Accaddemy

ஸ்ரீலங்கன் எயார்லைன்சுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி.



ஸ்ரீலங்கன் எயார்­லைன்ஸால் ஏ–350 விமா­ன­மொன்றைக் கொள்­வ­னவு செய்­வ­தற்­காக மேற்­கொள்­ளப்­பட்ட உடன்­ப­டிக்­கையை இரத்துச் செய்­வ­தற்­காக நெதர்­லாந்து நிறு­வ­ன­மொன்­றுக்கு செலுத்­தப்­பட்­ட­தாக கூறப்­படும் சர்ச்­சைக்­கு­ரிய 98 மில்­லியன் அமெ­ரிக்க டொலர் அல்­லது 14.5 பில்­லியன் ரூபா­வுக்கு அதி­க­மான கட்­டணம் தொடர்பில் தற்­போது நெருக்­கடி நிலை ஏற்­பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

இந்த விவ­கா­ரத்­துடன் தொடர்­பு­பட்ட நெதர்­லாந்து நிறு­வ­ன­மான ஏரோகப், நிபந்­த­னை­களை உள்­ள­டக்கி தான் 98 மில்­லியன் டொலர் என்ற குறை­வான தொகைக்கு இணங்­கி­யி­ருந்­த­தாகக் குறிப்­பிட்டு இலங்கை அர­சாங்கம் அது தொடர்­பான மேல­திக நிபந்­த­னை­களை பூர்த்­தி­செய்ய வேண்டும் என வலி­யு­றுத்­தி­யுள்­ளது.

அதில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அந்தக் கம்­ப­னி­யி­ட­மி­ருந்து இரண்­டா­வது விமா­ன­மொன்றை குத்­த­கைக்குப் பெற வேண்டும் என்ற வலி­யு­றுத்­தலும் ஒன்­றாகும்.

அதற்கு மேல­தி­க­மாக இலங்­கையால் குத்­த­கையின் கீழ் செயற்­ப­டுத்­தப்­பட்டு வரும் விமா­ன­மொன்­றுக்­கான காலத் தவணை அதி­க­ரிக்­கப்­பட வேண்டும் எனக் கோரப்­பட்­டுள்­ளது.

இந்த விட­ய­மா­னது அண்­மையில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் தலை­மையில் இடம்­பெற்ற பொரு­ளா­தார முகா­மைத்­துவம் தொடர்­பான அமைச்­ச­ரவைக் கூட்­டத்தில் முன்­வைக்­கப்­பட்­ட­தா­கவும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

 இதன்­போது ஏரோகப் நிறு­வ­னத்­தி­ட­மி­ருந்து கடி­தத்தைப் பெற்­றுள்ள ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறு­வ­னத்­துக்கு இது தொடர்பில் சட்­டத்­த­ர­ணிகள் நாய­கத்தின் ஆலோ­ச­னையை நாட பரிந்­துரை செய்­யப்­பட்­டுள்­ளது.

அத்­துடன் மேற்­படி ஏரோகப் நிறு­வ­னத்­துக்­கான கட்­டணம் சர்­வ­தேச நாணய நிதி­யத்தின் நிபந்­த­னை­க­ளுக்கு அமை­வா­க­வுள்­ள­தாக என்­பது குறித்து சரி­பார்க்­கவும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறு­வ­னத்­துக்கு ஆலோ­சனை வழங்­கப்­பட்­டுள்­ள­தாக தெரி­ய­வ­ரு­கின்­றது.

மேலும் ஏரோகப் நிறு­வன பிர­தி­நி­தி­க­ளுக்கு நிபந்­த­னை­களை உள்­ள­டக்கி எழுத்து மூல­மான அறிக்­கையைச் சமர்ப்­பிக்க நிதி அமைச்­ச­ருக்கு அறி­வு­றுத்­தப்­பட்­டுள்­ளது.

அதேசமயம் சில தொழிற்றுறை வட்டாரங்கள் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் இவ்வாறு ஒப்பந்தத்தை இரத்துச் செய்வதற்காக 98 மில்லியன் அமெரிக்க டொலரைக் கட்டணமாக செலுத்துவதற்குப் பதிலாக அவுஸ்திரேலிய வான் மார்க்கத்தில் ஏ–350 விமானமொன்றைப் பெற்று செயற்படுத்துவது சிறந்தது எனத் தெரிவிக்கின்றன.
ஸ்ரீலங்கன் எயார்லைன்சுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி. ஸ்ரீலங்கன் எயார்லைன்சுக்கு ஏற்பட்டுள்ள  நெருக்கடி. Reviewed by Madawala News on 11/21/2016 01:10:00 PM Rating: 5