Kidny

Kidny

வெற்றியின் இரகசியம் பல்லினம் ஒரு தேசம் .. இந்த நாடு எமக்கொரு பாடம்.



சிங்கப்பூரின் மக்கள் தொகை 6 மில்லியன் ஆட்சி அதிகார மொழி ஆங்கிலம் , தமிழ், சீனம் , மலாய் பெரும்பான்மையாக 70% சத வீதம் சீனரகளும் ,  15 % சத வீதம் பூர்விக மலாய் மக்களும் 15% சத வீதம் இந்தியர்கள் உட்பட மற்ற சமூகத்தினர் வாழ்கின்றார்கள்

இவர்கள் அனைவரும் வேற்றுமையே  இல்லாது அங்கு சம உரிமை உண்டு இன மொழி ரீதியான பாகுபாடு கிடையாது.

பல்லினம் ஒரு தேசம்  இதுதான்  சிங்கப்பூரின் குறிக்கோள் அங்கு எந்த துறையில் இருந்தாலும் பாரப ட்சமற்ற  திறமைக்கு மட்டுமே முன்னுரிமை கொடுத்து வளர்ந்து கொண்டிருக்கும் மிக அழகான ஒரு தேசம் தான்  சிங்கப்பூர்.

இலங்கையிலும் இதே விகிதாசாரத்தில் மூன்று இன மக்கள்   வாழ்கிறார்கள் நமக்கு பின்னால்
பின்தங்கியிருந்த சிங்கப்பூர் துரித
வளர்ச்சி அடைந்ததற்கு அங்கு இன முரண்பாடுகளும் சண்டைகளும் இல்லையென்பதும் ஒரு காரணியாகும் ஒரு நாடு முன்னேற்றம் அடைவதற்கு நாட்டின் இஸ்திரத் தன்மையும் பங்கு வைக்கின்றது.

நமது நாட்டில் இன முரண்பாட்டின்   விளைவால் நடை பெற்ற  30 வருட  கோர யுத்தத்தால் பொருளாதாரம் குட்டிச்   சுவரானது மட்டுமல்லாது எத்தனையோ உயிர்கள் அநியாயமாக  காவு கொள்ளப்பட்ட து.

30 வருட யுத்தத்தின் பின்னரும் நமது நாடு பாடம் கற்காமலிருப்பதுதான்  கவலையான விடயம்.

மீணடும் நாட்டில   இன முரண்பாட்டை  ஏற்படுத்துவதற்கு பல சம்பவகள் நடைபெற்று வருகின்றன எதையும் அரசு கண்டு  கொண்டதாக தெரியவில்லை இதே போக்கில் நாடு பயணித்தால் இலங்கை இன்னுமொரு சோமாலியா ஆவது வெகு தூரத்திலில்லை.

BY : M.Y.Irfhan
வெற்றியின் இரகசியம் பல்லினம் ஒரு தேசம் .. இந்த நாடு எமக்கொரு பாடம். வெற்றியின்  இரகசியம்  பல்லினம் ஒரு தேசம் .. இந்த நாடு எமக்கொரு பாடம். Reviewed by Madawala News on 11/08/2016 10:01:00 AM Rating: 5