Free Space

இனப்­பி­ரச்­சினையை தீர்க்க, ஐ.தே.க.வும் சுதந்­திரக் கட்­சியும் தீவிர மந்­தி­ரா­லோ­சனை.



புதிய அர­சி­ய­ல­மைப்பு மற்றும் அதில் உள்­ள­டக்­கப்­ப­ட­வுள்ள இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்­வுத்­திட்டம் உள்­ளிட்ட விட­யங்கள் தொடர்பில் ஐக்­கிய தேசியக் கட்­சிக்கும் சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சிக்கும் இடையில் நேற்று முக்­கிய பேச்­சு­வார்த்தை ஒன்று நடை­பெற்­றுள்­ளது.

பாரா­ளு­மன்ற கட்­டடத் தொகு­தியில் நடை­பெற்ற இந்த சந்­திப்பில் ஐக்­கிய தேசியக் கட்­சியின் சார்பில் பிர­தமர் ரணில் விக்கி­ர­ம­சிங்க தலை­மை­யி­லான குழு­வி­னரும் சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சியின் சார்பில் அமைச்சர் நிமால் சிறி­பால டி சில்வா தலை­மை­யி­லான குழு­வி­னரும் கலந்­து­கொண்­டுள்­ளனர்.

இதன்­போது புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்கும் பணிகள் மற்றும் அதன் முக்­கிய விட­யங்கள் குறித்து விரி­வாக ஆரா­யப்­பட்­டுள்­ளது. அத்­துடன் இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வு மற்றும் தேர்தல் முறை மாற்றம் குறித்தும் இதன்­போது ஆரா­யப்­பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

அர­சி­ய­ல­மப்பை தயா­ரிக்கும் பிர­தான வழி நடத்தல் குழுவின் கீழ் வரு­கின்ற ஆறு உப குழுக்­களின் அறிக்­கைகள் தற்­போது பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்­ளது. அவற்றின் மீதான விவாதம் எதிர்­வரும் ஜன­வரி மாதம் நடை­பெ­ற­வுள்­ளது.

இந்­நி­லை­யி­லேயே அடுத்­தக்­கட்ட நட­வ­டிக்­கைகள் தொடர்பில் நேற்றைய தினம் ஐக்கிய தேசிய கட்சிக்கும் சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
இனப்­பி­ரச்­சினையை தீர்க்க, ஐ.தே.க.வும் சுதந்­திரக் கட்­சியும் தீவிர மந்­தி­ரா­லோ­சனை. இனப்­பி­ரச்­சினையை தீர்க்க, ஐ.தே.க.வும் சுதந்­திரக் கட்­சியும் தீவிர மந்­தி­ரா­லோ­சனை. Reviewed by Madawala News on 11/30/2016 11:08:00 AM Rating: 5