Accaddemy

ஜனாதிபதி, பிரதமரின் உருவப்படங்களை அடித்து நொருக்கிய கும்பல்...



யாழ்ப்­பாணம், கொக்குவில் தென் கிழக்கு தலை­யாழிப் பகு­தியில் நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்­தெ­ரி­யாத கும்­ப­லொன்று அங்­கி­ருந்த ஜனா­தி­பதி, பிர­த­மரின் படங்கள் பொறிக்­கப்­பட்ட விளம்­பரப்  பல­கை­யினை அடித்து நொருக்­கி­யுள் ளது. இச் சம்­ப­வத்தால் அப்­ப­குதி மக்­க­ளி­டையே பெரும் பர­ப­ரப்பு  ஏற்­பட்­டி­ருந்­தது.

நேற்­று­முன்­தினம் மாலை 6மணி­ய­ளவில் கொக்­குவில் தலை­யாழி பகு­தியில் இடம்­பெற்­ற இச் சம்­பவம் தொடர்­பாக மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது, நேற்று முன்தின் மாலை கொக்­குவில் பகு­தியில் உள்ள தலை­யாழி வைரவர் ஆல­யத்­திற்க முன்­பாக உள்ள இந்­திரா சன­ச­மூக நிலை­யத்­திற்கு மோட்டார் சைக்­கிளில் வந்­தி­றங்­கிய சிலர் அங்கு நின்று தகாத வார்த்­தை­களை பேசி அவ் வீதியால் செல்­ப­வர்­களை திட்டியிருந்தனர்.

இதனை தொடர்ந்து குறித்த சன­ச­மூக நிலை­யத்தின் கட்­டட நிர்­மா­ணத்­திற்­காக நிதி வழங்­கப்­பட்­ட­மைக்­காக அர­சாங்­கத்­தினால் அங்கு வைக்­கப்­பட்ட ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்றும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஆகி­யோ­ரு­டைய புகைப்­ப­டங்கள் பொறிக்­கப்­பட்ட விளம்­பரப் பல­கை­யி­னையும் அவர்கள் அடித்து நாசம் செய்­துள்­ளனர்.

மேலும் சன­ச­மூக நிலை­யத்­தி­னையும் அடித்து நெருக்கு முற்­பட்ட இவர்கள் அதே சன­ச­மூக நிலை­யத்தின் கட்­ட­டத்தில் உள்ள ஜே123 கிராம சேவகர் அலு­வ­ல­கத்­தி­னையும் இவர்கள் நாசம் செய்­தி­ருந்­தனர். அத்­துடன் குறித்த ஆல­யத்தின் அற­நெறிப் பாட­சா­லையின் பெயர் பல­கை­யி­னையும் அவர்கள் அடித்து நொருக்கி நாசம் செய்­த­துடன், ஆல­யத்தின் நின்­ற­வர்­க­ளு­டனும் தக­ராறில் ஈடு­பட்­டுள்­ளனர்.

அப்­ப­கு­தியில் உள்ள தனியார் கல்வி நிறு­வ­னத்­திற்கு வந்து சென்­ற­வர்­க­ளு­டனும் இவர்கள் தகாத முறையில் நடக்க முற்­பட்­டுள்­ளனர். இவர்­களின் அட்­ட­கா­சத்­தினை தாங்கிக் கொள்ள முடி­யாத பொது மக்கள் இச் சம்­பவம் தொடர்­பாக யாழ்.பொலிஸ் நிலை­யத்­திற்கு தகவல் வழங்­கி­யி­ருந்­தனர்.

எனினும் சம்­பவ இடத்­திற்கு விரைந்த பொலிஸார், அங்கு அட்டகாசம் புரிந்தவர்களை கைது செய்யாமல், அவர்களுடன் சமரசம் பேசி, அங்கிருந்து பாதுகாப்பாக அவர்களை வழியனுப்பி வைத்திருந்தனர் என்று சம்பவத்தினை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஜனாதிபதி, பிரதமரின் உருவப்படங்களை அடித்து நொருக்கிய கும்பல்... ஜனாதிபதி, பிரதமரின் உருவப்படங்களை அடித்து நொருக்கிய கும்பல்... Reviewed by Madawala News on 11/15/2016 10:04:00 AM Rating: 5