பக்தகோடிகளை கதிகலங்கச் செய்த ரவூப் ஹக்கீமின் புத்தள உரை.



கே.எ. பாயிஸ் முஸ்லிம் காங்கிரஸில் மீண்டும் இணைந்து கொண்டதை வரவேற்று புத்தளத்தில் நடைபெற்ற எழுச்சி விழாவில் கலந்து கொண்டு அமைச்சர் ஹக்கீம் ஆற்றிய உரை பலரிடத்தில் பலத்த அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக அமைச்சர் ரிஷாத் அவர்களின் ஊழல் தொடர்பில் நகைச்சுவைப் பாணியில் வெளியிட்ட கருத்து அவரையும் அவரது பக்தகோடிகளையும் கதிகலங்கச் செய்துள்ளது. ஏன், வெளிநாடுகளில் வாழும் அவரது எடுபிடிகளையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

அமைச்சர் ஹக்கீம் வெளியிட்ட கருத்தானது இராணுவ ரகசியம் பொதிந்த கருத்தல்ல. அது நாடறிந்த பரகசியம். அமைச்சரும் நடிகருமான ரஞ்சன் ராமநாயக மட்டுமல்ல பலர் அவரது ஊழல் தொடர்பில் கருத்து வெளியிட்டே வந்துள்ளனர்.

ஆனால் அமைச்சர் ஹக்கீம் வெளியிட்ட கருத்துத்தான் அவர்களை ஆட்டங்காணச் செய்துள்ளது. இதற்கான காரணம் புத்தளத்தில் பாயிஸ் முஸ்லிம் காங்கிரஸில் இணைந்து கொண்டமை அவர்களுக்கு பாரிய தலையிடியாக மாறியுள்ளது.

தேர்தல் முறையில் மாற்றம் கொண்டு வரப்படுமாயின் அமைச்சர் றிசாத் அவருக்கு  வன்னியில் போட்டியிட்டு வெற்றி பெற முடியாது. அதற்கு தயார்படுத்தும் முகமாகவே முஸ்லிம் காங்கிரஸில் போட்டியிடத் தயாராக இருந்த நவவியை இரவோடு இரவாக பேரம் பேசி அமைச்சர் ரிசாத் வாங்கி கொண்டதோடு, அவருக்கு தேசியப்பட்டியலும் கொடுத்தார். தேர்தல் முறையில் மாற்றம் வருமாயின் அடுத்த தேர்தலுக்கு அமைச்சர் றிசாத் புத்தளத்திலே போட்டியிட எண்ணியிருந்தார். அது அவருக்கு ஆப்பாக அமைந்துவிடும்.

அவரது கட்சியில் உள்ள ஏனைய எம்பிக்களான கிண்ணியா மஹ்ரூப், அனுராதபுர இஷாக் ஆகியோரும் தேர்தலுக்கு முந்திய இரவில் நடந்த அவசர திருமணத்தில் அவரோடு இணைந்து கொண்டவர்கள்தான். எப்போது அவர்களது திருமண உறவு முறியும் எனத் தெரியாது. இந்நிலையில் அமைச்சர் றிசாத்தின் அரசியல் எதிர்காலம் பலத்த கேள்விக்குறியாகிவிடும்.

இதுவே அவர்களை கலங்கடிக்செய்த பின்னணிக் காரணமாகும். அதுதவிர. தேசிய மட்டத்தில் மட்டுமல்ல, சர்வதேச ரீதியில் பிரபல்யம் வாய்ந்த அமைச்சர் ஹக்கீம் அவரது ஊழல் தொடர்பில் கருத்து வெளியிட்டமையானது மிகப் பெரும் அவமான விடயமாகியும் போய்விட்டது.

இதன் தாக்கம் எந்தளவுக்கு எனில், ஜெனீவாவில் பணியாற்றும் முயீஸ் வஹாப்தீன் என்பவரையே ஆட்டங் காணச் செய்துள்ளது. இதற்கு காரணம் அவரது சொந்த சகோதரருக்கு அமைச்சர் றிசாத்தின் அமைச்சின் திணைக்களம் ஒன்றில் உயர்பதவி வழங்கப்பட்ட நன்றிக்கடனுக்கு மாத்திரமல்ல, கடந்த வாரம் அமைச்சர் றிசாத்தின் ஜெனீவா விஜயத்தின் போது இந்த  முயீஸ் வஹாப்தீன் என்பவரே அவருடன் கூட இருந்திருந்தார்.

ஜெனீவாவில் மனித உரிமை செயற்பாட்டாளராக பணி புரியும் நீங்கள் எப்போது அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஜெனீவா பிரதிநிதியாக மாறினீர்கள். நீங்கள்தானே இராஜதந்திரிகள் உடனான சந்திப்புக்களின் போது அமைச்சருடன் பிரசன்னமாகியிருந்தீர்கள்.

அமைச்சர் றிசாத்தின் ஊழல் ஜெ னீவாவில் தெரிய வந்தால் உங்களது சொகுசு வாழ்க்கை மண் விழுந்து விடும் என்பதாலா இந்தப் பதற்றம்

-ஷபீக் ஹுஸைன்-
பக்தகோடிகளை கதிகலங்கச் செய்த ரவூப் ஹக்கீமின் புத்தள உரை. பக்தகோடிகளை கதிகலங்கச் செய்த ரவூப் ஹக்கீமின் புத்தள உரை. Reviewed by Madawala News on 11/13/2016 05:22:00 PM Rating: 5