ஊடகங்கள் சத்தமிடுவதால் எந்த மாற்றமும் ஏற்படாது... நாம் சேர்ந்திருப்பதால் ஊடகங்களுக்கே பாரிய பிரச்சினை உள்ளது.



ஊடகங்கள் சத்தமிடுவதால் எந்த மாற்றமும் ஏற்படப்போவதில்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அகங்கம சிறிசுதர்சி விகாரையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க கருத்து தெரிவித்த போது…

அதிகாரத்தை பெற்றுக்கொள்ளவே நாம் தேசிய அரசாங்கத்தை அமைத்தோம். இந்த நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும். பிரதான இரண்டு கட்சிகளின் பலம் எம்மிடமுள்ளது.

 ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை இல்லாமல் செய்ய வேண்டும் என்ற நோக்கம் எம்மிடம் இல்லை. எம்மை அழிக்க வேண்டும் என்ற நோக்கம் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கும் இல்லை. இரண்டு கட்சிகளும் ஒன்றிணைந்து நாட்டை அபிவிருத்தி செய்ய வேண்டும்.

அதன் பின்னர் சில வேளை எமக்கு அதிகாரம் கிடைக்கலாம். சில வேளை ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு அதிகாரம் கிடைக்கலாம். இல்லா விட்டால் ஜேர்மனியைப் போன்று இரண்டு கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்படவேண்டி ஏற்படும். அதற்கு எதிர்ப்பு தெரிவிப்போரும் உள்ளனர்.

எனினும் ஊடகங்களுக்கே இதில் பாரிய பிரச்சினை உள்ளது. நாம் ஒன்றிணைந்தால் ஊடகங்கள் கவிழ்ந்து விடும் என்று நினைக்கின்றார்கள்.

எனவே ஊடகங்கள் தற்போது திருந்த வேண்டும். அவர்களுக்கு
என்ன நடக்கிறது என்பதனை ஊடகங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.
ஊடகங்கள் சத்தமிடுவதால் எந்த மாற்றமும் ஏற்படாது... நாம் சேர்ந்திருப்பதால் ஊடகங்களுக்கே பாரிய பிரச்சினை உள்ளது. ஊடகங்கள் சத்தமிடுவதால் எந்த மாற்றமும் ஏற்படாது... நாம் சேர்ந்திருப்பதால் ஊடகங்களுக்கே பாரிய பிரச்சினை உள்ளது. Reviewed by Madawala News on 11/06/2016 07:46:00 PM Rating: 5