Ad Space Available here

புத்தர் சிலை விவகாரம் பிரதமர் கவனத்துக்கு...- ARA.Fareel-

நாட்டில் எந்­தவோர் பகு­தி­யிலும் இன நல்­லி­ணக்­கத்­துக்கு குந்­தகம் விளை­விக்கும் வகை­யி­லான செயற்­பா­டு­க­ளுக்கு அர­சாங்கம் அனு­ம­தி­ய­ளிக்­காது.  இறக்­காமம் மாணிக்­க­மடு கிரா­மத்தின் மலையில் புத்தர் சிலை­யொன்று வைக்­கப்­பட்­டுள்­ளமை தொடர்பில் சம்­பந்­தப்­பட்ட அதி­கா­ரி­களின் கவ­னத்­திற்குக் கொண்­டு­வ­ரப்­பட்­டுள்­ளது.

பிர­த­ம­ருக்கும் அறி­வு­றுத்­தப்­பட்­டுள்­ளது. உட­ன­டி­யாக உரிய நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என முஸ்லிம் சமய விவ­கார மற்றும் தபால், தபால்­சே­வைகள் அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் தெரி­வித்தார்.

தமண பொலிஸ் பிரி­வுக்­குட்­பட்ட இறக்­காமம் மாணிக்­க­மடு கிரா­மத்­தி­லுள்ள மலையில் புத்­தர்­சிலை யொன்று வைக்­கப்­பட்­டுள்­ளமை தொடர்பில் கருத்து வின­வி­ய­போதே அமைச்சர் ஹலீம் இவ்­வாறு தெரி­வித்தார்.

இப்­ப­கு­தியில் தமிழ், முஸ்லிம் மக்­களே வாழ்­கி­றார்கள். ஒரு சிங்­கள குடும்­ப­மேனும் இல்­லாத நிலையில் பெளத்த சிலை வைக்­கப்­பட்­டுள்­ளமை தொடர்பில் அப்­ப­கு­தி­ மக்கள் அதி­ருப்தி வெளி­யிட்­டுள்­ளனர்.

அமைச்சர் ஹலீம் தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில், குறிப்­பிட்ட சம்­பவம் அறி­விக்­கப்­பட்­டதும் பொலிஸ் மா அதி­ப­ருடன் மேல­திக விப­ரங்­களை அறிந்து கொண்டேன்.

அப்­ப­கு­தியில் நல்­லி­ணக்­கத்தை நிலை­நாட்­டு­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுப்­ப­தாக பொலிஸ்மா அதிபர் உறு­தி­ய­ளித்­துள்ளார்.

புத்தர் சிலை நீதி­மன்ற அனு­ம­தி­யின்றி நாட்டின் சட்­டத்­தையும் மீறி வைக்­கப்­பட்­டுள்­ளது. அதனால் நீதி­மன்­றமும் சம்­பந்­தப்­பட்­ட­வர்­க­ளுக்கு எதி­ராக உரிய நட­வ­டிக்­கையை மேற்­கொள்ளும்.

அதனால் பிர­தே­சத்தின் தமிழ் முஸ்லிம் மக்கள் அச்­ச­ம­டையத் தேவை­யில்லை. அர­சாங்கம் உரிய பாது­காப்பு வழங்கும் என்றார்.

புத்­தர்­சிலை மலையில் வைக்­கப்­ப­டு­வ­தற்கு முன்­னரே மலையைச் சுற்­றி­யுள்ள காணி­க­ளுக்கு உரி­மை­யா­ளர்­க­ளான முஸ்­லிம்கள் இது தொடர்­பாக தமணைப் பொலிஸில் முறைப்­பாடு செய்­தனர்.

சிலை வைப்­புக்கு தடை­வி­திக்கக் கோரி பொலி­ஸா­ரினால் அம்­பாறை நீதி­மன்றில் மனு­வொன்று தாக்கல் செய்­யப்­பட்­டது. இதை­ய­டுத்து நீதி­மன்றம் சிலை வைப்­புக்கு தடை­வி­தித்து உத்­த­ரவு வழங்­கி­யி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

நீதி­மன்ற தடை­யுத்­த­ர­வி­னையும் மீறி அம்­பாறை மாவட்ட அர­சி­யல்­வாதி ஒரு­வரின் உத­வி­யுடன் இச்­சிலை வைக்­கப்­பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. இறக்­காமம் பிர­தேச சபைச் செய­லா­ளரும் மலையில் புத்தர் சிலை­யொன்று வைப்­ப­தற்கு அனு­மதி மறுத்­தி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.

மாணிக்­க­மடு கிரா­மத்தைச் சேர்ந்த தமிழ் மக்­களும் இந்து மத விவ­கார அமைச்சர் டி.எம்.சுவா­மி­நா­தனின் கவ­னத்­துக்கு இச்­சம்­ப­வத்தைக் கொண்டு வந்­துள்­ளனர். புத்தர் சிலையை மலை­யி­லி­ருந்து அகற்­று­மாறு கிழக்கு மாகாண சபை­யி­டமும் கோரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது.

இறக்­காமம் பிர­தேச முஸ்­லிம்கள் இவ்­வி­வ­காரம் தொடர்பில் நீர்­வ­ழங்கல், வடி­கா­ல­மைப்பு மற்றும் நகர் திட்­ட­மிடல் அமைச்சர் ரவூப் ஹக்­கீமின் கவ­னத்­திற்குக் கொண்டு வந்­த­தை­ய­டுத்து நேற்று முன்­தினம் அமைச்சர் அப்­பி­ர­தே­சத்­திற்கு விஜ­ய­மொன்­றினை மேற்­கொண்டார்.

அவர் இறக்­காமம் மாணிக்­க­மடு இந்­துக்­கோயில் நிர்­வா­கி­க­ளு­டனும் முஸ்­லிம்­க­ளு­டனும் கலந்­து­ரை­யா­டினார். புத்­தர்­சிலை நீதி­மன்றத் தடை­யையும் மீறி வைக்­கப்­பட்­டுள்­ளதால் நீதி­மன்ற உத்­த­ர­வி­னூ­டாக அகற்ற நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது என்றார்.

மேலும் அவர் கருத்து தெரி­விக்­கையில் நல்­லாட்சி அரசாங்கத்தில் இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறுவது நல்லிணக்கத்துக்கு பாதகமாகும். சிறுபான்மை மக்களை வம்புக்கிழுக்கும் செயலாகும்.

எந்த மதத்தினதும் அடையாளங்களை அனுமதியின்றி பலவந்தமாக வைக்க முடியாது என்றார்.

இதேவேளை தொல்பொருள் ஆராய்ச்சி திணைக்களத்திற்குரியதாகக் கருதப்படும் இந்த மலைப்பிரதேசத்தை முஸ்லிம்கள் ஆக்கிரமித்து வருவதாக பௌத்த தேரர்கள் முறையிட்டுள்ளார்கள்.

புத்தர் சிலை விவகாரம் பிரதமர் கவனத்துக்கு... புத்தர் சிலை விவகாரம் பிரதமர் கவனத்துக்கு... Reviewed by Madawala News on 11/01/2016 01:10:00 PM Rating: 5