அமைச்சை ஏற்றுக் கொள்வாரா அனுர குமார?


முன்னாள் விவசாய அமைச்சரும், விவசாயம் தொடர்பில் சிறந்த அனுபவங்களை கொண்டுள்ள நபர் என்ற வகையில் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவை விவசாய அமைச்சுடன் இணைந்து செயற்படுமாறு அழைப்பு விடுப்பதாக அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று விவசாய அமைச்சுக்கான நிதி ஒதுக்கீட்டு குழு நிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

விவசாய தொழில் பிரச்சினைகள் குறித்து நாடாளுமன்றத்தில் கருத்து வெளியிட்ட போது, அனுரகுமார திஸாநாயக்கவுக்கு, அமைச்சர் துமிந்த இந்த அழைப்பை விடுத்துள்ளார்.
அமைச்சை ஏற்றுக் கொள்வாரா அனுர குமார? அமைச்சை ஏற்றுக் கொள்வாரா அனுர குமார? Reviewed by Madawala News on 11/24/2016 01:57:00 PM Rating: 5