Kidny

Kidny

சிங்கள-முஸ்லிம் கலவரங்கள் குறித்து நாம் மிகுந்த எச்சரிக்கையோடு செயற்பட வேண்டும்! -சபூர் ஆதம்எம்மைச் சுற்றிலும் வன்முறையின் இருள் மேகங்களே கவிந்திருக்கின்றன. சமீப காலமாக நாம் சந்தித்த இனக் கவலவரங்களும் வன்முறைத் தாக்குதல்களும் இழப்புகளும் மிக அதிகமானவை.

வடக்குக் கிழக்கில் தமிழ் ஆயுதக் குழுக்களின் அராஜகங்களுக்குப் பலியாகிய நமது மக்கள், தொடர்ச்சியாக வன்முறையின் நிழலுக்குள்ளேயே வாழ நிர்பந்திக்கப் பட்டுள்ளார்கள்.

முன்பெல்லாம் தென்னிலங்கை நமக்குப் பாதுகாப்பான இடம் என்ற நம்பிக்கை பரவலாக இருந்தது. ஆனால் இன்றோ தென்னிலங்கையின் யதார்த்தம் அச்சம் நிறைந்ததாகவுள்ளது.எந்த நேரத்திலும் எங்கேனும் ஒரு மூளையில் இனக்கலவரம் வெடித்து விடலாம் எனும் அவலத்தினூடே நாம் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கிறோம்.
சிங்கள-முஸ்லிம் கலவரங்கள் அனைத்துமே மிகச் சாதாரணமான சம்பவங்களிலிருந்தே தொடங்குகின்றன.

முச்சக்கர வண்டிச் சாரதிகள் போன்ற சில அப்பாவிப் பொதுமக்களை மூளைச் சலவை செய்து, முஸ்லிம்களுக்கு எதிராகத் தூண்டி விடும் சிங்களத் தீவிரவாத சக்திகள் குறித்து நாம் மிகுந்த எச்சரிக்கையோடு செயற்பட வேண்டியுள்ளது.

அவ்வவ்விடங்களில் உடனடிப் பரிகாரம் காண முடியுமான சிறுசிறு சச்சரவுகளைப் பாதாகரமாக்கி, அரசியல் லாபமடைய சில திரைமறைவு சக்திகள் முனைகின்றன.
சிங்கள மக்கள் மத்தியில் ஜனநாயக மற்றும் தேர்தல் வழிமுறைகளுடாக ஆதரவைப் பெற முடியாமல் போன சக்திகளே, இவ்வாறான பின்வழிகளைத் தேர்ந்தெடுத்து இக் கலவரங்களூடாக சர்வாதிகார, மோசடி சக்திகள் அதிகாரத்திற்கு வர எத்தனிக்கின்றன என்பதை கூர்ந்து அவதானிக்கும் எவரும் நன்கு புரிந்து கொள்ள முடியும்.

இது போதாததற்கு அரச படையினரும் பொலிஸாரும் பக்கச் சார்பாக நடந்து கொள்வதன் மூலம் முஸ்லிம்களது ஆத்திரத்தைத் தூண்டி வருகின்றனர்.

அண்மையில் மட்டக்களப்பு மங்கலராம விகாரையில் காவி உடைக்குள் ஒளிந்திருக்கும் ஒரு மதவெறி பிடித்த தேரர் "தமிழ் நாயே, நான் உன்னைக் கொல்லுவேன்" என்று தன் கடமையைச் செய்த ஒரு தமிழ் அலுவலரை மிரட்டி சம்பவம். இலங்கையின் வரலாறு முழுக்க நிறைந்திருக்கும் சிங்கள பெளத்த மதவெறியின் வன்முறைக்கு ஒரு சிறந்த உதாரணம். காவல்துறை இனவாதம் பேசும் பிக்குகளிற்கு முன்னால் கூனிக் குறுகி நிற்கிறது.

இக்கலவரங்களில் முஸ்லிம்களின் தவறான அணுகுமுறைகள் ஆபத்தான எதிர்விளைவுகளை ஏற்படுத்தியுள்ளன. அதேவேளை இந்த வன்முறைகளை எவ்வாறு எதிர்கொள்வது என்பது தொடர்பாக உணர்ச்சிகரமான முடிவுகளுக்கு சிலர் வர முயல்கின்றனர்.

இக்கலவரங்கள் குறித்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் பெரிதாகக் கவனம் செலுத்தியிருப்பதுபோல் தெரியவில்லை. அவர்களது மௌனம் தொடர்ந்தும் நீடிக்கிறது. இவை ஒரு கட்டுக்கோப்பான சமூகமாகச் செயற்பட முடியாத நமது பலவீனத்தின் வெளிப்பாடுகளாகும்.

இவ்வாறான பிரச்சினைகளை எதிர்கொள்வது தொடர்பாக, நாம் நின்று நிதானித்துச் செயற்பட வேண்டும். வரலாற்றில் மிக இக்கட்டான ஒரு தருணத்தை அடைந்திருக்கிறௌம். எமது ஒவ்வொரு அசைவுகள் குறித்தும் மிகுந்த முன்னெச்சரிக்கையோடு சிந்தித்து நடக்க வேண்டியது நமது கடமையாகும்!!
சிங்கள-முஸ்லிம் கலவரங்கள் குறித்து நாம் மிகுந்த எச்சரிக்கையோடு செயற்பட வேண்டும்! -சபூர் ஆதம் சிங்கள-முஸ்லிம் கலவரங்கள் குறித்து நாம் மிகுந்த எச்சரிக்கையோடு செயற்பட வேண்டும்! -சபூர் ஆதம் Reviewed by Madawala News on 11/20/2016 01:53:00 AM Rating: 5