அனைவரையும் அலட்சியம் செய்த பிக்கு... நேற்று நடந்த சம்பவத்தின் விபரம்.



மட்­டக்­க­ளப்பு மங்­க­ள­ரா­மய விகா­ரா­தி­பதி அம்­பிட்­டிய சும­ண­ரத்ன தேரர் செங்­க­லடி - –பதுளை வீதியில் பன்­குடாவெளி அர­ச­மரம் உள்ள காணிக்குள் நேற்று புதன்­கி­ழமை காலை அத்­து­மீறி நுழைந்­த­தை­ய­டுத்து இங்கு பதற்­ற­நிலை ஏற்­பட்­டது.

குறித்த இடத்தில் பௌத்த மத அடை­யா­ளங்கள் காணப்­ப­டு­வ­தா­கவும் கடந்த காலங்­களில் பௌத்த வழி­பாட்­டுத்­தலம்  இருந்­த­தா­கவும் கூறி தனியார் காணிக்குள் அத்­து­மீறி நுழைந்து இவர் அமர்ந்­து­கொண்­டதால் இந்த பதற்ற நிலை உரு­வா­னது.

தனி­யா­ருக்குச் சொந்­த­மான இடத்தில் அர­ச­மரம் மற்றும் புரா­தன பௌத்த அடை­யா­ளங்கள் இருப்­பதால் இந்த இடத்தில் பௌத்த வழி­பாட்­டுத்­தலம் அமைக்­கப்­போ­வ­தாக தோரர் கூறினார்.

இந்த தகவல் உள்ளுர் மக்­க­ளி­டையே பர­வி­ய­தை­ய­டுத்து பிர­தேச மக்கள் அங்கு ஒன்­று­கூ­டினர். இந்த பகு­தியில் சில சிங்­க­ள­வர்­களும் வந்­தி­ருந்­தனர். தேரர் உட்­பி­ர­வே­சித்­தது தொடர்­பாக கர­டி­ய­னாறு பொலி­ஸா­ருக்கு அறி­விக்­கப்­பட்­டி­ருந்­தது.

குறித்த இடத்­துக்கு வந்த பொலிஸார் தோர­ருடன் பேச்­சு­வார்­தையில் ஈடு­பட்ட போதிலும் அது பய­ன­ளிக்­க­வில்லை. அங்கு வரு­கை­தந்த தொல் பொருள் ஆய்வுத் திணைக்­கள அதி­கா­ரி­களும் தேர­ரிடம் பேச்­சு­வார்­தையில் ஈடு­பட்ட போதிலும் தேரர் அவர்­களின் கருத்­துக்­களை அலட்­சியம் செய்­த­வண்ணம் இந்த பிரச்­சி­னையைத் தீர்ப்­ப­தற்கு மாவட்ட செய­லாளர் குறித்த இடத்­துக்கு வரு­கை­தர வேண்டும் என கூறினார்.

குறித்த பிர­தே­சத்தில் வீதியில் ஊர்­வ­ல­மாக வரு­வ­தற்கு, வீதியை மறித்து ஆர்ப்­பாட்டம் செய்ய, மேற்­படி தனியார் காணிக்குள் அத்­து­மீறி செல்ல, அக்­கா­ணியில் புதிய கட்­டடம் அமைப்­ப­தற்­கான வேலை­களைச் செய்­வ­தற்கு அல்­லது சின்னம் மற்றும் மரம் நடு­வ­தற்கு, கூட்டம் நடத்­து­வ­தற்கு 1979ம் ஆண்டு 15ம் இலக்க இலங்கை குற்­ற­வியல் நட­வ­டிக்கை முறைச் சட்­டக்­கோவை 106(1) பிரிவின் கீழ் நீதி­மன்றில் பொலி­ஸா­ரினால் தடை உத்­த­ரவு பெறப்­பட்­டி­ருந்­தது.

குறித்த இடத்­துக்கு வரு­கை­தந்த தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் மட்­டக்­க­ளப்பு மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சா.வியா­ழேந்­திரன் பொலிஸார் நீதி­மன்ற உத்­த­ரவை உட­ன­டி­யாக அமுல்­ப­டுத்தி பௌத்த பிக்கு உட்­பட அனை­வ­ரையும் குறித்த காணி­யி­லி­ருந்து உடனடியாக வெளியேற்ற நடவடிக்கையெடுக்க வேண்டும் என பொலிஸாருக்கு தெரிவித்தார்.

இதையடுத்து பொலிஸாருக்கும் பௌத்த பிக்குவிற்கும் இடையில் பேச்சுவார்த்தை நடைபெற்று அங்கிருந்து கலைந்து மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்குச் சென்றனர்.
அனைவரையும் அலட்சியம் செய்த பிக்கு... நேற்று நடந்த சம்பவத்தின் விபரம். அனைவரையும் அலட்சியம் செய்த பிக்கு... நேற்று நடந்த சம்பவத்தின் விபரம். Reviewed by Madawala News on 11/17/2016 10:35:00 AM Rating: 5