(AUDIO விபரம் & படங்கள் இணைப்பு) 99 % முஸ்லிம் மாணவர்கள் பயன்பெறும், மாளிகாவத்தை விகாரையின் பிரதம தேரரால் நடாத்தப்படும் பாடசாலை.



மாளிகாவத்தை விகாரையின் பிரதம பௌத்த தேரரான  சாஸ்த்ரபதி வௌங்கொட யசாசி ஹிமியன் வஹன்ச அவர்களால் ஆரம்பித்து நடத்தப்பட்டுக்கொண்டிருக்கும் ஒரு பாடசாலையே இது.

 இங்கு இருபத்தைந்து மாணவர்கள் கல்வி கற்கிறார்கள் இதில் மூவர் சிங்கள மாணவர்களும் ஏனையவர்கள் முஸ்லிம் மாணவர்களுமாவர்.

பாடசாலைக்கு சேர்க்கும் வயதை தாண்டிவிட்ட காரணத்தினால் குறிப்பிட்ட  தேரர் அவர்களால் பாடசாலை கல்வியை பூர்த்தி செய்ய முடியவில்லை. தன்னால் கற்க முடியாமல் போன கல்வியை வசதியற்ற ஏனைய மாணவர்களாலும் கற்க முடியாமல் போய்விட கூடாதென்பதற்காக கல்வியின் முக்கியத்துவமறிந்து நடத்தப்படும் இப்பாடசாலை எமது சமூகத்தினால் பாராட்டப்பட கூடிய ஒன்று.

 சாஸ்த்ரபதி வௌங்கொட யசாசி ஹிமியன் வஹன்ச தேரர் அவர்களுக்கு எமது முஸ்லிம் சமுகம் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

( எழுத்தாக்கம் : ரசானா மனாப் )

Audio விபரம் : மாளிகாவத்தை ஜும்மா மஸ்ஜிதுல் சலாம் பள்ளித்தலைவர்











(AUDIO விபரம் & படங்கள் இணைப்பு) 99 % முஸ்லிம் மாணவர்கள் பயன்பெறும், மாளிகாவத்தை விகாரையின் பிரதம தேரரால் நடாத்தப்படும் பாடசாலை. (AUDIO விபரம் & படங்கள் இணைப்பு) 99 % முஸ்லிம் மாணவர்கள் பயன்பெறும், மாளிகாவத்தை விகாரையின் பிரதம தேரரால் நடாத்தப்படும் பாடசாலை. Reviewed by Madawala News on 11/19/2016 01:06:00 PM Rating: 5