Accaddemy

காழ்புணர்சியின் வெளிப்பாடே தென்னிந்திய நகைசுசுவை நடிகர் வடிவேல் போல் பேச வைத்துள்ளது...


தன்னை ஒவ்வொரு முறையும் வெற்றி பெற வைக்கும் கண்டி மாவடட மக்களுக்கு அமைச்சர் ஹக்கீம் செய்துள்ள சேவைகளையும், அபிவிருத்தியையும் உதாரணம் காட்ட கல்லறையில் உள்ள பல நகைசுசுவை நடிகர்களை எழுப்பி வர வேண்டி வரும்.

தனது அரசியல் கையாலாகாத்தனத்தை மறைப்பதற்கும், நமது சமூகத்திற்கான எந்த உரிமைகளையும் பெற்றுத் தராமல் தனது சுயநலத்திற்குச் சோரம் போன அரசியல் வரலாறுகளை மட்டுமே கடந்த 16 வருடங்களாக எமது சமூகத்தை அடகு வைத்து அரசியல் செய்யும் அமைச்சர் ஹக்கீம் கடந்த புத்தளத்து மண்ணில் அநாகரிகமான வார்த்தை பிரயோகத்தை பயன்படுத்தி தென்னிந்திய நகைசுசுவை நடிகர் ஒருவருக்கு ஒப்பிடுள்ளது அவரை அந்த நடிகரை போல் உள்ளதை முஸ்லீம் காங்கிரஸ் போராளிகள் இன்னும் உணராமல் உள்ளது தான் வேடிக்கையாக உள்ளது.

தலைவர் மாமனிதர் அஷ்ரப் மரணிக்கும் போது 11 பாராளுமன்ற உறுப்பினர்களும், 20 மாகாண சபை உறுப்பினர்களும், 180 க்கும் மேற்படட உள்ளுராட்சி சபை உறுப்பினர்களையும் விட்டுச சென்ற கடசியை பல கூறுகளாக பிரித்து தனது சுக போக வாழ்க்கைக்கு மாத்திரம் அரசியல் நடாத்தும் அமைசசர் ஹக்கீமுக்கு 1990ம் ஆண்டு 24 மணித்தியாலத்துக்குள் விடுதலை புலிகளால் விரட்டியடிக்கப்பட ஒரு சமூகத்தில் வெறும் ஒரு சொப்பிங்க் பேக்குடன் வந்து தனது அயராத மக்கள் சேவையால் இன்று 5 பாராளமன்ற உறுப்பினர்களை கொண்டு பல தொழில் வாய்ப்புக்கள், பாரிய அபிவிருத்தி வேலைத் திட்டங்களை முன்னெடுக்கும் கெளரவ அமைச்சர் ரிஸாடின் வளர்ச்சியில் ஏற்படட காழ்புணர் சியின் வெளிப்பாடே தென்னிந்திய நகைசுசுவை நடிகர் வடிவேல் போல் பேச வைத்துள்ளது.

தனக்கு வாக்களித்த தன்னை ஒவ்வொரு முறையும் வெற்றி பெற வைக்கும் கண்டி மாவடட மக்களுக்கு அமைசர் ஹக்கீம் செய்துள்ள சேவைகளையும், அபிவிருத்தியையும் உதாரணம் காட்ட கல்லறையில் உள்ள பல நகைசுசுவை நடிகர்களை எழுப்பி வர வேண்டி வரும்.

கடந்த அரசாங்கத்தின் முஸ்லிகளுக்கு எதிரான வன்முறைகள், அண்மையில் அம்பாறை மண்ணில் சிலைவைப்பு பிரச்சினைக்கெதிராக வார்த்தையும் பேச நாதியற்ற இவருடைய மழுப்பல் அரசியலுக்கு என்ன வென்று குறிப்பிடுவது

தனது தேர்தல் வெற்றியே மாத்திரம் நோக்ககக் கொண்டு அரசியல் இவருக்கு கண்டியில் 2001ம் ஆண்டு 10 இளைஞ்சர்களை பலி கொடுத்து தான் வெற்றி பெற்றது நினைவில் ஆவது இருக்கிறதா???

அமைச்சர் ரிஷாட் மீதான பயமும்,தனது அரசியல் வாழ்வுக்கு சவாலாக உருவாகியுள்ளார் என்பதுவே அமைச்சர் ஹக்கீமை புத்தளம் மண்ணில் உளற வைத்துள்ளது என்பதை யாரும் உணராமல் இல்லை.

கடந்த தேர்தலில் கண்டி மாவட்ட மக்களின் தெரிவில்லாத தெரிவின் மூலமே கெளரவ அமைச்சர் ரவூப் ஹக்கீமுக்கு வெற்றி பெற முடிந்தது என்பது இங்கு குறிப்பிடப் பட வேண்டிய ஒரு விடயம்.

ஐ. தே க சார்பாக இரு வேட்ப்பாளர்களை களமிறக்கப்படார்கள்.100,000 அதிகமான முஸ்லீம் வாக்குளை கொண்ட கொண்ட கண்டி மாவடடத்தில் மிகப் பெரும்பான்மை முஸ்லீம் வாக்குகள் ஐ. தே க அளிக்கப்பட்ட்தால் மூன்றாவது விருப்பு வாக்கின் மூலமே இவர் தெரிவு செய்யப்படடார் அன்றி இவருக்குள்ள தனிப்படட செல்வாக்கின் காரணம் அல்ல.
காழ்புணர்சியின் வெளிப்பாடே தென்னிந்திய நகைசுசுவை நடிகர் வடிவேல் போல் பேச வைத்துள்ளது... காழ்புணர்சியின் வெளிப்பாடே தென்னிந்திய நகைசுசுவை நடிகர் வடிவேல் போல் பேச வைத்துள்ளது... Reviewed by Madawala News on 11/13/2016 04:55:00 PM Rating: 5