(படங்கள்) மூன்று நாட்களாக கடும் மழை.. நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கடுமையாக பாதிப்பு.

தோப்பூர் நிருபர் எம்.என்.எம்.புஹாரி

திருகோணமலை மாவட்டத்தின் தோப்பூர் பிரதேசத்தில் மூன்று நாட்களாக தொடர்ச்சியாக அடை மழை பெய்து வருவதினால் வீடுகளுக்குள் நீர் புகுந்து காணப்படுவதோடு பொது மக்களது இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.

வீதிகளில் நீர் நிறைந்து காணப்படுவதினால் சில வீதிகளின் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.


தோப்பூர் பிரதேசத்திள்குட்பட்ட அல்லைநகர், பாலத்தோப்பூர், இக்பால்நகர், செல்வநகர் பள்ளிக்குடியிருப்பு போன்ற கிராமங்களிலுள்ள 100 கணக்கான பொது மக்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இக்கிராமங்களில் நீர் வாடிந்தோடும் வகையில் ஒழுங்கான முறையில் வடிகாண்கள் அமைக்கப்படாமையே இவ்வாறு வீடுகளுக்குள் நீர் புகுவதற்கு பிரதான காரணமென பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.



(படங்கள்) மூன்று நாட்களாக கடும் மழை.. நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கடுமையாக பாதிப்பு. (படங்கள்) மூன்று நாட்களாக கடும் மழை.. நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கடுமையாக பாதிப்பு. Reviewed by Madawala News on 11/06/2016 09:23:00 AM Rating: 5