Kidny

Kidny

"ஆவா" குழுவை கோத்­த­பாய உரு­வாக்­கினார் என்பதில் உண்மை இருக்கலாம்... ஜாதிக ஹெல உறு­மயவும் சேர்ட்டிபிக்கேட் கொடுத்தது."ஆவா" குழுவை கோத்­த­பாய உரு­வாக்­கினார் என்று அமைச்சர் ராஜித சேனா­ரத்ன குறிப்­பிட்­டுள்ளார். அந்த தகவல் உறு­தி­யா­னது அல்ல. இருப்­பினும் அந்த விடயம் உண்­மை­யாக இருக்கும் வாய்ப்­புள்­ள­தாக  ஜாதிக ஹெல உறு­மய தெரி­விக்­கின்­றது.

வடக்கில் சூடு பிடிக்கும் விவ­கா­ரங்­களை சாத­மாக பயன்­ப­டுத்திக் கொள்­ப­வர்கள் யார் என்­பதை அறிந்­து­கொண்டால் குறித்த விட­யத்தின் பின்­ன­ணியில் உள்­ளவர் யாரென தெரி­ய­வரும் என்று ஜாதிக ஹெல உறு­ம­யவின் ஊட­கப்­பேச்­சாளர் நிஷாந்த வர்­ண­சிங்க தெரி­வித்தார்

ஜாதிக ஹெல உறு­மை­யவின் தலைமை அலு­வ­ல­கத்தில் நேற்று வியா­ழக்­கி­ழமை இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்­து­க­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் தெரி­விக்­கையில்,

"ஆவா" குழுவை கோத்­தா­பாய உரு­வாக்­கினார் என்று அமைச்சர் ராஜித சேனா­ரத்ன குறிப்­பிட்­டுள்ளார். ஆனால் எமக்கு இது­வ­ரையில் அது தொடர்பில் உறு­தி­யான தக­வல்கள் கிடைக்­க­வில்லை. ஆனால் அவ்­வாறு செய்­தி­ருக்க வாய்ப்­புக்கள் உள்­ளன.

அண்­மையில் வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர தனது உரையில் 250 முன்னாள் விடு­தலை புலிகள் அமைப்பின் உறுப்­பி­னர்­களை வெளி­நா­டு­க­ளுக்கு அனுப்­பி­வைக்க பாது­காப்பு அமைச்சின் முன்னாள் செய­லாளர் கோத்­த­பாய உத­வி­யுள்­ள­தாக குறிப்­பிட்­டி­ருந்தார்.

அதனால் அவ்­வா­றன விட­யங்கள் இடம்­பெற்­றி­ருக்­கலாம். அதனால் ஆவா குழு இவ்­வா­றான பின்­ன­ணியில் உரு­வாக்­கப்­பட்­டி­ருக்க முடியும் அதன் உண்மை தன்­மைகள் தொடர்பில் தீர்க்­க­மாக ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

அதே­நேரம் வடக்கில் சில விவ­கா­ரங்கள் சூடு பிடிக்­கின்ற போது அது தொடர்பில் பெரி­தாக அலட்­டிக்­கொண்டு அந்த சந்­தர்ப்­பங்­களில் பய­னெ­டுப்­ப­வர்கள் எங்கு உள்­ளனர் என்­பது தொடர்பில் சிந்­தித்து பார்த்தால் இந்த விட­யங்­களில் இருக்­கின்ற உள்­ளார்ந்த தொடர்­பு­களை புரிந்­து­கொள்ள முடியும்.

மத்­திய வங்கி விவ­காரம்

மத்­திய வங்கி பிணை முறிகள் வழங்கல் விவ­கா­ரத்தில் ஏற்­பட்ட மோசடி செயற்­பாட்­டுக்கு எதி­ராக உரிய நிறு­வ­னங்கள் சட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்த வேண்டும்.

இன்று இந்த விவ­காரம் குறித்து பாரிய அளவில் கோஷங்­களை எழுப்­பு­கின்ற கூட்டு எதி­ர­ணி­யினர் பாரா­ளு­மன்­றத்தில் மெளனம் சாதிக்­கின்­றமை வேடிக்­கை­யா­னது. குறிப்­பாக முன்னாள் ஜனா­தி­பதி பாரா­ளு­மன்­றத்தில் மௌனம் சாதிப்­பது கேள்­விக்­கு­ரி­யா­கவே உள்­ளது.

அதே­நேரம் அண்­மையில் இலஞ்ச ஊழல் ஆணைக்­கு­ழு­வுக்கு முன்­பாக ஏற்­பாடு செய்­தி­ருந்த எதிர்ப்பு ஆர்­பாட்டம் கைவி­டப்­பட்­டதன் பின்­னணி என்­ன­வென்­பதும் கேள்­விக்­கு­ரி­யா­கவே உள்­ளது.

 பாரா­ளு­மன்­றத்தில் குறித்த விவ­காரம் தொடர்பில் விவாதம் செய்­யப்­பட்ட போது விமல் வீர­வன்ச பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை மிஸ்டர் டேர்ட்டி என்று கூறி சத்­த­மிட்டார். அதனை தொடர்ந்து கூட்டு எதி­ர­ணியின் உறுப்­பி­னர்கள் சக­லரும் அந்த சொல்லை உச்­ச­ரிக்க ஆரம்­பித்­தனர்.

இதனை வேடிக்கை பார்த்த முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ தனது ஆச­னத்­தி­லி­ருந்­த­வாறு கூட்டு எதி­ர­ணி­யினர் பக்கம் திரும்பி பார்த்­ததும் அவர்கள் அனை­வரும் பூனைகள் போன்று வாயை மூடி அமர்ந்­தமை வேடிக்­கை­யாக இருந்­தது.

 பிரதமரை நிந்திக்கும் போது கூட்டு எதிரணியினரை மௌனிக்குமாறு சமிக்ஞை வழங்க வேண்டிய அவசியம் முன்னாள் ஜனாதிபதிக்கு ஏன் ஏற்பட்டது. என்பதும் சிந்தித்து பார்க்க வேண்டிய விடயம்.

அதனால்கூட்டு எதிரணியினர் நம்பிக்கையில்லா பிரேரணையை உடனடியாக கொண்டுவர வேண்டும் என்று அவர்களுக்கு சவால் விடுக்கின்றோம் .
"ஆவா" குழுவை கோத்­த­பாய உரு­வாக்­கினார் என்பதில் உண்மை இருக்கலாம்... ஜாதிக ஹெல உறு­மயவும் சேர்ட்டிபிக்கேட் கொடுத்தது. "ஆவா" குழுவை கோத்­த­பாய உரு­வாக்­கினார் என்பதில் உண்மை இருக்கலாம்... ஜாதிக ஹெல உறு­மயவும் சேர்ட்டிபிக்கேட் கொடுத்தது. Reviewed by Madawala News on 11/04/2016 10:40:00 AM Rating: 5