கண்டி பதிஉத்தீன் முஸ்லிம் மகளிர் கல்லூரி மாணவி பாதிமா ஷைமா தேசிய ரீதியில் சாதனை.



2016 ஆம் ஆண்டிற்கான தேசிய மீலாத் விழாவின் இறுதிப்போட்டியில், சிரேஷ்ட பிரிவு ஆங்கில மொழி பேச்சுப் போட்டியில் கண்டி பதிஉத்தீன் முஸ்லிம் மகளிர் கல்லூரி மாணவியான பாதிமா ஷைமா மூன்றாவது தடைவயாக தேசிய ரீதியில் முதலாம் இடம் பெற்றுள்ளார்.

இவர் ஏற்கெனவே கடந்த 2013 மற்றும் 2011ம் ஆண்டுகளில் நடைபெற்ற தேசிய மீலாத் விழாவின் ஆங்கில மொழி பேச்சுப் போட்டிகளில் கனிஷ்ட பிரிவில் முதலிடமும்,  2011ம் ஆண்டில் இரண்டாம்  இடமும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கண்டி பதிஉத்தீன் முஸ்லிம் மகளிர் கல்லூரியில் க.பொ.த உயர்தர உயிரியல் விஞ்ஞானப் பிரிவு மாணவியான பாதிமா ஷைமா, கடந்த 2015ம் ஆண்டு க.பொ.த சாதாரனதர பரீட்சையில் 8A, 1B என்ற சிறந்த பெறுபேற்றைப் பெற்று சித்தியடைந்தார்.

தனது சாதனைகளுக்காக அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் இம்மாணவி,  கடுகஸ்தோட்டை,  இனிகலையைச் சேர்ந்த அஷ்ஷெய்க் சம்ரா மரிக்கார் (நளீமி, எம்.ஏ) தம்பதிகளின் புதல்வியாவார்.

இதன் மூலம் இவர் தனது பாடசாலைக்கும் ஊருக்கும் பெருமை சேர்த்து தந்துள்ளார்.


கண்டி பதிஉத்தீன் முஸ்லிம் மகளிர் கல்லூரி மாணவி பாதிமா ஷைமா தேசிய ரீதியில் சாதனை. கண்டி பதிஉத்தீன் முஸ்லிம் மகளிர் கல்லூரி மாணவி பாதிமா ஷைமா தேசிய ரீதியில் சாதனை. Reviewed by Madawala News on 11/09/2016 11:27:00 AM Rating: 5