இனவாத செயற்பாட்டாளர்களுக்கு எதிரான கடும் சட்ட நடவடிக்கைகளை எதிர்வரும் வாரங்களுக்குள் கண்டுகொள்ளமுடியும்...


இனவாத நடவடிக்கைகளை முன்னெடுப்பவர்களுக்கு எதிராக சட்டம் மிக கடுமையாக  தன் கடமையை செய்யும் எனவும் அதனை எதிர்வரும் வாரங்களில் மக்கள் தெளிவாக  கண்டுகொள்ள முடியும் எனவும் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ் எம் மரிக்கார் குறிப்பிட்டார்.

நாட்டில் தற்போது மீண்டும் தலைதூக்கியுள்ள இனவாத நடவடிக்கைகளுக்கு அரச தரப்பு முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன என நாம் அவரிடம் வினவிய போது அதற்கு பதில் அளித்த அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர் ..

உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உள்ள முஸ்லீங்கள் நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என எங்களிடம் கடுமையான  முறையில்  கேள்விகளை தொடுக்கிறார்கள். இன்று மாலை அகில இலங்கை ஜம்மியதுல் உலமா எம்மை கலந்துரையாடலுக்கு அழைத்துள்ளது. அங்கு போய் பொம்மை போல தலையாட்டி விட்டு எமக்கு வரமுடியாது.நாம் எடுத்த நடவடிக்கைகள் தொடர்பில் அவர்களுக்கு பதில் அளிக்க வேண்டும்.மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு நாம் பதில் அளிக்க முடியாமல் உள்ளது என இன்று ( திங்கள் ) பாராளுமன்றத்தில் பிரதமர் மற்றும் சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சரிடமும்  என்ற எனது ஆதங்கத்தை வெளியிட்டேன்.

அதற்கு பிரதமர் மற்றும் அமைச்சர் சாகல தரப்பில் இருந்து சாதகமான பதில் கிடைத்தது .அந்த பதில் சொல்லுன் அர்த்தத்தை எதிர்வரும் வாரங்களில் அனைவரும் கண்டுகொள்ள முடியும் என அவர் திட்டவட்டமாக குறிப்பிட்டார்.

நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்‌ஷவின் கருத்து தொடர்பில் நாம் வினவியபோது ..

அவருக்கு வாக்களித்த மஹரகம கெஸ்பேவ மக்களை திருப்திபடுத்தும் நோக்கில் அவர் சில திரிபுபடுத்தப்பட்ட தகவல்களை  வெளியிட்டுள்ளார்..

நான் இந்த விடயம் தொடர்பில் நேரடியாக பிரதமரிடம் விளக்கம் அளித்துள்ளேன். நாங்கள் முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டாக அரசிடம் எங்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிடார்.
இனவாத செயற்பாட்டாளர்களுக்கு எதிரான கடும் சட்ட நடவடிக்கைகளை எதிர்வரும் வாரங்களுக்குள் கண்டுகொள்ளமுடியும்... இனவாத செயற்பாட்டாளர்களுக்கு எதிரான  கடும் சட்ட நடவடிக்கைகளை எதிர்வரும் வாரங்களுக்குள் கண்டுகொள்ளமுடியும்... Reviewed by Madawala News on 11/21/2016 02:00:00 PM Rating: 5