாக்கியது. நாட்டின் எல்லாப் பாகங்களிலும் இருந்தும் இங்கு வந்து கல்வி கற்று வாழ்வில் சிறந்த நிலையில் பலரும் இன்று இருப்பதை நாம் காண்கிறோம்.

இந்த நிலையை தக்க வைப்பதோடு சாதாரண நிலையில் இருந்து உயர்ந்த தரத்திற்கு இப்பாடசாலையைக் கொண்டு வரவேண்டும் என்ற இலக்கில் புதிதாக அமைக்கப்பட்ட பாடசாலை அபிவிருத்திக் குழு, பழைய மாணவர் சங்கம் என்பன அர்ப்பணிப்புடன் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.


ஆயினும் இப்பணியை எம்மால் மாத்திரம் செய்ய முடியும் என்று நாம் கருதவில்லை. எம்மோடு அனைத்து பழைய மாணவர்களும் மதீனாவின் புகழை மேலோங்க செய்ய முன் வருமாறு நாம் அன்புடன் வேண்டுகின்றோம். இவ்வடிப்படையில் ஒழுங்கு செய்யப்பட்ட பழைய மாணவர் சங்க விஷேட பொதுக்கூட்டத்திற்கு அனைத்து பழைய மாணவர்களும் கலந்துக் கொள்ள வேண்டுமென நாம் அன்புடன் வேண்டுகிறோம். இக் கூட்டம்,

'இன்ஷா அல்லாஹ்'
காலம்  : 03.12.2016
நேரம்  : காலை 9.00 மணி
இடம்  : அஷ;ரப் ஞாபகர்த்த மண்டபம்
 மதீனா தேசியக் கல்லூரி, மடவளை பஸார்.



இதில் பிரதானமாக, பழைய மாணவர் சங்கத்தின்
வேலைத்திட்டத்தை சமர்ப்பித்தல்
அங்கத்துவத்தை திரட்டல்
செயற்குழுவுடன் செயற்பட இன்னும் ஒரு குழுவை அமைத்தல்
கலந்துரையாடல், கருத்துரை
என்பன நடைபெறவுள்ளன.
எனவே குறித்த நேரத்தில் உங்கள் அனைவரினதும் வருகையை ஆவலுடன் எதிரப்;பார்க்கின்றோம்.

A.A.M ஜாஸில்
செயலாளர்
மடவளை, மதீனா தேசிய கல்லூரி பழைய மாணவர் சங்க விஷேட பொதுக்கூட்டம். மடவளை, மதீனா தேசிய கல்லூரி பழைய மாணவர் சங்க  விஷேட பொதுக்கூட்டம். Reviewed by Madawala News on 11/28/2016 01:58:00 PM Rating: 5