tg

தர்கா நகர் ஊர்வாசிகளே! சமூகத் தலைமைகளே! உலமாக்களே! பெரியார்களே! விழித்தெழுங்கள்.


தர்கா நகர் ஆசிரியர் கல்வியியற் கல்லூரியில் 3 ஆம் வருட மாணவிகள் பாடசாலைகளுக்கு பயிற்சிக்காக செல்லும் போது இஸ்லாமிய கலாசார ஆடையான ஹபயாவை அணிந்து செல்லும் வழமை அன்று தொட்டு இன்றுவரை இருந்து வந்த ஒன்றாகும். 

தற்போது கல்லூரி பீடாதிபதியாக இருக்கும் சகோதர இனத்தை சார்ந்த நபர் இஸ்லாமிய விழுமியங்கள் அற்ற ஒரு கலாசாலையாக இதனை மாற்றும் முனைப்புடன் செயற்பட்டுவருகிறார்.அதன் ஒரு அங்கமாகவே தற்போது 3 ஆம் வருட மாணவிகள் ஹபாயா அணிவதை தடை செய்துள்ளார்.

இது சம்பந்தமாக 27.10.16 திகதியிடப்பட்ட ஒரு கடிதத்தையும் அவர்  பாடசாலைகளுக்கு அனுப்பியிருந்தார்.இது சம்பந்தமான செய்தி ....11. 2016 ஆம் திகதி மடவாளை வெப்தளத்தில் பிரசுரமானது.

அதனைத்தொடர்ந்து அதற்குரிய நடவடிக்கையை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரம் வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சருமான கெளரவ ரிசாத் பதியுதீன் முன்னேடுத்துக்கொண்டிருந்ததாக அறிய முடிந்தது. 

இந்த வேளையில் இடையில் குறுக்கிட்ட மேல்மாகாண சபை உறுப்பினரும் பேருவளை தொகுதி ஐக்கிய தேசிய கட்சி அமைப்பாளருமான இப்திகார் ஜமீல் மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பேருவளை பிரதேச சபை உறுப்பினர் பதியுதீன் ஆகியோர் இணைந்து இப்பிரச்சினையை தீர்த்துவிட்டதாகவும் கல்லூரி பீடாதிபதி ஹபாயா தடையை நீக்கி விட்டதாகவும் .....11.2016 ஆம் திகதி மடவாளை வெப்தளத்தில் செய்தி பிரசுரமானது.

இது இப்படி இருக்க கல்லூரி பீடாதிபதி தான் ஹபாய தடையை நீக்கவில்லை என்றும் தனது முடிவில் தான் உறுதியாக இருப்பதாகவும் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

மேலும் மடவளை வெப்தளம் செய்தியை திரிபுபடுத்தி வெளியிட்டுள்ளதாகவும் மடவாளை குழுமத்துக்கு குற்றம் சுமத்தி கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

தமது அரசியல் இலாபத்துக்காக தமது கட்சி ஆட்சியிலுள்ள இக்காலத்தில் நடக்கும் இனவாதத்தை மறைத்து தமது சமூகத்தை விற்று அரசியல் செய்யும் தர்கா நகர் அரசியல் வியாபாரிகளே  ஊடகத்தின் மீதும் இந்த குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தாங்கள் பிரச்சினையை தீர்த்துவிட்டதாக ஊடகங்களுக்கு அறிக்கை விட்டு எமது சமூகத்தின் உரிமைகளை பறிக்கும் சுயநல அரசியல்வாதிகளே! 

உங்கள் சுய நலன்களை விட்டுவிட்டு கட்சிக்கும் உங்கள் சுய நலன்களுக்கும் முன்பதாக சமூகத்தை முற்படுத்துங்கள்.

இது இப்படி இருக்க 23.11.2016 ஆம் திகதி தர்கா நகர் கல்வியியற் கல்லூரி ஆசிரியர் குழாத்திலிருந்து ஒரு சிலர் சில பாடசாலைகளுக்கு சென்று தமது மாணவிகள் சாரி அணிந்துள்ளார்களா  என்று கண்கானித்துள்ளதுடன் அங்கு ஹபாயா அணிந்திருந்த மாணவிகளை மிரட்டியுள்ளார்கள்.இதன் பின்னர் ஹபாயா அணிந்திருந்தாள் உங்களுக்கு கல்லூரியிலிருந்து பட்டம் வழங்கி வெளியாக்க மாட்டோம் என்றும் அச்சுருத்தியுள்ளர்கள்.

ஆம் இந்த ஆசிரியர் குலாத்திளிருந்த ஆசிரியர்கள் யார்? வேற்று மதத்தை சார்ந்தவர்களா? இல்லை......தர்கா நகரில் பெயர் போன உலமாவாக தன்னை தானே போற்றிக்ககும் ஊருக்கு நல்லவர் போல் ஊமையாக நடித்துக்கொண்டிருக்கும் தர்கா நகர் பெண்கள் பாடசாலை அபிவிருத்தி குழு செயலாளராக சாஹிராக் கல்லூரி ஆசிரியராக இருந்து பாடசாலைகளை சின்னாபின்னமாக்கியதனால் இரு பாடசாலைகளிலிருந்தும் ஊர் மக்களால் வெளியேற்றப்பட்ட ....ஆசிரியரின் தங்கை ..... ஆசிரியை ஆகியோரே இவர்கள்.

இவர்கள் ஏன் முஸ்லிமாக இருந்துகொண்டு இஸ்லாமிய கலாசாரத்தை எதிர்க்கிறார்கள்?ஒரு சாரியின் விலை 2500 ரூபாய். இந்த சாரிகளை மாணவியர்களுக்கு விற்பனை செய்து இலாபமடைந்து கொள்ளை சம்பாத்தியம் செய்து வாழ்பவர்கள் தான் இவர்கள்.இவர்களுக்கு பின்னால் சமூகத்தை விற்று அரசியல் இலாபமடையும் அரசியல் வாதிகளும் உள்ளார்கள் போலும்.

ஓ அரசியல்வாதிகளே! ஆசிரியர்களே! அல்லாஹ்வையும் மறுமையையும் பயந்து கொள்ளுங்கள்.இந்த உலக அற்ப சொற்ப இலாபத்துக்காக முழு முஸ்லிம் சமூகத்தையும் அடகு வைக்காதீர்கள்.

தர்கா நகர் ஊர்வாசிகளே! சமூகத் தலைமைகளே! உலமாக்களே! பெரியார்களே! விழித்தெழுங்கள்.

ஊரிலும் பிரதேசத்திலும் இருந்துகொண்டு சமூகத்தை விற்று அரசியால் இலாபமடையும் அரசியல் வாதிகளை நம்பியிருக்காது இவற்றைத் தீர்க்கக் கூடிய  சமூக நலன் படைத்த சமூகத்துக்காக குரல் கொடுக்கும் அரசியல்வாதிகளும் இவற்றை தீர்த்து சமூக உரிமையை பாதுகாத்துக்கொள்வோம்.

--ஸிப்ரான் முஹம்மத் --
தர்கா நகர் ஊர்வாசிகளே! சமூகத் தலைமைகளே! உலமாக்களே! பெரியார்களே! விழித்தெழுங்கள். தர்கா நகர் ஊர்வாசிகளே! சமூகத் தலைமைகளே! உலமாக்களே! பெரியார்களே! விழித்தெழுங்கள். Reviewed by Madawala News on 11/24/2016 11:15:00 PM Rating: 5