பெஷன் பக் தீ மின்சார ஒழுக்கு , BBS , சிங்களே ஆகியவற்றுக்கு தொடர்பில்லை ! போலி குறுந்தகவல்கள் பரப்பப்படுகிறது ...


பெஷன் பக் தீ சம்பவம் ஒரு விபத்து எனவும் அது ஒரு நாசகார வேலை இல்லை எனவும் போலியான தகவல்கள் பரப்பப்பட்டு வருவதாக பெஷன் பக் நிறுவனத்தின் பொது முகாமையாளர் பராஸ் சாஹுல் ஹமீத் மடவளை நியுசுக்கு குறிப்பிட்டார்.

வட்ஸ் ஏப் ஊடாக பரப்பப்படும் குறித்த செய்தியில் பெஷன் பக் தீ ஒரு விபத்து எனவும் மின்சார ஒழுக்கு காரணமாக இந்த தீ ஏற்பாட்டதாக குறிப்பிடப்பட்டுள்ள குறித்த செய்தியில்  பொதுபல சேனாவுக்கோ அல்லது சிங்கலே வுக்கோ இந்த சம்பவத்தில் தொடர்பில்லை என பாவனையில் இல்லாத ஒரு தொலைபேசி இலக்கத்தை குறிப்பிட்டு வட்ஸ் ஏப் ஊடக இந்த செய்திப்பரப்பப்பட்டுள்ளதாக பெஷன் பக் நிறுவனத்தின் பொது முகாமையாளர் பராஸ் சாஹுல் ஹமீத் மடவளை நியுசுக்கு குறிப்பிட்டார்.

மேலும் இந்த போலி தகவல் பெசன் பக் ஊழியர் என பொய்யான பெயரில் பரப்பட்டு வருவதாகவும் இது தொடர்பில் பொலிஸ் முறைப்பாடு செய்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.



 

பெஷன் பக் தீ மின்சார ஒழுக்கு , BBS , சிங்களே ஆகியவற்றுக்கு தொடர்பில்லை ! போலி குறுந்தகவல்கள் பரப்பப்படுகிறது ... பெஷன் பக் தீ மின்சார ஒழுக்கு , BBS , சிங்களே ஆகியவற்றுக்கு தொடர்பில்லை ! போலி குறுந்தகவல்கள் பரப்பப்படுகிறது ... Reviewed by Madawala News on 11/21/2016 09:43:00 AM Rating: 5