நீண்ட காலமாக பொலிஸாரினால் தேடப்பட்டு வந்த ஆவா குழு உறுப்பினர் கைது நடவடிக்கைக்கு அஞ்சி சரண்.



சாவகச்சேரியின் மட்டுவில் வடக்குப் பகுதியில் நீண்ட காலமாக பொலிஸாரினால் தேடப்பட்டு வந்த ஆவா குழுவுடன் தொடர்புடைய நபரொருவர் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபர் நேற்று(13) சாவகச்சேரி பொலிஸ் நிலையத்திலேயே தஞ்சமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் பொலிஸ் அதிகாரி ஒருவர், பொலிஸில் சரணடைந்துள்ள நபர் நீண்ட நாட்களாக பொலிஸாரால் தேடப்பட்டுவரும் நபர் எனவும் இவர் பயங்கரவாத பிரிவினரின் கைது நடவடிக்கைக்கு அஞ்சியே சரணடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், குறித்த சந்தேக நபர் இன்று சாவகச்சேரி நீதிமன்றத்தில் ஆஜராக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸாரால் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
நீண்ட காலமாக பொலிஸாரினால் தேடப்பட்டு வந்த ஆவா குழு உறுப்பினர் கைது நடவடிக்கைக்கு அஞ்சி சரண். நீண்ட காலமாக பொலிஸாரினால் தேடப்பட்டு வந்த ஆவா குழு உறுப்பினர் கைது நடவடிக்கைக்கு அஞ்சி சரண். Reviewed by Madawala News on 11/14/2016 11:38:00 AM Rating: 5