Accaddemy

உத்தேச அரசியல் யாப்பின் ஊடாக சிங்கள முஸ்லிம் இனங்களிடையே முருகலை உருவாக்க அரசு சதி !

உத்தேச அரசியல் யாப்பின் ஊடாக சிங்கள முஸ்லிம் இனங்களிடையே பிரச்சினையொன்றை உருவாக்க அரசு முயற்சிப்பதாக தேசிய அமைப்புக்களின் ஒன்றியம் குற்றம் சாட்டியுள்ளது. 

இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் இத்தாகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார். 

சிங்கள பெரும்பான்மையினத்துடன் இணைந்து வாழ்வதனால், மோதல் ஏற்படுகின்றது என முஸ்லிம்களினால் பிரேரணையொன்றை கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. இதனால், முஸ்லிம்கள் வாழ்வதற்கு தங்களுக்கு தனியான பிராந்தியத்தை கோரும் உள்நோக்கத்தில் காணப்படுவதாகவும் தேரர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். 

 மேலும் முழு பாராளுமன்றமும் சேர்ந்து புதிய அரசியல் அமைப்பை நிறைவேற்றினால் நாம் இந்த பூமியில் அதை தோற்கடிப்போம் என அவர் சூளுரைத்துள்ளார்.
உத்தேச அரசியல் யாப்பின் ஊடாக சிங்கள முஸ்லிம் இனங்களிடையே முருகலை உருவாக்க அரசு சதி ! உத்தேச அரசியல் யாப்பின் ஊடாக சிங்கள முஸ்லிம் இனங்களிடையே முருகலை உருவாக்க அரசு சதி ! Reviewed by Madawala News on 11/28/2016 09:33:00 PM Rating: 5