ஜனவரி எட்டில் தோற்றவருக்கு அடுத்த தேர்தலில் எவ்வாறு வெற்றி பெற முடியும் ..



ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை உடைத்துக் கொண்டு சென்று கட்சியொன்றை உருவாக்கினால், அக்கட்சியால் ஒரு தேர்தலையாவது வெற்றிகொள்ள முடியாத ஒரு நிலைமை உருவாகும் என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் இளைஞர் முன்னணியின் தலைவர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார்.

இன்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அங்கு கருத்து வெளியிட்ட அவர்..

மஹிந்த ராஜபக்ஷவுக்கு வெற்றிபெற  முடியுமாக இருந்தால் அவர் கடந்த 8 ஆம் திகதியே வெற்றி கொண்டிருப்பார் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மொட்டு சின்னத்திலான கட்சியில் தேர்தல் ஒன்றை வெற்றிகொள்ள முடியுமா என சிந்தித்துப் பார்க்க வேண்டியுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார் .

ஜனவரி எட்டில் தோற்றவருக்கு அடுத்த தேர்தலில் எவ்வாறு வெற்றி பெற முடியும் .. ஜனவரி எட்டில் தோற்றவருக்கு அடுத்த தேர்தலில் எவ்வாறு வெற்றி பெற முடியும் .. Reviewed by Madawala News on 11/17/2016 08:02:00 PM Rating: 5