Free Space

வெளிச்சம் நிகழ்ச்சியில் பிரதியமைச்சர் ஹரீஸ் அவர்கள் உண்மையொன்றை பகிரங்கமாக கூறினார்.



சர்ச்சைக்குறிய விடயம்தான் என்றாலும், இந்த இடத்தில் ஒன்றை நான் கூறியே ஆகவேண்டும் என்றும்,

அதனை பாராளமன்ற உறுப்பினர் ஸ்ரீதரனிடம் கேட்க விரும்புகின்றேன் என்றும், பிரதியமைச்சர் ஹரீஸ் அவர்கள் கூறியவிடயம் என்னவென்றால்.
வடகிழக்கு இணைப்பு விடயத்தில் தமிழ் தரப்பினர் மிகவும் நம்பிக்கையோடு உள்ளனர் என்பது உண்மைதான் என்றாலும்,
அதற்கான காரணம், எங்கள் கட்சிச் தலைமையும், வட கிழக்கு இணைப்புக்கு, கொள்கையளவில் உடன்பட்டிருப்பதுடன்,

நாங்கள் ஜனாதிபதி,பிரதமர், சம்பந்தன் ஐயா, அவர்களின் முன்பாக வடகிழக்கு இணைப்புக்கு சம்மதம் தெறிவித்ததும், உங்களுக்கு நம்பிக்கையை தந்திருக்கலாம்,

அப்படி நிலைமை இருக்கும்போது,
ஏன் நீங்கள் வரலாற்றுத் தவறை விடுகின்றீர்கள் என்று ஸ்ரீதரனிடம் கேள்வி எழுப்பினார்.

முஸ்லிம்களும், தமிழர்களும் ஒன்றாக இருக்கவேண்டும் என்று விரும்பும்
நீங்கள்.அதோடு
வடக்கும், கிழக்கும் இணைவதற்கு முஸ்லிம்களின் ஆதரவை பெற்றிருக்கும் நீங்கள்.

சர்ச்சைக்குறிய கருத்துக்களை கூறி, இதற்கு முட்டுக்கட்டையாக நீங்கள் இருக்கின்றீர்கள் என்பதை, நான் இந்த இடத்தில் கூறியே ஆகவேண்டும்.
ஏன் கூறுகின்றேன் என்றால்,

அண்மையில் கோடீஸ்வரன் எம்.பி.அவர்கள் பாராளமன்றத்தில், கரையோர மாவட்டம் பெறுவதற்கு நான் தடையாக இருப்பேன் என்றும்,


அதே நேரம்,
சிங்கள மக்களோடு நாங்கள் வாழ்ந்தாலும் முஸ்லிம் மக்களோடு எங்களால் வாழமுடியாது என்றும் கோடீஸ்வரன் எம்.பி.கூறியதாக கூறினார்.
மேலும் கல்முனை என்ற பெயரை உச்சரிப்பதற்கு, கல்முனை முஸ்லிம்களுக்கு எந்த  உரிமையும் இல்லை என்று,
கோடீஸ்வரன் எம்பி பேசுவது நியாயமாகுமா?

என்றும், பாராளமன்ற உறுப்பினர் ஸ்ரீதரனிடம், பிரதியமைச்சர் ஹரீஸ் அவர்கள் கேள்வியாக கேட்டுவிட்டு,

இப்படி எங்களோடு அம்பாரை மாவட்டத்தில் இணைந்து வாழமுடியாது என்று உங்களுடைய தமிழ் பாராளமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் பேசினார் என்றால்.

நாங்கள் எப்படி வடகிழக்கு இணைப்புக்கு ஆதரவு அளிப்பது என்று ஸ்ரீதரனிடம கேள்வி எழுப்பினார்.

இந்த விடயத்தில் பிரதியமைச்சர் ஹரீஸ் அவர்கள், வடகிழக்கு இணைப்புக்கு கொள்கையளவில் தனது கட்சி ஏற்கனவே ஒத்துக்கொண்டவிடயத்தை மிகத் தெளிவாக, ஒத்துக்கொண்டுள்ளது
என்பது, இவ்விடத்தில் தெளிவாகின்றது.

ஆகவே, முஸ்லிம் காங்கிரஸ் இதுவரை வடகிழக்கு இணைப்பு சம்பந்தமாக நாங்கள் எந்த முடிவையும் எடுக்கவில்லை என்று  கூறிவந்தது.
அது மட்டுமல்ல, அப்படி கூறியவர்களுக்கு எதிராக கடும் கண்டனத்தையும், அந்த கட்சியின் தலைமை அண்மையில் தெறிவித்திருந்தது, என்பதையும் நாம் அறிந்திருந்தோம்.

அதற்கெல்லாம், வெளிச்சம் நிகழ்ச்சியில் பிரதியமைச்சர் ஹரீஸ் அவர்கள் முற்றுப்புள்ளி வைத்து விட்டார் என்பது தெளிவாகிவிட்டது.

ஆகவே, இதற்கு பிற்பாடு முஸ்லிம் சமூகம், இந்த விடயத்தில் என்ன முடிவை எடுக்கப் போகின்றார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்...
எம்.எச்.எம்.இப்ராஹிம்
கல்முனை..

வெளிச்சம் நிகழ்ச்சியில் பிரதியமைச்சர் ஹரீஸ் அவர்கள் உண்மையொன்றை பகிரங்கமாக கூறினார். வெளிச்சம் நிகழ்ச்சியில் பிரதியமைச்சர் ஹரீஸ் அவர்கள் உண்மையொன்றை பகிரங்கமாக கூறினார். Reviewed by Madawala News on 11/19/2016 08:32:00 PM Rating: 5