Ad Space Available here

இலங்கையர்களாகிய எங்களுக்கு இது ஒரு புதிய அனுபவம்... பாராளுமன்றில் அங்கஜன் இராமநாதன்.பாறுக் ஷிஹான்

இளம் சந்ததியினரை வலுப்படுத்தி இளைஞர்களின் எதிர்காலத்திற்கு  நன்மை பயக்கக்கூடிய  வரவுசெலவுத்திட்டமாக இம்முறை வரவுசெலவுத்திட்டம்   அமைந்துள்ளதாக  பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன்  தெரிவித்துள்ளார்.

2017 ஆம் ஆண்டு வரவு செலவு திட்டம் தொடர்பாக நேற்றைய தினம்(17)  பாராளுமன்றில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

 கடந்த காலத்தில் இருந்து மீண்டு புத்தாக்க அடிப்படையிலான பொருளாதாரத்தை பெறும் எமது நோக்கத்தை அடைவதே எமது அணுகுமுறையாகும். 2016ம் ஆண்டு வரவுசெலவு திட்டத்தில் காணப்பட்ட 5.4 சதவீதத்திலும் பார்க்க  4.6  சதவீதம் பற்ராக்குறையையே 2017 ம் ஆண்டு வரவுசெலவுத்திட்டத்தில் காண முடிகின்றது. வரவுசெலவு திட்டத்தில் குறைந்து காணப்படும் பற்றாக்குறையானது அதிகரித்து வரும் தேசிய கடன் தொகையை தாமதப்படுத்தி  கடன் தொகை மற்றும் வட்டியை செலுத்தும் தேசிய வருமானத்தில் தாக்கம் செலுத்துகிறது.

        சவால்களுடனான பொருளாதாரம் அதிகமான வேலைவாய்ப்பின்மை மற்றும் மீண்டும் இலங்கையில் பொருளாதார கட்டமைப்பினை இயக்குதல் என்பவற்றை மேம்படுத்தும் பொறுப்பினை நோக்கமாக கொண்டு இலங்கை மக்கள் இந்த அரசாங்கத்தை தெரிவு செய்திருக்கின்றனர்.

புதிய சிறந்த எதிர்காலத்தை நோக்கி செயற்படுவதற்கான மாற்றத்தினை அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் மாண்பு மிகு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம்  ஏற்ப்படுத்தி வருகின்றது சர்வதேச மட்டத்தில் எமக்கு அளப்பரிய கீர்த்தியை பெற்றுள்ளதோடு எமது அதிமேதகு ஜனாதிபதி சிதறிக்கிடந்த எமது சர்வதேச உறவினை மீளமைத்துளார் ஆனால் இது முளுமையடையாவிடினும் செயற்பாடுகள் திருப்தியாகவே காணப்படுகின்றது .


 நாட்டின் வரவு செலவுத்திட்டம் வெறுமனே எண்ணிக்கையல்ல ஆனால் எமது விழிமியங்கள் மற்றும் எதிர்பார்ப்புக்களை வெளிப்படுத்தி எமது நோக்கினை செயற்படுத்தும் விடயமாகும்.

எமது தலைமைத்துவத்தின் தூர நோக்கு ஆசிய பிராந்தியத்தில் பலமான உயர் வருமானத்தை கொண்ட பொருளாதரத்தை கொண்ட நாடு என்பதை பிரதிபலிகின்றது அத்துடன் பத்து இலட்சம் வேலை வாய்ப்பு வருமான மட்டம் அதிகரித்தல் மற்றும் கிராமிய பொருளாதார அபிவிருத்தி மற்றும் காணி உரிமையை உறுதிப்படுத்துதல் என்பவற்றை குறித்து நிற்கின்றது


     பல தசாப்தங்களாக முரண் பட்டிருந்த இரு பெரும் கட்சிகளான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஜகிய தேசிய கட்சியும் ஒன்றிணைந்து தேசிய அரசாங்கத்தை அமைத்தது மட்டுமலாமல் தமது சிறந்த எண்ணக்கருத்துக்கள் கொண்ட தேசிய வரவு செலவுத்திட்டத்தையும் முன்மொழிந்துள்ளன இலங்கையர்களாகிய எங்களுக்கு இது ஒரு புதிய அனுபவம் ஆகும் .

இந்த வரவு செலவுத்திட்டம் பல பிரச்சனைகள் அதாவது விவசாயம் கைத்தொழில்   உல்லாசத்துறை வர்த்தகத்துறை முதலீடு கல்வி உட்கட்டமைப்பு அபிவிருத்தி மற்றும் புத்தாக்க செயற்பாடுகளை பிரதிபலிக்கின்றது இந்த வகையில் பொருளாதாரம் ஒரு பலமான நீடிக்கத்தக்க வகையில் கட்டி எழுப்பப்பட்டுள்ளது.

நான் முன்னும் இந்த பாராளுமன்றத்தில் தெரிவித்த விடயமாகிய சந்ததி சந்ததியாக நாம் முதலாம்தர நாடுகளுடன் ஒப்பிட்டு அவர்களை போன்று நாமும் வரவேண்டும் என்று அடிக்கடி பேசிக்கொண்டிருந்தோம் .

ஆனால் எமக்கு நீண்ட கால திட்டங்கள் இருக்கவில்லை கடந்த தசாப்தங்களில் நாம் மேற்கொண்டிருந்த விடையங்களை மீள நடைமுறைப்படுத்தி ஒரு நன்மையையும் பெறமுடியாது என்பதை நான் அறிவேன் அதாவது 30 முதல்  50 வருடங்களுக்கு முன்னர் பழைய பாரம்பரிய கைத்தொளில்களையே மேற்கொண்டிருந்தோம் நாடு என்ற ரீதியில் எமக்கு புதிய உபாய மார்கங்கள் அவசியம் அதன் மூலம் நாம் நன்மையடையலாம்.


 கடந்த காலங்களை போல் அல்லாமல் இந்த வரவுசெலவுத்திட்டம் விஞ்ஞானம் தொளில்நுட்பம் புத்தாக்க செயல்பாடுகளுக்கான முதலீடுகளில் கவனம் செலுத்துகின்ற புரட்சிகரமான வரவுசெலவுத்திட்டமாகும் தொடர்புபடுத்தல் அதிகாரம் கணணி அறிவு API’S போன்ற DIGITAL புரட்சியில் நான் அதீத நம்பிக்கை கொண்டவன் .

பெரிய பெரிய இத்தகைய தரவுகள் பழமையான வர்த்தகமுறையை நீக்கி புதிய பொருளாதார முறைமையில் தொழில் சவால்களையும் புதிய வர்த்தக வாய்ப்புக்களையும் ஏற்படுத்துகிறது

நான்காவது  கைத்தொழில் புரட்சி ஒரு புதுமையான மாற்றத்தை ஏற்படுத்துவதர்கான  ஒரு திருப்பு முனையாகும் காணி கட்டிடம் முதலீடு மற்றும் பாரம்பரிய எண்ணங்கள் பொருளாததாரத்தை ஏற்படுத்தாது ஆனால் இருந்த பெரிய பொருளாதாரம் அறிவு தொழில்நுட்ப உற்பத்தி மற்றும் உலக சந்தைகளில் தான் தங்கி உள்ளது .

       கல்வி சுகாதாரத்தில் ஒதுக்கீடுகள் குறைகப்பட்டுள்ளமை பற்றிய உரையாடல்கள் இடம் பெறுகின்ற போதிலும் முதலீடு மற்றும் செலவீட்டு செலவீனங்களுக் கிடையேயான நுட்பமே முக்கியம் என்பது எனது அபிப்பிராயம் முதலீட்டு செலவீனங்களின் அதிகரிப்பு சதவீதத்தை செலவீட்டு செலவீன குறையுடன் ஒப்பிட்டு பார்க்கும்படி எனது சக பாராளுமன்ற உறுபினர்களை அழைக்க விரும்புகின்றேன் இது நீடித்து நிலைக்கும் பொருளாதரத்தை வளர்கின்றது .
 
 எமது நாட்டின் நலனுக்காக மாண்பு மிகு அமைச்சரிடம் ஒரு விடயத்தை  சமர்பிக்கின்றேன் அதாவது சுகாதார பராமரிப்பு முறைமை திருப்தியான விதத்தில் தொழில்படவில்லை சேமிப்பினை ஈட்டுவது மட்டுமல்ல இந்த முறையில் சிறந்த அபிவிருத்தியையும்  ஏற்படுத்த   வேண்டும் இதற்க்கு DIGITAL சுகாதார முறைமை நன்கு பயனளிக்கும் இலங்கை போன்ற அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளுக்கு இது மிகவும் அவசியமானது இது தொடர்பாக மேலும் உரையாடல்களை மேற்கொள்வதற்கு எண்ணியுள்ளேன் .


    நாட்டில் வடக்கிலும் ஏனைய கிராமப்புறங்களிலும் நாங்கள் முகம் கொடுக்கும் பாரிய பிரச்சனைகளுக்கு இந்த வரவுசெலவுத்திட்டம் தீர்வினை கொடுக்கின்றது.

 விஞ்ஞானம் கணிதம் ஆங்கிலம் ஆசிரியர் பற்றாக்குறைகளால் உயர் தரத்தில் இத்தகைய பாடங்களில் சித்தி பெறாமையால் தொழில் வாய்ப்புக்கள் பெறமுடியாது இளைஞர்கள் உள்ளனர் இது வடக்கினை  மிகவும் பாதித்துள்ளது உதாரணமாக உயர்தரத்தில் விஞ்ஞான பாட சித்தி உள்ளவர்களே தாதியர் பயிற்சிக்கு போகலாம் அது இல்லாததால் பல வைத்திய சாலைகள்  பாரிய பிரச்சினைக்கு  உட்படுகின்றன.

 இதற்கு சிறந்த தீர்வு பெற்றுத்தரும்படி பலமுறை நான் வேண்டியுள்ளேன். விஞ்ஞானம் கணிதம் ஆங்கில பட்டதாரி கல்விக்கு 100 சதவீத மானியம் கொண்ட 500000 ரூபாய் வீதம் மாணவர்களுக்கு வழங்கவிருக்கும் வசதி அளப்பரியது என்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி முக்கியமாக போரினால் பதிக்கப்பட்ட வடக்கிற்கும் இன்னும் பல பிராந்தியங்களுக்கும் இது வரப்பிரதசாசம் ஆகும் .
   எமது குழந்தைகளின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்துவதற்கு 4.5 MILLION மாணவர்களுக்கு காப்புறுதி திட்டம் வழங்க விருப்பது சிறந்த ஒரு முன்மொழிவாகும்
 

    அடுத்து  முகநூலை கட்டிஎழுப்புவதை எது தடுக்கிறது. BIOTECH கம்பனியை ஆரம்பிப்பதை யார் தடுப்பது இவற்றை ஆராயும் போது இது அறிவு சார் விடயமாகும். இளம் சந்ததியினருக்கு பொருத்தமான அறிவு தராதரம் போன்றவற்றை அழிகின்றது .


   பல தசாப்தங்களாக உயர் கல்வித்தரத்தை பேணிவரும் நாம் நாட்டிற்கு அதிக பயணித்து வந்துள்ளோம். ஆனால் ஆனால் அதை நிறுத்தி முக்கியமான திறன் விருத்தி அறிவு முதலியவற்றில் அவர்களுக்கு கற்பித்து எமது எதிர்கால சந்ததியினரை பலப்படுத்த வேண்டும்.

3500 பாடசாலைகளுக்கு கணணிகளை வழங்கி IT வசதிகளை பலப்படுத்துவதற்கான முன் மொளிவிற்காக நான் நிதி அமைச்சரை நான் பாரட்ட விரும்புகின்றேன். நானும் ஒரு கணணி பொறியியலாளராக எனது கல்வி ஊடாக பயன் பெற்று இங்கு பணியாற்றி வருவதோடு இதற்க்கு வெளிநாடு பெரும் உதவியாக இருந்தது எனது எதிர்காலத்தை பொருத்தமான முறையில் மாற்றி மேம்படுத்தி கொண்டிருக்கின்றது .


IT அறிவு எவ்வளவு  தூரம் எமக்கும் எமது நாட்டிற்கும் உதவுகின்றது என்பதை மீண்டும் நினைவு படுத்த விரும்புகின்றேன் இந்தமுன் மொழிவில் 175000 உயர்தர மாணவர்களும்  28000 உயர்தரத்திற்கு கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களும் நன்மை அடைவார்கள். இது சரியாக செயற்படுத்தினால்  மாணவர்கள்  இவற்றை  பெற்றுகொள்ள கூடிய   அறிவினை இலகுவில் பெற்றுக்கொள்ளலாம் .


 கௌரவ நிதியமைச்சரிடம் பின்வரும்  விடயத்தை முன்வைக்க விரும்புகின்றேன். E1 வர்த்தகத்தை ஒரு சவாலாக பார்க்கின்றது ஒரு அரிய சந்தர்ப்பமாக அதை பார்ப்போம். தற்பொழுது விற்பனையிலும் பார்க்க கொள்முதல் அதிகரித்து காணப்படுகின்றது இது எதிர்காலத்தில் மாற்றமடைய வாய்ப்பு உள்ளது.

 கௌரவ நிதி அமைச்சரை  நான் பாராட்ட விரும்புகின்றேன்.  அதாவது பல்வேறு தொழில்நுட்ப  துறைகளை  அடக்கிய   விஞ்ஞானம் மற்றும் தொழில் நுட்ப  துறைக்கு விஞ்ஞான ஆராய்ச்சி மற்றும்தொழிநுட்ப  அமைச்சுடன் இணைந்து நிதி ஒதுக்கீடுகள் வழங்கியுள்ளமை மிக பாராட்டுக்கு உரியது பல்வேறு கம்பனிகளுக்கு இது சம்பந்தமாக ஊக்குவிப்பு நிதியம் 100 MILLION BIOTECHநிதியாக 100 MILLION CERA க்கு 50 MILLION என ஒதுக்கீடுகள் வழங்கயுள்ளமை பாராட்டுக்குரியவை விஞ்ஞானம் பல நன்மைகளை அளிக்கும் என்பது எனது நம்பிக்கை இதனை DIGITAL சுகாதரத்துரைக்கும் வழங்கி ஊக்குவிக்கலாம்

      இளைஞர்களின் எதிர்காலத்திற்கு அளப்பரிய நன்மை பயக்கக்கூடிய தந்திரோபாயத்தை இந்த வரவுசெலவுத்திட்டம் கொண்டுள்ளது. இளம் சந்ததியினரை வலுப்படுத்தி ஆற்றலை கட்டியெழுப்பி புதிய சந்தர்பங்களை ஏற்படுத்தி மேம்படுத்தலாம். எதிர்கால நன்மைகளை கருத்தில் கொண்டு நாட்டையும் எமது மக்களையும் உட்கட்டமைப்பு கல்வி கொள்கைகள் மற்றும் கட்டமைப்புக்களையும் தயார் செய்ய வேண்டும் .எனவே தான் இவ்வரவு செலவு திட்டமானது  எதிர்கால வாய்ப்புக்களுக்கு எம்மை தயார்ப்படுத்துவதாகும்  என்பது எனது பாரம்பரிய நம்பிக்கையாகும் என தெரிவிக்க விரும்புகின்றேன் என கூறினார்.

இலங்கையர்களாகிய எங்களுக்கு இது ஒரு புதிய அனுபவம்... பாராளுமன்றில் அங்கஜன் இராமநாதன். இலங்கையர்களாகிய எங்களுக்கு இது ஒரு புதிய அனுபவம்... பாராளுமன்றில் அங்கஜன் இராமநாதன். Reviewed by Madawala News on 11/18/2016 09:13:00 AM Rating: 5