Free Space

பொது பலசேனாவின் கேள்விகள் ஜம்மியத்துல் உலமாவை நோக்கி... "மீண்டும் ஒரு அரசியல் காய் நகர்தலாகவே பார்க்கப்பட வேண்டும்"



அவர்கள் நன்றாகவே முஸ்லிம்ளைகயும் முஸ்லிம் இயக்கங்களையும் நாடி பிடித்து வைத்து இருக்கிறார்கள். ஜம்மியத்துல் உலமா சபையின் பதில்களையும் , தீவிர போக்குகளை கொண்ட இஸ்லாமிய அமைப்புகளை ஏற்று கொள்ள போவதில்லை.

முஸ்லிம் சகோதர இயக்கங்களுக்கு இடையில் குழப்பங்களை உண்டு பண்ணி அதில் குளிர்காய நினைக்கிறார்கள். உண்மையை சொல்லுவதென்றால் அவர்களின் எதிர்பார்ப்பும் இதுவே.

முஸ்லிம் அமைப்புகளோ/இயக்கங்களோ, பொது பலசேனாவின் கேள்விகளுக்கு உரிய முறையில் பதில் அழிக்கப்படுமிடத்து இஸ்லாம் பற்றிய புரிதலை வழங்கக்கூடிய மிகப்பெரும் சந்தர்ப்பமாக பார்க்கிறார்கள்.

ஆனால், பொதுபலசேனா மற்றும் அதனை சார்ந்த பேரினவாத இயக்கங்கள் மற்றும் அதற்கு ஆதரவான அரசியல்வதிகள் என்று எல்லோருமாக, ஜம்மியத்துல் உலமாவின் பதிலை வரலாற்று ஆவணமாக தொகுத்து அதனை வைத்து கொண்டு பேரினவாதத்திற்கு அடித்தளமிடுவது மட்டுமில்லாமல் பேரினவாதத்திற்கு ஆதரவான கருத்துக்களை வெளியிட்டு மக்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்த திட்டமிடுகிறார்கள்.

இவ்விருமுனை போராட்டத்தை  தாங்கிய வடிவமாகவே பொதுபலசேனாவின் கடிதம் ஜம்மியத்துல் உலமாவின் கையை சென்றடைந்து இருக்கிறது.

இன்று பல பேர் ஜம்மியத்துல் உலமாவுக்கு பாடம் எடுக்கிறார்கள். இப்படியான சந்தர்ப்பங்களில் ஜம்மியத்துல் உலமாவுடன் சேர்ந்து, இதை ஒரு சமூகப்பணியாக கருதி வேலை செய்வதற்கு தயாரில்லை. எங்களுக்கு பொறுப்பை தாருங்கள் நாங்கள் பதில் அளிக்கிறோம் என வேடிக்கையாக பேசிக்கொண்டு காலத்தை கடத்துகிறார்கள்.

இதில் யார் முன்னேற்றம் காணுவார்கள் என்பது ஒரு புறமிருக்க, தெளிவுபடுத்தலுக்கான முயற்சியை செய்ய வேண்டியது நமது கடமை. அது மட்டுமே எம்மால் முடியுமானது. கொடுக்கப்படும் பதில்களை ஏற்று கொள்ள வைப்பது  என்பது  நமது கைகளில் தங்கி இல்லை என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.

உதவி செய்ய முடியாவிட்டாலும் உபத்திரம் செய்யாமல் இருப்பதே சிறந்தது.

மனாப் அஹமத் றிசாத் 
அக்கரைப்பற்று 
பொது பலசேனாவின் கேள்விகள் ஜம்மியத்துல் உலமாவை நோக்கி... "மீண்டும் ஒரு அரசியல் காய் நகர்தலாகவே பார்க்கப்பட வேண்டும்" பொது பலசேனாவின் கேள்விகள் ஜம்மியத்துல் உலமாவை நோக்கி...  "மீண்டும் ஒரு அரசியல் காய் நகர்தலாகவே பார்க்கப்பட வேண்டும்" Reviewed by Madawala News on 11/30/2016 02:07:00 PM Rating: 5