Accaddemy

இந்தியா முழுவதும் வட்டியில்லா இஸ்லாமிய வங்கி முறை...



அபூஸாலி முஹம்மத் சுல்பிககார்

இஸ்லாமிய ஷரியத் சட்டப்படி கடனுக்கோ வைப்புத்தொகைக்கோ வட்டிபெறுவது கொடுப்பது குற்றமாகும். இதனால் வங்கிகளில் சேமிப்புக் கணக்கு வைத்துள்ள இஸ்லாமியர்களில் பலர் வட்டித் தொகையை எடுக்காமல் உள்ளனர். அதுபோல் வைப்புத்தொகைக்கு வட்டி வழங்கப்படும் என்பதால் வங்கிகளில் பணத்தைச் செலுத்தாமலும் உள்ளனர்.இதனால் பல ஆயிர கோடிகள் நிலுவையில் உள்ளன.

இந்தப் போக்குக்குத் தீர்வுகாணும் வகையில் முதற்கட்டமாக அனைத்து வங்கிகளிலும் இஸ்லாமியர்களுக்கென்று தனி வங்கி முறையை நடைமுறைப்படுத்துவது குறித்து ரிசர்வ் வங்கி பரிசீலித்து வருகிறது.

இது தொடர்பாக நிதி அமைச்சகம், ரிசர்வ் வங்கி, சட்ட அமைச்சகம் ஆகியவற்றிடையே ஆலோசனைகள் நடைபெற்று வருவதாகவும் தெரியவந்துள்ளது. இதுகுறித்து பல ஆய்வுகள் நடத்தபட்டு அதன் சாதகங்கள் பாதகங்கள் அனைத்தையும் ரிசர்வ் வங்கி நிதி அமைச்சகத்திற்கு அனுப்பி விட்டதாகவும் நிதி அமைச்சகம் இது குறித்து முடிவுகளை சில வாரங்களில் தெரிவிக்க இருப்பதாகவும் செய்தி வந்துள்ளது.அதேபோல் நாட்டில் நிலவும் பொருளாதார மந்தத்தை போக்க இஸ்லாமிய வங்கி முறை சரியாக இருக்குமானால் இந்தியாவில் பல பகுதிகளில் இந்த வங்கிகள் திறக்கப்படும் என்றும் செய்திகள் கசிந்துள்ளன.

இஸ்லாமிய வங்கி முறையில் வைப்புத் தொகைக்கு வட்டியில்லாததைப்போல், கடனும் வட்டியில்லாமலே வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா முழுவதும் வட்டியில்லா இஸ்லாமிய வங்கி முறை... இந்தியா முழுவதும் வட்டியில்லா இஸ்லாமிய வங்கி முறை... Reviewed by Madawala News on 11/20/2016 08:53:00 PM Rating: 5