வீடியோ இணைப்பு... கோழிக்கூட்டில் தாய் அடைக்கப்பட்டாரா? உண்மையில் நடந்தது என்ன? விபரம் இதோ..



அனஸ் அப்பாஸ் -

கல்கமுவ குடாவெவ நோக்கிய எனது பயணம்!

கடந்த வாரத்தில் சமூகதளங்களிலும், டீக்கடைகளிலும், டீ.வியிலும், பத்திரிகைகளிலும், மிம்பர்களிலும்கூட இத்தாய் பற்றியே பேச்சு! கோழிக்கூட்டில்.. இறைவன் மன்னிக்க வேண்டும். அநியாயம் இழைக்கப்பட்டவரின் பிரார்த்தனை இறைவனிடத்தில் அங்கீகரிக்கப்பட எவ்வளவு நேரமெடுக்கும்? 


கல்கமுவை, குடாவெவ பிரதேச முஸ்லிம் தாயொருவர், தனது வயதுமுதிர்ந்த தாயை கோழிக்கூட்டில் வைத்து வளர்த்ததாக கூறி குறிப்பாக பெரும்பான்மை இன ஊடகங்களால் சர்ச்சை ஒன்று உருவாக்கப்பட்டு, அது தமிழ் மொழிமூலமான ஊடகங்களும் மொழிமாற்றம் செய்து சமூகத்தில் பெரும் அசௌகரியத்தை விதைத்திருந்தது. பொறுப்புவாய்ந்த எமது பணிகளால் சமூகத்துக்கு நலவே அன்றி கெடுதி இடம்பெற நாம் இடமளிக்க முடியாது. உண்மையை அறிய நேரில் சென்றேன். 

அது ஒரு இட்டுக் கட்டப்பட்ட பொய் என்பதாக அப்பிரதேச மக்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் என்னிடம் தெளிவுபடுத்தினர். 

இறுதியாக கண்களில் ஈரம்தோய்ந்தவாறு என்னை முத்தமிட்ட (ஊடகங்களால் அநியாயமிழைக்கப்பட்ட) கணவனை இழந்து கூலி தொழில் செய்யும் இந்த வறிய பெண்மணிக்கு என்னால் முடிந்த உதவி என்னவெனில் உலகுக்கு உண்மையை எடுத்துரைப்பதே! 

முழுமையாக தகவல் பெற ஒத்துழைப்பு நல்கிய உடன்பிறவா சகோதரர்களான ரஸீன் மற்றும் இர்பான் ஆகியோரை எந்த வார்த்தைகளால் நன்றி பகர்வதென்று நான் அறியேன். அவர்களின் உடல், உள ஆரோக்கியத்திற்காக பிரார்த்திப்பீர்களா?

பிற்குறிப்பு - இதனுடன் தொடர்புடைய செய்தியை எமது இணையமும் பிரசுரித்திருந்தது.
தற்போது அந்த செய்தி நீக்கப்பட்டுள்ளது. குறித்த அந்த தாயிடமும், அவர்களின் குடும்பத்தினரிடமும் பகிரங்க மன்னிப்பு கேட்கிறோம். அல்லாஹ்வுக்காக எங்களை மன்னித்துக் கொள்ளுங்கள்..!

முழு விவரண வீடியோ 

வீடியோ இணைப்பு... கோழிக்கூட்டில் தாய் அடைக்கப்பட்டாரா? உண்மையில் நடந்தது என்ன? விபரம் இதோ..  வீடியோ இணைப்பு... கோழிக்கூட்டில் தாய் அடைக்கப்பட்டாரா? உண்மையில் நடந்தது என்ன?  விபரம் இதோ.. Reviewed by Madawala News on 11/04/2016 06:47:00 AM Rating: 5