துரிதப் படுத்தப்படும் இலங்கையின் மூன்றாவது குடியரசு அரசியலமைப்பு வரைபும், எமது கடமையும்.


-மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்-

இலங்கையின் மூன்றாவது குடியரசு அரசியலமைப்பு வரைபு துரிதப் படுத்தப் படுகின்றது, பாராளுமன்ற உப குழுக்கள் தமது அறிக்கைகளை சமர்பித்துள்ளன.

அடிப்படை உரிமைகள், நீதித்துறை, நிதி, சட்டமும் ஒழுங்கும், பகிரங்க சேவை மற்றும் மத்திய - பிராந்திய தொடர்புகள் ஆகிய விடயப்பரப்புக்கள் பற்றி விதப்புரை செய்வதற்காக ஆறு உப குழுக்கள் அரசியலமைப்புச் சபையினால் நியமிக்கப்பட்டன. இவ் உபகுழுக்களின் அறிக்கைகள் இன்னமும் வழிப்படுத்தும் குழுவினால் கலந்துரையாடப்படவில்லை. இந்த அறிக்கைகள் அரசியலமைப்புச் சபையின் பரிசீலனைக்காக சமர்ப்பிக்கப்படுகின்றன.
பல்வேறு முக்கிய விடயப்பரப்புக்கள் தொடர்பாக பல ஒத்த விதப்புரைகள் காணப்பட்ட போதும், குறித்த சில அம்சங்களில் வேறுபடும் முன்மொழிவுகளையும் உப குழுக்களின் அறிக்கைகள் கொண்டுள்ளமை தவிர்க்க முடியாததே.

உபகுழு அறிக்கைகள்மற்றும் அவை பற்றிய கருத்துக்கள் ஆகியவற்றைவழிப்படுத்தும் குழு அதன் இறுதி அறிக்கையைத் தயார் செய்தலில் பரிசீலிக்கும்.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த பணியில் தேசத்திற்கும் சமூகத்திற்குமான எங்கள் பங்களிப்பை நாங்கள் எமது அரசியல் தலைமைகள் செய்தல் கட்டாயமாகும்.

முஸ்லிம் அரசியல் கட்சிகள், தென்கிழக்குப் பலகலைக் கழக அரசியல் பீடம், இலங்கை சட்டக் கல்லூரி முஸ்லிம் மஜ்லிஸ், ஏனைய பல்கலைக் கழக சட்ட பீடங்கள், முஸ்லிம் சட்டத்தரணிகள் சங்கம் ஆகியன அரசியல் யாப்பு நிபுணர்களை அழைத்து சிறுபான்மை சமூகங்கள் சார்ந்த முன்மொழிவுகளை ஆராய வேண்டும்.

இலங்கைப் பாராளுமன்றம் (05/04/2016) முதல் அரசியலமைப்பு சபையாக மாற்றப்பட்டு மூன்றாவது குடியரசு அரசியலமைப்பு வரையப் பட்டுக் கொண்டிருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
1970 ஆண்டு ஐக்கிய முன்னணி அரசின் தலைவியாக பிரதமராக இருந்த ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க அம்மையார் ஒரு அரசியலமைப்பு குழுவை நியமித்து முதலாவது குடியரசு அரசியலமைப்பை வரைந்து 1972 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20 ஆம்திகதி பாராளுமன்றத்தில் அறிமுகம் செய்தார். இலங்கை பிரித்தானிய மேலாண்மையிலிருந்து முழுமையாக விடுபட்ட குடியரசாக பிரகடனம் செய்யப்பட்டது, பாராளுமன்றம் தேசிய அரச பேரவை என அறிமுகம் செய்யப்பட்டது.


1977 ஆம் ஆண்டு ஜேஆர் ஜெயவர்த்தனா அவர்களின் தலைமையில் ஆறில் ஐந்து பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்த ஐக்கிய தேசியக் கட்சி அரசு 1978 ஆம் ஆண்டு செப்டம்பர் 7 ஆம் திகதி நிறைவேற்று அதிகாரங்களுடன் கூடிய ஜனாதிபதி முறை அறிமுகம் செய்யப்பட்ட இரண்டாவது குடியரசு அரசியல்யாப்பினை அறிமுகம் செய்தது, இன்றுவரை அதில் 19 திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.


புதிய அரசியல் சாசன வரைபு தயாரிக்கப்பட்டதன் பின்னர் பாராளுமன்ற அங்கீகாரத்துடன் ஜனாதிபதி அவர்கள் புதிய அரசியல் சாசனத்தை பொதுசன அபிப்பிராய வாக்கெடுப்பின் பின்னர் நாட்டின் குடியரசு அரசியல் சாசனமாக அதனை பிரகடனம் செய்வார்.
துரிதப் படுத்தப்படும் இலங்கையின் மூன்றாவது குடியரசு அரசியலமைப்பு வரைபும், எமது கடமையும். துரிதப் படுத்தப்படும் இலங்கையின் மூன்றாவது குடியரசு அரசியலமைப்பு வரைபும், எமது கடமையும். Reviewed by Madawala News on 11/28/2016 09:46:00 AM Rating: 5