கொழும்பு பாதாள உலகக் குழுவினருக்கு Bad News...



கொழும்பு பாதாள உலகக் குழுவினரை ஒழிக்க விசேட புலனாய்வுப் பிரிவு ஒன்று நிறுவப்பட்டுள்ளது.

கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் செயற்பட்டு வரும் பாதாள உலகக் குழு உறுப்பினர்களை கைது செய்யவும் அவர்கள் பற்றிய தகவல்களை திரட்டவும் இந்த விசேடப் பிரிவு நிறுவப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக இந்தப் பிரிவு 24 மணித்தியாலங்களும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களாக கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் பல்வேறு பாதாள உலகக் குழு செயற்பாடுகள் இடம்பெற்றிருந்தன.

பாதாள உலகக் குழுவினரின் போதைப் பொருள் கடத்தல்கள் வர்த்தகம் போன்ற நடவடிக்கைகளையும் கட்டுப்படுத்த இந்த புலனாய்வுப் பிரிவு கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளது.

பாதாள உலகக்குழுக்களுக்கு இடையிலான எதிர்த்தரப்புக்கள் பற்றிய விரபங்கள் திரட்டப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

சாதாரண பொலிஸ் விசாரணைப் பிரிவுகளைப் போன்று அல்லாது, இந்தப் பிரிவு பாதாள உலகக்குழுவினரின் செயற்பாடுகள் குறித்து விசாரணை செய்யும் நோக்கில் பிரத்தியேகமாக நிறுவப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தப் பிரிவில் சுமார் 52 உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கொழும்பு பாதாள உலகக் குழுவினருக்கு Bad News... கொழும்பு பாதாள உலகக் குழுவினருக்கு Bad News... Reviewed by Madawala News on 11/18/2016 08:13:00 AM Rating: 5