Ad Space Available here

பெளத்த -முஸ்லீம் இன முரண்பாடே இன்றைய ஆதிக்க சக்திகளின் தேவை.

கடந்த ஆட்சி மாற்றம் நிகழ்கின்ற போது வெகுவாக பேசப்பட்ட பெளத்த மேலாதிக்க செயற்பாடுகளுக்கு எதிராக முஸ்லீம்கள் கிளர்ந்தெழுந்து கிட்டத்தட்ட நூறு சதவீத முஸ்லிம் களின் பங்களிப்புகளுடன் ஆட்சி மாற்றம் நிகழ்ந்தது ஆனால் அதன் காட்சிகள் மாறவில்லை.

ஆட்சி மாற்றத்தை உருவாக்க காரணமாக இதன் பின்புலமாக திகழ்ந்த சக்திகள் தங்களது அடைவுகளை அடைந்து கொள்ள முஸ்லீம்களை ஒரு வகையான இன ரீதியான எதிர்ப்பு கோசங்களுக்கு கொண்டு சென்றார்களே ஒழிய அவர்களுக்கான பிரச்சினை தொடர்பில் கரிசனை எடுத்துக் கொள்ளவில்லை.

தம்புள்ளை பள்ளிவாசல் பேருவளை சம்பவம்
உட்பட கடந்த ஆட்சி காலத்தில் இடம் பெற்ற எந்த வொரு இன ரீதியான செயற்பாடுகளுக்கும் இதுவரை முடிவுகளோ காணப்பட முடியாத சூழலில் மக்களாக முன் வந்து திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட இச் செயற்பாட்டு கெதிராக ஆட்சி மாற்றத்தை கோரிய போது தங்களின் சுயநல அரசியலுக்காக மொத்த சமுகத்தையும் அடமானம் வைத்த தலைவர்கள் அந்நிய சக்திகளின் பாதங்களில் வழிபடலாயினர்
அதன் பின்னர் சிறு சிறு பள்ளிகள் தொடர்பான அசம்பாவிதங்கள் நடந்த போதும் தெஹிவளை பள்ளிவாசல் ராஜகிரிய பள்ளி போன்றவை தொடர்பிலும் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை.

இப்போது இஸ்லாமிய சட்டங்களில் மாற்றம் கொண்டுவர இந்த அரசாங்கம் முனைவதையும் நாம் கருத்தில் கொள்ளவில்லை ஜனாதிபதிக்கு தெரியாமல் பைத்துல்முகத்திஸ் விவகாரத்தில் பலஸ்தீனதிற்க்கு எதிராக முஸ்லீம் விரோத நடவடிக்கை மேற்கொண்ட இந்த அரசின் உண்மை முகம் அதையும் சோரம் போன கிழக்கு முதலமைச்சரை போன்று அலட்டிக் கொள்ளவில்லை.

இன்று முஸ்லீம்களை பெரும்பான்மை கொண்ட கிழக்கு மாகாணத்தில் இறக்காமத்தில் சிங்கள அமைச்சருடைய அனுசரனையில் நீதிமன்ற தடையை மீறி சிலை வைக்கப்பட்டிருக்கிறது.

இலங்கை பொலிசார் அதற்கு பாதுகாப்பும் வழங்கி சென்றனர் மகிந்த ராஜபக்சவுக்கு சுமார் கிழக்கு மாகாணத்தில்உள்ள முஸ்லீம்களின் 80000 என்பதாயிரத்திற்க்கு உட்பட்ட முஸ்லிம்கள் வாக்களித்து

நுரைச்சோலை வீட்டுத்திட்டை மீட்டு கேட்டீர்கள் வட்டமடு காணியை மீளக் கோரினர் கரும்பு செய்கையாளர்களின் பிரச்சினையை தீர்க வேண்டினீர்
அஷ்ரப் நகர் மக்களின் காணியை மீட்க வேண்டினீர் ஒலுவில் துறைமுக அபகரிப்பு காணிகளுக்கு மாற்றுக்காணி என்பனவாகும். 

ஆனால் அனைத்து வாக்குகளையும் அரசுக்கு வழங்கி இரண்டு ஆண்டுகள் உங்களுக்கு நடந்த மாற்றம்
ஏதாவது ஒன்றை பெற்றுக் கொண்டீரா?


சம்பிக்க ரணவக்க என்கின்ற இஸ்லாமிய விரோதியை ஆட்சியில் வைத்துக்கொண்டு எதை நீங்கள் பெற்றுக் கொள்ள போகிறீர்களா?

சிங்கள முஸ்லீம் இன முரண்பாட்டு சூழலை தோற்றுவித்து கிழக்கை சிங்கள பேரினவாதம் கையிலெடுக்க போகிறதன கூறி வடக்கு கிழக்கை இணைப்பதற்கான மறைமுக  வேலொத்திட்டமாக இதை கருதினால் என்ன?

சர்வதேசமும் டயஸ்போராவும் தான் விரும்புகின்ற மாதிரிக்கு இந்த நாட்டை மாற்றி அமைக்க முயல்வதையும் ரணிலின் அரசு கடந்த கால எமக்கெதிரன முஸ்லிம் விரோத போக்கை பாரட்டி சீராட்டி அடக்கத்துடன் நடந்து கொள்ளும் என இன்றைய முஸ்லிம் உம்மாவை யாரும் கவனத்தில் கொள்ளாமல் விட வேண்டாம்.

பெளத்த -முஸ்லீம் இன முரண்பாடே இன்றைய ஆதிக்க சக்திகளின் தேவை. பெளத்த -முஸ்லீம் இன முரண்பாடே இன்றைய ஆதிக்க சக்திகளின் தேவை. Reviewed by Madawala News on 11/01/2016 10:52:00 PM Rating: 5