பள்ளிவாசல்களுக்கு சவூதி அரசாங்கத்தினால் நிதி உதவி பெற்றுக்கொள்ள நடவடிக்கை.



(எம்.எம்.ஜபீர்)
அம்பாரை மாவட்டத்தில் நிர்மாணிக்கப்பட்டுவரும் பள்ளிவாசல்களுக்கு சவூதி அரசாங்கத்தினால் நிதி உதவி வழங்க  இலங்கைக்கான சவூதி தூதரக உயர் அதிகாரிகள் குழுவினர் நேரில் விஜயம் மேற்கொண்டு பள்ளிவாசல்களை இன்று (18) பார்வையிட்டனர்.

இதன்போது மாவடிப்பள்ளி ஜும்ஆப் பள்ளிவாசல், சம்மாந்துறை கைர் பள்ளிவாசல், இறக்காமம் ஜும்ஆப் பள்ளிவாசல், வரிப்பத்தான்சேனை ஜும்ஆப் பள்ளிவால் ஆகிய பள்ளிவாசல்கள் நிர்மாணிக்கப்பட்டுவகின்ற இவ்பள்ளிவாசலின் குறைபாடுகளை பள்ளிவாசல் நிர்வாகத்திடம்  சவூதி அரேபியாவின் இலங்கைக்கான தூதரக முஸ்லிம் விவகாரப் பிரிவின் தலைவர் அலி அலோமாரி கேட்டரிந்து கொண்டார்.

இவ் விஜயம்  கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், சவூதி தூதரகத்தின் மக்கள் தொடர்பு அதிகாரியுமான ஐ.எல்.எம்.மாஹிரின் ஏற்பாட்டில்  சவூதி அரேபியாவின் இலங்கைக்கான தூதரக முஸ்லிம் விவகாரப் பிரிவின் தலைவர் அலி அலோமாரி மற்றும்  கிழக்கு மாகாண முதலமைச்சர்  ஹபீஸ் நஸீர் அஹம்மட்,  கிழக்கு மாகாண அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர் மற்றும் பிரதேச செயலாளர் உள்ளிட்ட கலந்துகொண்டனர்.
பள்ளிவாசல்களுக்கு சவூதி அரசாங்கத்தினால் நிதி உதவி பெற்றுக்கொள்ள நடவடிக்கை.  பள்ளிவாசல்களுக்கு சவூதி அரசாங்கத்தினால் நிதி உதவி பெற்றுக்கொள்ள நடவடிக்கை. Reviewed by Madawala News on 11/19/2016 08:30:00 AM Rating: 5