Ad Space Available here

எனக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை. என் மீது வழக்கு தொடர்ந்தாலும் கவலையில்லை.மத்­திய வங்கி பிணை­முறி தொடர்­பான கோப் குழுவின் அறிக்­கையை சட்­டமா அதி­ப­ருக்கு அனுப்­பி­யுள்ளேன். இனிமேல் சட்­டமா அதிபர், சபா­நா­யகர் ஆகி­யோரே அதி­காரம் செலுத்­துவர். எனது பொறுப்பை நான் உரிய முறையில் நிறை­வேற்றி விட்டேன். தற்­போ­தைய சட்­டமா அதிபர் மீது திருப்தி இல்­லா­விட்டால் சரத் என்.சில்வா­வையோ அல்­லது மொஹான் பீரி­ஸையோ நிய­மித்து விசா­ர­ணையை முன்­னெ­டுக்க முடியும்.

அதனை கட்சித் தலை­வர்கள் தீர்­மா­னிக்­கட்டும். எனக்கு எவ்­வித பிரச்­சி­னையும் இல்லை. என் மீது வழக்கு தொடர்ந்­தாலும் கவ­லை­யில்லை என பிர­தமர் ரணில் விக்கி­ர­ம­சிங்க தெரி­வித்தார்.

அத்­துடன் முன்­னைய ஆட்­சியின் போது இழைக்­கப்­பட்ட மோசடி தொடர்­பிலும் விசா­ரணை செய்ய வேண்டும். இது குறித்து எந்த தக­வலும் இல்லை. மத்­திய வங்­கியை தனியார் மயப்­ப­டுத்தப் போவ­தில்லை என்றும் அவர் குறிப்­பிட்டார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று திங்­கட்­கி­ழமை நடை­பெற்ற 2017 ஆம் ஆண்­டுக்­கான வரவு – செலவுத் திட்­டத்தின் தேசிய கொள்கை, பொரு­ளா­தார அபி­வி­ருத்தி, சட்டம் ஒழுங்கு மற்றும் நீதி அமைச்சு செல­வினம் தொடர்­பி­லான குழு­நிலை விவா­தத்தின் போதே பிர­தமர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் உரை­யாற்­று­கையில்;

மாவட்ட ஒருங்­கி­ணைப்புக் குழுவில் அனைத்து கட்­சி­யி­னரும் இணைத்துக் கொள்­ளப்­பட்­டுள்­ளனர். இதன் மூலம் பாரிய அபி­வி­ருத்தித் திட்­டங்கள் முன்­னெ­டுக்­கப்­படும். கட்சித் தலை­வர்­க­ளுடன் பேசி இதனை மேலும் வலுப்­ப­டுத்த நட­வ­டிக்கை எடுக்­கப்­படும்.

நாட்டின் அனை­வரும் ஒப்­புக்­கொள்ள வேண்­டிய விடயம் தான் கடன் சுமையை அதி­கரிக்க் கூடா­தது என்­ப­தாகும். கட்சித் தேர்­தல்­களின் போதும் நாட்டின் கடன் சுமையை குறைப்போம் என வாக்­கு­றுதி அளித்­தி­ருந்தோம். ஆகவே கடன் சுமையை குறைப்­பது அவ­சி­ய­மாகும். 2019 ஆம் மற்றும் 2020 ஆம் ஆண்­டுகள் வரைக்கும் கடன் சுமை மேலும் அதி­க­ரிக்கும். எனவே கடன் சுமை­யி­லி­ருந்து மக்­களை பாது­காக்க வேண்டும். எவ்­வாறு கடன் சுமையை குறைப்­பது என்­பது தொடர்­பி­லேயே அவ­தானம் செலுத்த வேண்டும்.

எமது அர­சாங்­கத்­திலும் பல குறை­பா­டுகள் உள்­ளன. அதனை நாம் நிவர்த்தி செய்­து­வ­ரு­கின்றோம். வரவு – செலவுத் திட்ட காரி­யா­ல­யத்­தினை பாரா­ளு­மன்றில் நிறு­வ­வுள்ளோம். பாரா­ளு­மன்­றத்தை பலப்­ப­டுத்த உள்ளோம். முன்­னைய ஆட்­சியின் போதும் ஆரம்­பிக்­கப்­பட்ட அபி­வி­ருத்தித் திட்­டங்­க­ளையும் இணைத்து கொண்டு அபி­வி­ருத்தித் திட்­டங்­களை முன்­னெ­டுத்து செல்வோம். கண்டி முதல் மொன­ரா­கலை வரைக்கும் பாரிய அபி­வி­ருத்­தியை முன்­னெ­டுக்க உள்ளோம். துறை­முக நக­ரத்தை நிதி நக­ர­மாக மாற்ற உள்ளோம். இதனை சீனா தூக்கிப் பிடித்து கொண்­டது. ஒழுங்­கு­முறை பிர­காரம் திட்­டத்தை முன்­னெ­டுத்தோம்.

எவ்­வா­றா­யினும் நாட்டின் வளர்ச்சி வீதத்தை 7 சத­வீ­த­மாக உயர்த்­து­வதே இலக்­காகும். சுற்­று­லாத்­து­றையை மேம்­ப­டுத்த உள்ளோம். வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மாண­வர்­களே பாட­சாலைக் கல்­வியை புறக்­க­ணிக்­கின்­றனர். இதன் கார­ண­மா­கத்தான் 13 வருடக் கல்­வியை கட்­டா­ய­மாக்க உள்ளோம். கிரா­மிய கடன் மற்றும் வறுமை எமக்கு பெறும் சவா­லாக உள்­ளது. இதனை நிவர்த்தி செய்ய வேண்டும். கிரா­மிய விவ­சா­யத்தை நவீ­னப்­ப­டுத்த வேண்டும். கிரா­மிய பிரச்­சி­னையை தீர்க்க கிரா­மிய நவீ­ன­ம­யப்­ப­டுத்தல் சபையை நிறு­வ­வுள்ளோம். எமக்கு கிரா­மிய கடன் வழங்கல் முறையின் மீது திருப்தி இல்லை. இதற்கும் நட­வ­டிக்கை எடுக்க வேண்­டி­யுள்­ளது.


முன்­னைய ஆட்­சியின் போதும் ஹெஜின் போன்ற மோச­டிகள் தொடர்­பி­லான விசா­ரணை அறிக்­கை­க­ளுக்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டாமல் உள்­ளன. ஆனாலும் எனது அமைச்சின் மீதுள்ள பிணை­முறி விவ­காரம் தொடர்பில் விசா­ர­ணைக்கு அனு­மதி வழங்­கி­யுள்ளேன்.

கோப் குழுவின் அறிக்­கையை சட்­டமா அதி­ப­ருக்கு அனுப்­பி­யுள்ளேன். சட்­டமா அதி­ப­ருக்கு அனுப்­பாமல் வேறு யாருக்கு அனுப்­பு­வது. இனிமேல் சபா­நா­யகர், சட்­டமா அதிபர் ஆகியோர் மீதே பொறுப்பு சாட்­டப்­பட்­டுள்­ளது. நான் கால­தா­மதம் செய்­ய­வில்லை. இனிமேல் பாரா­ளு­மன்­றமே அதி­காரம் செலுத்தும் எனது பொறுப்பை நிறை­வேற்றி விட்டேன். தற்­போ­தைய சட்­டமா அதிபர் மீது திருப்தி இல்­லா­விட்டால் சரத் என்.சில்­வா­வையோ அல்­லது மொஹான் பீரி­ஸையோ நிய­மித்து விசா­ர­ணையை முன்­னெ­டுக்க முடியும். அதனை கட்சித் தலைவர்கள் தீர்மானிக்கட்டும். எனக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை. என் மீது வழக்கு தொடர்ந்தாலும் கவலையில்லை.

அத்துடன் முன்னைய ஆட்சியின் போது இழைக்கப்பட்ட மோசடி தொடர்பிலும் விசாரணை செய்ய வேண்டும். இது குறித்து எந்த தகவலும் இல்லை. மத்திய வங்கியை தனியார் மயப்படுத்தப் போவதில்லை என்றார்.
எனக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை. என் மீது வழக்கு தொடர்ந்தாலும் கவலையில்லை. எனக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை. என் மீது வழக்கு தொடர்ந்தாலும் கவலையில்லை. Reviewed by Madawala News on 11/22/2016 09:58:00 AM Rating: 5