Free Space

கல்விக்கான உரிமை திட்டத்தின் ஆரம்பம்... ரோயல் யூத்ஸ் இளைஞர்களின் மற்றொரு முயற்சித்திட்டம்.



அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதஹூ
எமது ரோயல் யூத்ஸ் அமைப்பின் வறிய மாணவர்களுக்கான 2017ஆம் ஆண்டுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கும் "கல்விக்கான உரிமை" திட்டம் அல்லாஹ்வின் அருளால் கடந்த நவம்பர் 07ம் திகதி திங்கட்கிழமை வெற்றிகரமாக ஆரம்பிக்கப்பட்டது.
.
500 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் இந்த திட்டத்தின் முதற்கட்டமாக அக்கரைப்பற்று தமிழ் பிரிவு விபுலானந்தா சிறுவர் இல்லத்தில் வசிக்கும் 40 மாணவர்களுக்கு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.
.
இதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்டமாக நேற்று நவம்பர் 09 திருகோணமலைக்கு மூன்று பாடசாலைகளைச் சேர்த்து 53 வறிய மாணவர்களுக்கு வழங்கப்பட்டன..
இன்ஷா அல்லாஹ் இதனைத்தொடர்ந்து ஆலிம் நகர் பிரதேசத்துக்கு எதிர்வரும் சனிக்கிழமை வழங்க திட்டமிட்டு இருக்கிறது ரோயல் யூத்ஸ். தொடர்ந்து நிந்தவூர், ஒலுவில், அட்டாளைச்சேனை என நீண்டு செல்லும் எமது திட்டமிடலை செவ்வனே கொண்டு செல்ல உங்கள் உதவிக்கரமும் பிரார்த்தனைகளும் தேவைப்படுகின்றன.
.
எத்தகைய வருமானமோ நிதியிடுகையோ இல்லாமல் ஆரம்பிக்கும் ரோயல் யூத்ஸின் திட்டங்கள் இறைவனின் உதவியோடு உங்கள் வலுவான உதவிகளையும் அன்பளிப்புகளையும் கொண்டே வெற்றிகரமாக முடிகின்றது..
இத்தகைய சமுகநலன் கருதி செய்யப்படும் சேவைகள் யாவும் கஷ்டப்படுகின்ற வறிய மக்களுக்காகவே அன்றி வேறில்லை. ஒரு சப்பாத்து சோடியை அண்ணன் தம்பி என்று மாறி மாறி அணிந்து செல்லும் வறிய மக்களும் நம் சமுகத்தில் இருக்கின்றனர் என்பது கவலைக்குரியது..
இதற்கமைவாக மேற் கொள்ளும் இவ் திட்டத்தில் உங்களால் முடிந்தால் நீங்களும் இந்த செயற்றிட்டத்திற்கு பங்குதாரர் ஆகுங்கள்.
.
"நம்பிக்கை கொண்டோரே! பேரங்களும், நட்புறவுகளும், பரிந்துரைகளும் இல்லாத அந்த(இறுதித் தீர்ப்பு) நாள் வருவதற்கு முன்னர், நாம் உங்களுக்கு அளித்தவற்றிலிருந்து (நல்வழிகளில்) செலவு செய்யுங்கள்" [2:254]
.
தொடர்புகளுக்கு :
0094 771990872
ரசாட் - தவிசாளர், 
ரோயல் யூத்ஸ்
0094 771589770 
முஸ்னி - பொதுச்செயலாளர், 
ரோயல் யூத்ஸ்.
.
Bank Details :
Royal Youths
Account Number - 8172006600
Commercial Bank









கல்விக்கான உரிமை திட்டத்தின் ஆரம்பம்... ரோயல் யூத்ஸ் இளைஞர்களின் மற்றொரு முயற்சித்திட்டம். கல்விக்கான உரிமை திட்டத்தின் ஆரம்பம்... ரோயல் யூத்ஸ் இளைஞர்களின் மற்றொரு முயற்சித்திட்டம். Reviewed by Madawala News on 11/10/2016 05:29:00 PM Rating: 5