ஹிலாரியின் தோல்விக்கு காரணம் தேடியவர்களுக்கு கிடைத்த அதிர்ச்சி.



அபூஸாலி முஹம்மத் சுல்பிகார் --அக்கரைப்பற்று

உலகின் மிகப்பெரிய சமூக வலைதளமாக பேஸ்புக் நிறுவனத்தின் தலைமை அலுவலகம் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ளது. உலகெங்கிலும் பலகோடி பேர் பேஸ்புக் வலைதளத்தில் இயங்கி வருகின்றனர்.

இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனால்டு டிரம்பின் வெற்றிக்கு ஆதரவாக பேஸ்புக் வலைதளம் செயல்பட்டதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது.

நியூயார்க் நகரில் வெளியாகும் இதழ் ஒன்றில் எழுத்தாளர் ஒருவர், “டிரம்புக்கு போப்பாண்டவர்  ஆதரவு அளித்துள்ளார். ஹிலாரி கிளிண்டன் சட்டத்திற்கு புறப்பாக 137 மில்லியன் டாலர் மதிப்பில் ஆயுதங்கள் வாங்கியுள்ளார், மாலத்தீவில் கணவன்-மனைவி இருவரும் 200 மில்லியன் டாலர் மதிப்பிலான வீட்டினை வாங்கியுள்ளனர் என்பது போன்ற பல்வேறு போலியான கதைகளை பேஸ்புக் வெளியிட்டு வந்துள்ளது” என்று எழுதியிருந்தார்.

இதுபோன்று பல்வேறு தரப்பினரும் பேஸ்புக் நிறுவனம் தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்தி டிரம்ப் அதிபராக வெற்றி பெறுவதற்கு உதவியதாக குற்றம்சாட்டியுள்ளனர்.

முன்னதாக பல்வேறு கருத்துக்கணிப்புகளை தவிடுபொடியாக்கி ஹிலாரி கிளிண்டனை தோற்கடித்து, டொனால்டு டிரம்ப் அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹிலாரியின் தோல்விக்கு காரணம் தேடியவர்களுக்கு கிடைத்த அதிர்ச்சி. ஹிலாரியின் தோல்விக்கு காரணம் தேடியவர்களுக்கு   கிடைத்த அதிர்ச்சி. Reviewed by Madawala News on 11/11/2016 07:30:00 PM Rating: 5